புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தும் லேண்ட்ரோவர் நிறுவனம்!!

Written By:

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான பிராண்டு ரேஞ்ச்ரோவர். இந்த பிராண்டில் ஏற்கனவே மூன்று உயர்வகை எஸ்யூவி மாடல்களை லேண்ட்ரோவர் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், ரேஞ்ச்ரோவர் பிராண்டில் புதிதாக 4-வது மாடலையும் லேண்ட்ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எஸ்யூவி பற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தும் லேண்ட்ரோவர் நிறுவனம்!!

அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய ரேஞ்ச்ரோவர் வரிசை எஸ்யூவி மாடலை லேண்ட்ரோவர் கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. ரேஞ்ச்ரோவர் விலர் என்ற பெயரில் இந்த புதிய மாடல் மார்க்கெட்டிற்கு வருகிறது.

புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தும் லேண்ட்ரோவர் நிறுவனம்!!

இப்போது இந்த எஸ்யூவியின் டிசைன் அம்சங்களை காட்டும் விதத்திலான ஒரு படத்தை டீசராக வெளியிட்டு இருக்கிறது லேண்ட்ரோவர். ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்கள் அடிப்படையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தும் லேண்ட்ரோவர் நிறுவனம்!!

புதிய எஸ்யூவி மாடலில் பனரோமிக் சன்ரூஃப், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற்று இருப்பதும் தெரிய வருகிறது. ஷோல்டர் லைன் மூன்று பக்கத்திலும் மிக நேர்த்தியாக செல்லும் வகையில் வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தும் லேண்ட்ரோவர் நிறுவனம்!!

ரேஞ்ச்ரோவர் பிராண்டில் ரேஞ்ச்ரோவர் எவோக், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஆகிய மூன்று எஸ்யூவி மாடல்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. இதில், எவோக் குறைந்த விலை மாடலாகவும், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் நடுத்தர விலை மாடலாகவும், ரேஞ்ச்ரோவர் அதிக விலை கொண்ட மாடலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தும் லேண்ட்ரோவர் நிறுவனம்!!

இந்த நிலையில், புதிய ரேஞ்ச்ரோவர் விலர் எஸ்யூவி மாடல் எவோக் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பிற ரேஞ்ச்ரோவர் மாடல்களை போன்றே, அனைத்து சாலை நிலைகளுக்கும் ஏற்ற அம்சங்களையும், ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களையும் பெற்றிருக்கும் என நம்பலாம்.

புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தும் லேண்ட்ரோவர் நிறுவனம்!!

போர்ஷே மசான் எஸ்யூவிக்கு நேர் போட்டியாக இந்த புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் இருக்கும். வடிவமைப்பு, வசதிகளில் பிற ரேஞ்ச்ரோவர் மாடல்களை காட்டிலும் மிகச் சிறப்பாகவும், விலையில் சரியான தேர்வாக அமையும் என்று கார் பிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Land Rover has revealed the fourth model in the Range Rover lineup which will debut at the Geneva Motor Show in March.
Story first published: Wednesday, February 22, 2017, 17:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark