ரூ.2.79 கோடி விலையில் ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி டைனமிக் கார் இந்தியாவில் ரூ. 2.79 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

ஜாகுவார் லேண்ட் ரோவோரின் பிரத்யேக வாகன தயாரிப்பு குழுவினர் (SVO) இந்த புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி டைனமிக் காரை வடிவமைத்துள்ளனர்.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

ஆடம்பர உள்கட்டமைப்பு மற்றும் தனித்துவமான வடிவமைப்பால் அசரவைக்கும் தொழில்நுட்பத்தோடு தயாராகியுள்ளது ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார்.

Recommended Video - Watch Now!
Range Rover SVAutobiography Dynamic launched in India - DriveSpark
ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

5.0 லிட்டர் திறன் பெற்ற வி8 சூப்பர் சார்ஜிடு பெட்ரோல் எஞ்சின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 543 பிஎச்பி பவர் மற்றும் 625 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

அதிக செயல்திறன் மூலம் மிரட்டும் இந்த காரின் சூப்பர்சார்ஜிடு எஞ்சின் நான்கு சக்கரங்களையும் ஒருங்கே இயக்கும் திறன் பெற்ற 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

வி8 பெட்ரோல் எஞ்சின் கொண்ட ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி டைனமிக் கார் 5.4 விநாடிகளில் துவக்க நிலையில் இருந்து 100 கிலோ மீட்டரை எட்டும் திறன் பெற்றது.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

நாட்டின் சட்ட திட்டங்களை ஏற்று இந்த கார் இந்தியாவில் அதிகப்பட்சமாக ஒரு மணி நேரத்தில் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி. ஆட்டோபையோகிராபி டிசைன் காரில் ரெட் பிரம்போ கேளிபர்களுடன் கூடிய கிராஃபைட் அட்லஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

காரின் அலாய் சக்கரங்களில் இடம்பெற்றுள்ள 5 ஸ்பிலிட்-ஸ்போர் அம்சங்கள் காருக்கான ஒரு டைனமிக் தோற்றத்தை தருகிறது.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

ஒரு ஸ்போர்டி தோற்றத்துடன் கார் இருக்க வேண்டும் என, காரின் மேற்பாகம் மற்றும் கண்ணாடிகள் கருப்பு நிறத்தில் உள்ளன. பின்பகுதியில் குவாட் டைல்பைப்புகள் இடம்பெற்றுள்ளன.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

காரின் உள்கட்டமைப்புகள், நான்கு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளை சிவப்பு நிறம் இடம்பிடிக்க, அதற்கு ஏற்றவாறான கிராண்ட் பிளாக் நிறம் உள்கட்டமைப்பில் காண்ட்ராஸ்டாக அமைகிறது.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

10 அங்குல தொடைதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்மெண்ட் சிஸ்டம், குளிர்சான வசதி பெட்டி மற்றும் பின் இருக்கைகளிலும் உள்ள எல்.இ.டி திரைகளை இயக்க கன்சோல் என சகல வசதிகள் இதில் உள்ளன.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

ஜாகுவாரின் பிரத்யேக வாகன தயாரிப்பு குழு முன்னர் உருவாக்கிய ரேஞ்ச்ரோவர் எஸ்.வி. ஆட்டோபையோகிராஃபி, ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்.வி.ஆர் மற்றும், ஜாகுவார் எஃப்-டைப் எஸ்.வி.ஆர் கார்களை தொடர்ந்து நான்காவது மாடலாக புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்.வி. ஆட்டோபையோகிராபி டைனமிக்கை உருவாக்கியுள்ளது.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

புதியதாக அறிமுகமாகியுள்ள இந்த காரை குறித்து பேசிய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோஹித் சூரி,

"ரேஞ்ச்ரோவர் எஸ்.வி ஆட்டோபையோகிராஃபி டைனமிக் மாடலை இந்தியாவில் வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். ஆட்டோமொபைல் துறையில் சாதிக்க துடிக்கும் (SVO) குழுவால் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது".

"செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் அனுபவம் என அனைத்து செயல்பாடுகளிலும் புதுமையை வழங்க இந்த கார் வாடிக்கையாளர்களுக்காக தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ள புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்வி ஆட்டோபையோகிராஃபி டைனமிக் கார் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி 63 ஏஎம்ஜி உடன் போட்டி போட உள்ளது.

ரேஞ்ச்ரோவர் எஸ்.வி.ஆட்டோபையோகிராஃபி கார் விற்பனைக்கு வந்தது

ஆடம்பரம் மற்றும் சொகுசான பல வசதிகளுடன் தயாராகியுள்ள ரேஞ்ச்ரோவர் டைனமிக் கார் செயல் திறன் மற்றும் கட்டமைப்புகளிலும் தனித்துவம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

English summary
Read in Tamil: Range Rover SVAutobiography Dynamic launched in India, Click for Price, Specifications, Mileage and More...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark