ஹூண்டாய் கிரெட்டா, ஜீப் காம்பஸ் கார்களை ஓரம்கட்ட நாளை வருகிறது ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி கார்..!!

Written By:

இந்தியாவிற்கான ரெனலாட் கேப்டூர் எஸ்யூவி கார் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் அதற்கான புக்கிங் வரும் 22ம் தேதி முதல் தொடங்குகிறது.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

கிவிட் ஹேட்ச்பேக் மற்றும் டஸ்ட்டர் எஸ்யூவி போன்ற கார் மாடல்களால் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ரெனால்ட் உயரிய அந்தஸ்தில் உள்ளது. இதை தக்கவைத்துக்கொள்ள அந்நிறுவனம் அடுத்து அறிமுகப்படுத்த உள்ள மாடல் தான் கேப்டூர் கார்.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

எஸ்யூவி ரக காரான இது, பல மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் டெஸ்ட் டிரைவில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளிவந்து பரப்பரப்பை கூட்டியது.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

இந்த காரை ரெனலாட் நிறுவனம் இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிட்டுள்ள கேப்டூர் (Kaptur) மாடலை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

டஸ்டரில் காரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தான் இந்த காரிலும் உள்ளது. அதன்மூலம் 106பிஎச்பி பவர் மற்றும் 142 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

மேலும் மற்றொரு தேர்வாக டீசல் திறனிலும் கேப்டூர் கார் இந்தியாவில் வெளிவருகிறது. அது 1.5 லிட்டர் டீசல் திறன் கொண்ட எஞ்சினை பெற்றிருக்கும்.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

இதன் மூலம் 110 பிஎச்பி பவர் மற்றும் 245 என்,எம் டார்க் திறன் கிடைக்கும். எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு கேப்டூர் காரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

இவை தவிர ரெனால்ட் நிறுவனம், டீசல் மற்றும் பெட்ரோல் தேர்வுகளில் கேப்டூர் மாடல் காரில் ஆல் வீல் டிரைவிங் வேரியண்டையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

காரின் வெளிப்புற கட்டமைப்பில் பகல் நேரத்திலும் எரியும் எல்.இ.டி விளக்குகள், எல்.இ.டி ஹெட்லேம் மற்றும் டெயில் விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

உள்கட்டமைப்பில் 7.0 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என இருவேறு தேவைகளிலும் இயங்கும்.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

2,673மிமீ வீல் பேஸ் கொண்ட இந்த காரின் சைடு பக்கத்தில் 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் உள்ளன.

387 லிட்டர் கொள்ளவு கொண்ட காரின் பூட் வசதியை மேலும் அதிகரிக்க, பின் இருக்கைகளை நகரத்தினால் 1,200 லிட்டர் வரை விரிவடையும்.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

கேப்டூர் எஸ்யூவி கார் கிராஸ்ஓவர் மாடலாகும். உதிரிபாகங்களும் இதற்காக உற்பத்தி செய்யப்படும் என தெரிகிறது.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

ஹூண்டாய் கிரெட்டா, ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 500 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் களமிறங்கும் இந்த காருக்கு ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.17 லட்சத்திற்குள் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தும் ரெனால்ட்டின் கேப்டூர் எஸ்யூவி கார்!

நாளை அறிமுகம் செய்யப்பட்டு, வரும் 22ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் ரெனால்ட் நிறுவனத்தின் கேப்டூர் கார், அக்டோபரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Read in Tamil: Renault Captur SUV bookings Open from 22nd September Sale will go on October. Click for Details...
Story first published: Wednesday, September 20, 2017, 17:45 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark