விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர் போஸ் எடிசன்- விபரம்!

இசை பிரியர்களை கவரும் விதத்தில் உயர்தர ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்ட விசேஷமான ரெனோ கேப்ச்சர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றிருக்கிறது. இதன் ரகத்தில் அதிக வசதிகள் கொண்ட மாடலாகவும் இருக்கிறது.

விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர் போஸ் எடிசன்- விபரம்!

இந்த நிலையில், இசை பிரியர்களை கவரும் விதத்தில், புதிய ரெனோ கேப்ச்சர் மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர் போஸ் எடிசன்- விபரம்!

ரெனோ கேப்ச்சர் போஸ் எடிசன் என்ற பெயரில் புதிய மாடல் வர இருக்கிறது. இதன்படி, கார் ஆடியோ சிஸ்டம் தயாரிப்பில் புகழ்வாய்ந்த, போஸ் ஆடியோ சிஸ்டத்துடன் ரெனோ கேப்ச்சர் போஸ் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர் போஸ் எடிசன்- விபரம்!

மிக உயர்துல்லிய இசையை வழங்கும் ஆடியோ சிஸ்டம் மற்றும் அதற்கான பிரத்யேக சாதனங்களுடன் இந்த மாடல் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த போஸ் எடிசன் மாடல் விற்பனைக்கு வரும் என்பது தகவல்.

விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர் போஸ் எடிசன்- விபரம்!

தற்போது ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் 7 அங்கு தொடுதிரை கொண்ட அர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. இதுதவிர, ஏராளமான சிறப்பு வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது.

Recommended Video

2018 Renault Duster Revealed - DriveSpark
விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர் போஸ் எடிசன்- விபரம்!

இந்த கார் 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 110 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர் போஸ் எடிசன்- விபரம்!

பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போதைக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. அடுத்த ஆண்டு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர் போஸ் எடிசன்- விபரம்!

ரூ.10 லட்சம் முதல் ரூ.14.06 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி விற்பனைக்கு கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேர் போட்டியாளராக இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault India is reportedly working on a new 'Bose Edition' of the newly launched Captur SUV. The Renault Captur Bose Edition, as the name suggests, features Bose's high-quality audio system.
Story first published: Saturday, December 16, 2017, 12:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X