புதிதாக அறிமுகமாகியுள்ள ரேஞ்ரோவர் வெலர் கார்!

ரேஞ்ச்ரோவர் வரிசையில் புதிய வெலர் காரை அறிமுகப்படுத்தியது லேண்ட்ரோவர் நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

டாடா நிறுவனத்தின் துணை நிறுவனமாக விளங்கும் 'ஜாகுவார் லேண்ட்ரோவர்' நிறுவனம் எஸ்யுவி கார்கள் தயாரிப்பில் உலகின் முன்னணியில் உள்ளது. ரேஞ்ச்ரோவர் பிராண்டின் நான்காவது மாடலான 'வெலர்' காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் கார் அறிமுகம்!

லேண்ட்ரோவர் நிறுவனத்தை நிர்வகிக்கும் டாடா குரூப்ஸ் நிறுவனர் ரத்தன் டாடா இந்த ‘வெலர்' காரை இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தினார். இந்த புதிய எஸ்யுவியானது ரேஞ்ச்ரோவர் லைன் அப்பில் உள்ள எவோக், ஸ்போர்ட், ஜாகுவார் எஃப்-பேஸ் ஆகிய மாடல்களுக்கு அடுத்ததாக அறிமுகமாகியுள்ளது.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் கார் அறிமுகம்!

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் கார்கள் இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் என 4 இஞ்சின் ஆப்சன்களுடன் கிடைக்கிறது. இந்த அனைத்துமே 8 ஸ்பீடு ஆட்டொமெடிக் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் கார் அறிமுகம்!

பேஸ் பெட்ரோல் வேரியண்ட்டில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இஞ்சீனியம் பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

இது அதிகபட்சமாக 247பிஹச்பி ஆற்றலையும் 365 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதன் பவர்ஃபுல் வேரியண்ட் அதிகபட்சமாக 296 பிஹச்பி ஆற்றலையும் 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் கார் அறிமுகம்!

இதே போல டீசல் வேரியண்டில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 178 பிஹச்பி ஆற்றலையும் 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. பவர்புல் வேரியண்ட் அதிகபட்சமாக 237 பிஹச்பி ஆற்றலையும் 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் கார் அறிமுகம்!

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் மாடலில் 3.0 லிட்டர் டர்போ வி6 டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 296 பிஹச்பி ஆற்றலையும், 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் டர்போசார்ஜ்டு அல்லாத இஞ்சின் ஆகும். இது 60கிமீ வேகத்தை 5.3 நொடிகளில் தொட்டுவிடும்.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் கார் அறிமுகம்!

புதிய வெலர் 4,640 மிமீ உயரமும், 4,803மிமீ நீளமும் கொண்டதாகும், ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட்டை விட 50 மிமீ மட்டுமே நீளத்தில் சிறியதாகும்.

இதன் முகப்பு மற்றும் பின்புற விளாக்குகள் எவோக் மாடலின் வழித்தோன்றலாகும்.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் கார் அறிமுகம்!

முற்றிலும் புதிய டிசைன் கொண்ட ரேஞ்ச்ரோவர் வெலரின் மேற்கூரை பெரிதாக உள்ளது. அகண்ட உட்புறம் கொண்ட இதன் டேஷ்போர்டில் 3 டிஸ்பிளே ஸ்கிரீன்கள் உள்ளன.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் கார் அறிமுகம்!

புதிதாக அறிமுகமாகியுள்ள ரேஞ்ச்ரோவர் வெலருக்கு புக்கிங் தொடங்கிவிட்டது. வரும் ஜூலை மாதம் முதல் இந்த எஸ்யுவிக்கள் டெலிவரி செய்யப்படும் என தெரிகிறது.

புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் கார் அறிமுகம்!

இக்கார்கள் பிஎண்டபிள்யூ எக்ஸ்5, ஆடி க்யூ7 / ஏ6 ஆல்ரோடு, மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்இ கிளாஸ் கூப் மற்றும் வால்வோ எக்ஸ்சி90/ வி90 4*4 கண்ட்ரி மாடல்களுக்கு கடும் போட்டியாக விளங்கும்.

லேண்ட்ரோவர் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் காரின் படங்கள்:

Most Read Articles
English summary
Land Rover has unveiled the latest addition to its lineup in the form of the Velar, which sits between the Evoque and the Range Rover Sport.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X