கார்களுக்கான புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்கள்: பயனீர் அறிமுகம்!

Written By:

கார்களுக்கான புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்களை பயனீர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனங்கள் பயனீர் இசட் வரிசையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

கார்களுக்கான புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்: பயனீர் அறிமுகம்!

பயனீர் நிறுவனத்தின் புதிய இசட் வரிசை இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்கள் ஏவிஎச்-இசட்7050பிடி, ஏவிஎச்- இசட்5090பிடி, ஏவிஎச் - இசட்2090பிடி மற்றும் ஏவிஎச்- இசட்1090டிவிடி ஆகிய நான்கு மாடல்களில் கிடைக்கும். இவற்றின் தொடுதிரையும், ஒலி தரமும் உயர்வாக இருக்கும் என்று பயனீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்களுக்கான புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்: பயனீர் அறிமுகம்!

ஏவிஎச்- இசட்5090பிடி மாடல் ரூ.29,990 விலையில் கிடைக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். ஆப்ரேடியோமோடு+, ஆஃப்லைனில் மேப் மை இந்தியா நேவிகேஷனை பெறும் வசதிகள் உள்ளன.

கார்களுக்கான புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்: பயனீர் அறிமுகம்!

இந்த சாதனத்தில் உயர்துல்லிய தரத்தில் வீடியோவை வழங்கும் 7 அங்குல தொடுதிரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தானியங்கி முறையில் ஸ்மார்ட்போன்களை இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

கார்களுக்கான புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்: பயனீர் அறிமுகம்!

புதிய இசட் வரிசை சாதனங்களை எளிதாக இயக்கும் வகையில் யூஸர் இன்டர்ஃபேஸ் இருக்கிறது. போர்ட்டபிள் ஹார்டு டிரைவை இணைத்து உயர் துல்லிய வீடியோக்களையும் பார்க்கலாம்.

கார்களுக்கான புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்: பயனீர் அறிமுகம்!

ஏவிஎச்- இசட் 7050பிடி, ஏவிஎச்- இசட்2090பிடி மற்றும் ஏவிஎச் - இசட்1090பிடி ஆகிய மாடல்கள் முறையே ரூ.44,990, ரூ.24,990 மற்றும் ரூ.21,990 ஆகிய விலையில் கிடைக்கும். இந்த மாடல்களிலும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது.

கார்களுக்கான புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்: பயனீர் அறிமுகம்!

உயர்தர வீடியோக்களை சப்போர்ட் செய்யும் வசதி, மேப் மை இந்தியா நேவிகேஷன் வசதிகளும், இதர பொழுதுபோக்கு வசதிகளையும் இவற்றின் மூலமாக பெறலாம். பயனீர் நிறுவனத்தின் இந்த இசட் வரிசை சாதனங்களில் 24பிட் ட்ரூ கலர் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மிகச் சிறப்பான தரத்தில் வீடியோக்களை காண முடியும்.

கார்களுக்கான புதிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம்: பயனீர் அறிமுகம்!

இந்த புதிய வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாதனங்கள் குறித்து பயனீர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் மினோரு ஒகாவா கூறுகையில்," இந்த புதிய இசட் வரிசை சாதனங்களை அறிமுகம் செய்வதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். இந்த சாதனங்கள் பிரிமியம் ரகத்தில் மிக தோதான விலையில் வந்துள்ளதால், எங்களது வாடிக்கையாளர் தளம் விரிவாகும் என நம்புகிறோம்," என்று கூறினார்.

English summary
Pioneer India Electronics has launched its Z series premium in-car entertainment system under the touchscreen car stereo segment.
Story first published: Wednesday, August 30, 2017, 13:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark