மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போட்டியாளராக களமிறங்கும் ரெனோ கேப்டர்!

Written By:

டஸ்ட்டர் மூலமாக கிடைத்த மிகப்பெரிய அடையாளத்தை வைத்துக் கொண்டு இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்த ரெனோ கார் நிறுவனம் அடுத்து கேப்டர் என்ற க்ராஸ்ஓவர் ரக காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் குறித்த சில தகவல்களை ரெனோ இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுமித் ஷானி தெரிவித்துள்ளார். அதன் விபரங்களை காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போட்டியாளராக களமிறங்கும் ரெனோ கேப்டர்!

டஸ்ட்டர் எஸ்யூவியைவிட கூடுதலான விலையில் புதிய கேப்டர் காரை அறிமுகம் செய்ய இருப்பது சுமித் ஷானி தகவலின்படி உறுதியாகி இருக்கிறது. இந்த கார் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் அண்மையில் அறிமுகமான ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடல்களை நேரடி போட்டியை தரும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போட்டியாளராக களமிறங்கும் ரெனோ கேப்டர்!

சென்னையில் உள்ள ஆலையில்தான் புதிய ரெனோ கேப்டர் கார் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. மேலும், டஸ்ட்டரைவிட அதிக பிரிமியம் வசதிகளும், அம்சங்களும் நிறைந்ததாக கேப்டர் இருக்கும் என்று சுமித் தெரிவித்துள்ளார்.

Recommended Video
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போட்டியாளராக களமிறங்கும் ரெனோ கேப்டர்!

ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் அதே சிறப்பம்சங்கள் கொண்ட மாடல்தான் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருப்பதாகவும் சுமித் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் கேப்டர் கார் மாடல் ரெனோ க்ளியோ காரின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்திய மாடலில் டஸ்ட்டர் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போட்டியாளராக களமிறங்கும் ரெனோ கேப்டர்!

டஸ்ட்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் 102 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். டீசல் மாடலானது 83 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாகவும், 108 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாகவும் இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போட்டியாளராக களமிறங்கும் ரெனோ கேப்டர்!

புதிய ரெனோ கேப்டர் எஸ்யூவி ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களில் வரும் வாய்ப்புள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் முதலில் வரும். பின்னர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போட்டியாளராக களமிறங்கும் ரெனோ கேப்டர்!

வரும் அக்டோபர் மாதத்தில் இந்த புதிய ரெனோ கேப்டர் க்ராஸ்ஓவர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போட்டியாளராக களமிறங்கும் ரெனோ கேப்டர்!

டஸ்ட்டரை போல மிரட்டலாக இல்லாமல் இது மென்மையான க்ராஸ்ஓவர் டிசைனில் வர இருக்கிறது. எனவே, இந்தியர்களிடம் எந்தளவு வரவேற்பை பெறும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Source: Livemint

மேலும்... #ரெனோ #renault
English summary
Renault India CEO, Sumit Sawhney has revealed a bit of detail about the upcoming Renault Captur SUV regarding its positioning in the Indian market. The Captur will take on the Mahindra XUV500 head on.
Story first published: Saturday, September 2, 2017, 15:28 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos