விற்பனையில் போர்ஷே கார்களுக்கு அதிகரிக்கும் மவுசு

Written By: Azhagar

வோக்ஸ்வேகன் நிறுவனத்தை பொருத்தவரை 2016ம் ஆண்டு லாபகரமாகவே அமைந்துள்ளது. குறிப்பாக போர்ஷே கார்களின் விற்பனையில் அந்நிறுவனம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.

ஃபெராரிக்கு போட்டி போர்ஷேவா?

கடந்தாண்டில் மட்டும் ஆடம்பரமான 2,38,000 போர்ஷே கார்களை வோக்ஸ்வேன் விற்றுள்ளது. இதன்மூலம் அந்நிறுவனத்திற்கு கிடைத்த வருமானம் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2015ம் ஆண்டை விட 2016ம் ஆண்டில் போர்ஷே கார் விற்பனை வோக்ஸ்வேகனின் வியாபார வட்டத்தை 14 % சதவீதமாக பெருக்கியுள்ளது.

ஃபெராரிக்கு போட்டி போர்ஷேவா?

வோக்ஸ்வேகனின் இந்த நிதி நிலையை வைத்து பார்க்கும்போது, ஒவ்வொரு போர்ஷே கார் விற்பனையான போதும், அதன்மூலம் வோக்ஸ்வேகன் 17,250 அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.12 லட்சம்.

ஃபெராரிக்கு போட்டி போர்ஷேவா?

இந்த கணக்குகளை வைத்து பார்க்கும்போது, கார் விற்பனையில் தனக்கு போட்டியாக உள்ள பி.எம்.டபுள்யூ மற்றும் டெய்மலர் ஆகிய நிறுவனங்களை விட, தனது ஒவ்வொரு கார் மூலம் வோக்ஸ்வேகன் 5000 அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளது, இந்திய மதிப்பில் தோரயமாக ரூ.3.26 லட்சமாகும்.

ஃபெராரிக்கு போட்டி போர்ஷேவா?

போர்ஷே கார் விற்பனையில் வோக்ஸ்வேகன் லாபம் ஈட்ட அமைந்த ஒரே காரணம், உற்பத்தி திறனை அதிகரித்தது தான். 2016க்கு முந்தைய மூன்று ஆண்டுகளை விட, கடந்தாண்டில் மட்டும் போர்ஷே கார் உற்பத்தியை 47% அதிகரித்திருந்தது வோக்ஸ்வேகன். இது பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் உற்பத்தி திறனை விட 10 மடங்கு அதிகம்.

ஃபெராரிக்கு போட்டி போர்ஷேவா?

போர்ஷே கார் விற்பனை அதிகரித்துள்ளது என்றால், ஃபெராரி கார்களின் விற்பனையும் மார்கெட்டில் உச்சத்தில் இருக்கிறது என்று அர்த்தம். ஃபெராரியை விரும்புவோர் பலரின் 2வது விருப்பத்தேர்வாக போர்ஷே கார்கள் இருக்கும் என்பதே இந்த நிலைக்கு காரணம்.

ஃபெராரிக்கு போட்டி போர்ஷேவா?

தனது ஒரு கார் விற்பனையின் மூலம் ஃபெராரி நிறுவனம் ஈட்டும் வருமானம் 90,000 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.58 லட்சம். இந்த லாபத்தை ஃபெராரி நிறுவனம் தயாரித்த 8000 கார்கள் மூலம் பெற்றுள்ளது.

ஃபெராரிக்கு போட்டி போர்ஷேவா?

கார் விற்பனை, உற்பத்தியை தவிர ஃபெராரி மேலும் 30% வருமானத்தை பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் துணைக்கருவிகள்,எஞ்சின்கள் விற்பனையின் மூலம் பெற்றுள்ளது.

ஃபெராரி நிறுவனத்தின் புதிய 812 சூப்பர்ஃபாஸ்ட் காரின் புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.

English summary
Porsche's operating profits per car is $17,250 (approx. Rs 12 lakh), while Ferrari makes $90,000 (approx. Rs 58 lakh).
Story first published: Wednesday, March 22, 2017, 11:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark