சிங்கிள் சார்ஜில் 1,773 கிமீ தூரம் பயணித்து சாதித்த புதிய எலக்ட்ரிக் பஸ்!

அமெரிக்காவை சேர்ந்த புரொடெர்ரா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல் அதிக தூரம் பயணிப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

By Saravana Rajan

பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்ளாததற்கு, பேட்டரி திறனை பயன்படுத்தி அந்த வாகனம் பயணிக்கும் தூரம் மிக குறைவாக இருப்பதும் முக்கிய காரணம். தற்போது அதிக தூரம் பயணிக்கும் திறனை வழங்கும் நவீன பேட்டரிகளை வாகனங்களுக்கு உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

 சிங்கிள் சார்ஜில் 1,773 கிமீ தூரம் பயணித்து வாய் பிளக்க வைத்த எலக்ட்ரிக் பஸ்!

அதில், வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் நிறுவனமாக அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா கார் நிறுவனம் விளங்குகிறது. தற்போது மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் பலவும் டெஸ்லா கார்களை பெஞ்ச்மார்க்காக வைத்தே உருவாக்கப்பட்டு வருகின்றன, டெஸ்லா கார்கள் அதிகபட்சமாக 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் பெற்றவையாக இருக்கின்றன.

 சிங்கிள் சார்ஜில் 1,773 கிமீ தூரம் பயணித்து வாய் பிளக்க வைத்த எலக்ட்ரிக் பஸ்!

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த புரொடெர்ரா என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் கேட்டலிஸ்ட் இ2 மேக்ஸ் என்ற பஸ், சிங்கிள் சார்ஜில் 1,773 கிமீ தூரம் பயணித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

 சிங்கிள் சார்ஜில் 1,773 கிமீ தூரம் பயணித்து வாய் பிளக்க வைத்த எலக்ட்ரிக் பஸ்!

இதுபோன்ற கனரக வாகனங்கள் வணிக ரீதியில் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது ரேஞ்ச் எனப்படும் பேட்டரி திறனில் பயணிக்கும் தூரம்தான். ஆனால், இந்த பஸ்சின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டபோதுதான் மேற்கண்ட தூரம் பயணித்து அசத்தி இருக்கிறது.

 சிங்கிள் சார்ஜில் 1,773 கிமீ தூரம் பயணித்து வாய் பிளக்க வைத்த எலக்ட்ரிக் பஸ்!

அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள நேவிஸ்டார் புரோவிங் கிரவுண்ட்ஸ் என்ற வளாகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது, இந்த பஸ் குறிப்பிட்ட வேகத்தில் தொடர்ந்து இயக்கப்பட்டது. முடிவில் சிங்கிளில் சார்ஜில் இந்த பஸ் 1,772.2 கிமீ தூரம் பயணித்து புதிய சாதனை படைத்தது.

Recommended Video

Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
 சிங்கிள் சார்ஜில் 1,773 கிமீ தூரம் பயணித்து வாய் பிளக்க வைத்த எலக்ட்ரிக் பஸ்!

40 மீட்டர் நீளமுடைய இந்த பஸ்சில் 660 kWh திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. மிக சக்திவாய்ந்த டெஸ்லா மாடல் எஸ் பி100டி காரில் கூட 100 kWh பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இந்த கார் 506 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று டெஸ்லா கூறுகிறது. ஆனால், மிக திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்ட இந்த கனரக பஸ் 1,773 கிமீ பயணித்திருப்பது ஆட்டோமொபைல் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

 சிங்கிள் சார்ஜில் 1,773 கிமீ தூரம் பயணித்து வாய் பிளக்க வைத்த எலக்ட்ரிக் பஸ்!

பொது போக்குவரத்திற்கு உகந்த இதுபோன்ற கனரக மின்சார வாகனங்கள் இந்தளவு சோதனை ஓட்டத்தில் பயணித்திருப்பது, வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத தரும் வாய்ப்புகளை உருவாக்கி தரும்.

 சிங்கிள் சார்ஜில் 1,773 கிமீ தூரம் பயணித்து வாய் பிளக்க வைத்த எலக்ட்ரிக் பஸ்!

இயக்குதல் செலவும், பராமரிப்பு செலவும் வெகுவாக குறையும். கட்டணங்களும் மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பை இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல் உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சிங்கிள் சார்ஜில் 1,773 கிமீ தூரம் பயணித்து வாய் பிளக்க வைத்த எலக்ட்ரிக் பஸ்!

இதே நிறுவனம் விற்பனை செய்யும் 35 அடி நீளமுடைய எலக்ட்ரிக் பஸ் மாடல் சிங்கிள் சார்ஜில் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் வாய்ந்தது. மேலும், பேட்டரியை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 56 கிமீ தூரம் வரை பயணிக்கும். நகர்ப்புறத்தில் இயக்குவதற்கு மிகச் சிறப்பானதாக இருக்கும்.

Most Read Articles
English summary
Proterra’selectric bus can go 1,772 kms on single charge.
Story first published: Tuesday, September 26, 2017, 17:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X