மொத்தமுள்ள 991 போர்ஷே 911-ஆர் கார்களில் ஒன்றை வாங்கிய ஒரே இந்தியர்!

Written By:

ஸ்போர்ட்ஸ் மற்றும் எஸ்யுவி ரக கார்கள் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் ஜெர்மன் நிறுவனமான போர்ஷே, 911ஆர் என்ற மாடலின் லிமிடெட் எடிசன் கார்களை தயாரித்து வெளியிட்டது. மிகவும் விலையுயர்ந்த மாடலான போர்ஷே911ஆர் கார்கள் மொத்தமே 991 என்ற எண்ணிக்கையில் தான் தயாரிக்கப்பட்டது. இதில் ஒன்றை இந்தியாவை சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார்.

இந்தியாவின் ஒரே அரிதான போர்ஷே911-ஆர் கார் இதுதான்!

பெங்களூரில் உள்ள போர்ஷேசெண்டருக்கு இந்த அரிய ரக கார் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. போர்ஷே கார்கள் மீது மோகம் கொண்ட ஒரு இந்தியர் அந்நிறுவன கார்களை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர். இந்த விலையுயர்ந்த 911ஆர் கார் அவருக்காகவே இந்தியா வந்துள்ளது.

இந்தியாவின் ஒரே அரிதான போர்ஷே911-ஆர் கார் இதுதான்!

பந்தய கார்களில் உள்ள சிறப்பம்சங்களை கொண்டதாக இந்த 911ஆர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லிமிடெட் எடிசன் காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 4 லிட்டர் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 500 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எஞ்சின் இதுவாகும்.

இந்தியாவின் ஒரே அரிதான போர்ஷே911-ஆர் கார் இதுதான்!

மற்ற கார்களில் உள்ளதைப் போன்று இல்லாமல், இதில் பின்புற ஆக்ஸில் ஸ்டீரிங் உள்ளது. இக்காரின் சிறப்பம்சமே இதன் ரைடிங் தான், அதிக வேகத்தில் சென்றால் கூட இதனை இலகுவாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.

இந்தியாவின் ஒரே அரிதான போர்ஷே911-ஆர் கார் இதுதான்!

போர்ஷே911ஆர் கார், 911ஜிடி3 ஸ்போர்ட்ஸ் காரில் பயன்படுத்தப்படும் இலகுரக மெட்டீரியல்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. கார் பந்தயங்களின் போது அதிவேகம் தேவைப்படுவதால் இம்மாதிரியான மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன. ஆயினும் சாலைகளில் செல்வதற்கு ஏற்றவாறு இதனை மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்பது விஷேசம்.

இந்தியாவின் ஒரே அரிதான போர்ஷே911-ஆர் கார் இதுதான்!

இக்காரின் ‘பானெட்' மற்றும் பின்புற பகுதிகள் கார்பன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, காரின் மேற்பகுதியான ரூஃப், ‘மெக்னீசியம்' கொண்டும், பக்கவாட்டு ஜன்னல்கள் மற்றும் ரியர் விண்ட் ஸ்கிரீன் ஆகியவை குறைவான எடை கொண்ட பிளாஸ்டிக் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளன. இக்காரின் மொத்த எடை 1,370 கிலோவாகும்.

இந்தியாவின் ஒரே அரிதான போர்ஷே911-ஆர் கார் இதுதான்!

போர்ஷே911ஆர் காரில், முன்பக்கம் கார்பன் பக்கெட் சீட்களும், 360 மிமீ முத்திரை பதிப்பான ‘ஆர்' ஸ்டீரிங் வீல் மற்றும் சிறிய கியர் ஷிஃப்ட் லீவர் உள்ளது. லிமிடட் எடிசன் என்பதை குறிக்கும் அலுமினியம் பேட்ச், முன்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒரே அரிதான போர்ஷே911-ஆர் கார் இதுதான்!

இக்காரின் வருகை குறித்து கருத்து தெரிவித்த போர்ஷேஇந்தியா நிறுவனத்தின் இயக்குனர் பவன் ஷெட்டி, "இக்காரினை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதால் சிலிர்ப்படைக்கிறோம், எங்களுடைய மதிப்புமிகு வாடிக்கையாளர் ஒருவர் மட்டுமே, இக்காரை சொந்தமாக்கும் ஒரே இந்தியர் ஆவார்" என்றார்.

இந்தியாவின் ஒரே அரிதான போர்ஷே911-ஆர் கார் இதுதான்!

உலகப்புகழ்மிக்க இக்காரை இந்திய சாலைகளில் ஓட்டிச் செல்லும் ஒரே நபராக எங்கள் வாடிக்கையாளார் விளங்கப்போகிறார் என்றும், மதிப்புமிக்க போர்ஷேநிறுவனத்தின் முத்தாய்ப்பான மாடலாக விளங்கும் ‘911-ஆர்' கார், ஸ்போர்ட்ஸ் காரின் வடிவமைப்பாகும்" என்றார்.

இந்தியாவின் ஒரே அரிதான போர்ஷே911-ஆர் கார் இதுதான்!

இக்காரின் விலை பற்றியும் , அதன் உரிமையாளர் பற்றியும் போர்ஷேநிறுவனம் வெளிப்படுத்தவில்லை. என்றாலும் போர்ஷேகார்கள் குறைந்தபட்சமாகவே ஒரு கோடி ரூபாய் என்ற விலையில் தான் இந்தியாவில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ஷே அறிமுகப்படுத்திய புதிய 911 ஆர்எஸ்ஆர் லீமன்ஸ் காரின் படங்கள்: 

English summary
The limited edition Porsche 911 R has arrived in India with exterior design components borrowed from its GT3 counterpart.
Story first published: Saturday, February 25, 2017, 10:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark