கேப்டூர் எஸ்யூவி காரை விளம்பரப்படுத்த பிரபல நடிகரை வளைத்துப்போட்ட ரெனால்ட்..!!

Written By:

பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கேப்டூர் எஸ்யூவி காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது ரெனால்ட்.

இந்தியாவில் இந்த காரை விளம்பரப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை ரெனால்ட் எடுத்து வருகிறது.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

அதில் முதற்கட்டமாக கேப்டூர் எஸ்யூவி-க்காக படமாக்கப்பட்ட விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், தோன்றுவது பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

5 இருக்கைகள் கொண்ட ரெனால்ட் கேப்டூர் கார், பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

பெட்ரோல் மாடல் கேப்டூர் கார் ரூ. 9.99 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் கேப்டூர் காரின் ஹை-வேரியன்ட் மாடல் ரூ.13.88 லட்சம் விலையிலும் கிடைக்கின்றன.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

இந்தியாவிற்கு ஏற்ற வகையில் தயாராகியுள்ள கேப்டூர் கார், டஸ்டர் மாடல் உருவாக்கப்பட்ட பி0 பிளாட்ஃபாரமின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
[Tamil] Tata Nexon Review: Specs
பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

மேலும் டஸ்டர் காரில் இருக்கும் அதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேவைகளை தான் காம்பேக்ட் எஸ்யூவி கேப்டூர் மாடலும் பெற்றிருக்கிறது.

இந்தியாவிற்கு கேப்டூர் மாடல் புதியது என்றாலும், சர்வதேச அளவில் சில நாடுகளில் ஏற்கனவே கேப்டூர் விற்பனையில் உள்ளது.

அதன்காரணமாக சர்வதேச மாடலின் வடிவம் மற்றும் செயல்பாட்டை அப்படியே இந்தியாவின் கேப்டூர் கார் பெற்றிருக்கிறது.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

கேப்டூர் காரின் பெட்ரொல் மாடல் 1.5 லிட்டர் எஞ்சினை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிகப்பட்சமாக 105 பிஎச்பி பவர் மற்றும் 142 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பெற்றுள்ள கேப்டூர் மாடல் 119 பிஎச்பி பவர் மற்றும் 240என்.எம் டார்க் திறனை வழங்கும்.

பெட்ரோல் எஞ்சின் கார் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸையும் மற்றும் டீசல் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேவையையும் பெற்றிருக்கிறது.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

இதுதவிர ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவையோடு கேப்டூர் காரை வெளியிட ரெனால்ட் முயன்று வருகிறது. அதற்கான வெளியீடு 2018ல் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

இந்திய சந்தைகளில் ஆட்டோமேட்டிக் எஸ்யூவி கார்களின் விற்பனை அமோகமாக உள்ளதால், பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவைக்கு மாற்ற கட்டாயம் எழுந்துள்ளது.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

முன்பக்க வீல் இயக்கத்தை தற்போதைக்கு பெற்றுள்ள கேப்டூர் கார், விரைவில் ஆல்-வீல் டிரைவிங் திறனிலும் வெளிவரலாம் என்று தெரிகிறது.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

அதற்கான ஃபிளாட்ஃபாரமும் பயன்படும் என்பது கூடுதல் சந்தோஷம். மேலும் இந்த காரில் ஏபிஎஸ், டூயல்-ஃபிரெண்டு ஏர்பேகுகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

பிரபல நடிகரால் அடையாளம் பெறும் ரெனால்ட் கேப்டூர் கார்..!!

கிராஸ்ஓவர் ஸ்டைலில் உள்ள புதிய ரெனால்ட் கேப்டூர் கார், இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மர்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Read in Tamil: Ranbir Kapoor Promotes The New Renault Captur SUV. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark