மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நேர் போட்டியாளரை களமிறக்கும் பீஜோ!

By Saravana Rajan

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ கார் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கார் விற்பனையை துவங்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளது.

 மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நேர் போட்டியாளரை களமிறக்கும் பீஜோ!

இந்த நிலையில், இந்தியாவில் புத்தம் புதிய ஹேட்ச்பேக் கார் மாடலை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக எக்கானமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

 மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நேர் போட்டியாளரை களமிறக்கும் பீஜோ!

இந்த புதிய கார் sc21 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. மாருதி ஸ்விஃப்ட் காருக்கு நேர் போட்டியாக இருக்கும் வகையிலான சிறப்பம்சங்களுடன் இந்த கார் வர இருக்கிறது.

 மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நேர் போட்டியாளரை களமிறக்கும் பீஜோ!

இந்த புதிய ஹேட்ச்பேக் காருகக்கு மதர்சன் சுமி, யுனோ மிண்டா, ஸ்பார்க் மிண்டா மற்றும் ரானே குழுமம் போன்ற பிரபலமான நிறுவனங்களிடமிருந்து உதிரிபாகங்களை சப்ளை பெறுவதற்கும் பீஜோ முடிவு செய்துள்ளது.

 மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நேர் போட்டியாளரை களமிறக்கும் பீஜோ!

4 லட்சம் கார்களை உற்பத்தி செய்வதற்கான உதிரிபாகங்களை வழங்குவதற்காக மேற்கண்ட சப்ளையர்களுடன் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

Recommended Video

[Malayalam] Datsun rediGO Gold 1.0-Litre Launched In India - DriveSpark
 மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நேர் போட்டியாளரை களமிறக்கும் பீஜோ!

சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் இந்த புதிய காரை உற்பத்தி செய்யும் திட்டமும் அந்த நிறுவனம் வைத்துள்ளது. புதிய ஆலை அமைப்பதற்குள் இந்த ஆலையை பயன்படுத்தி ஒரு லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் பீஜோ திட்டமிட்டுள்ளது.

 மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நேர் போட்டியாளரை களமிறக்கும் பீஜோ!

இந்த புதிய ஹேட்ச்பேக் கார் தவிர்த்து, எஸ்யூவி மாடல் ஒன்றையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பீஜோ திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இந்திய கார் சந்தையில் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகிறது.

 மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நேர் போட்டியாளரை களமிறக்கும் பீஜோ!

வெளிநாடுகளில் 208 என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் காரை பீஜோ விற்பனை செய்து வருகிறது. இந்த காரையே SC21 என்ற பெயரில் இந்திய சாலைநிலைகள் மற்றும் தட்பவெப்பத்திற்கு தக்கவாறு மாறுதல் செய்து அறிமுகம் செய்ய பீஜோ திட்டமிட்டு இருக்கிறது.

 மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நேர் போட்டியாளரை களமிறக்கும் பீஜோ!

இந்த கார் மாருதி ஸ்விஃப்ட்டுக்கு சரிநிகர் சமமாக நின்று மோதும். சந்தைப் போட்டி மிக அதிகம் உள்ள இந்த செக்மென்ட்டில் பீஜோ எந்தளவு தாக்குப் பிடிக்கிறது என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Most Read Articles
மேலும்... #பீஜோ #peugeot #welcome 2018
English summary
ETAuto reports that Peugeot will launch its first hatchback in 2020 which will rival the Maruti Swift in the Indian market. The upcoming car has been internally codenamed as SC21.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X