க்ராஷ் டெஸ்ட்டில் ஜமாய்த்த இந்தியா வரும் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி!

லத்தீன் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் ரெனோ கேப்டர் எஸ்யூவி சிறப்பான மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

By Saravana Rajan

லத்தீன் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் புதிய ரெனோ கேப்டர் எஸ்யூவி சிறப்பான மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

க்ராஷ் டெஸ்ட்டில் ஜமாய்த்த இந்தியா வரும் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி!

லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான என்சிஏபி அமைப்பு புதிய ரெனோ கேப்டுர் எஸ்யூவியின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் விதத்தில், அண்மையில் மோதல் சோதனை நடத்தியது.

க்ராஷ் டெஸ்ட்டில் ஜமாய்த்த இந்தியா வரும் புதிய ரெனோ கேப்டுர் எஸ்யூவி!

இந்த க்ராஷ் டெஸ்ட்டின் ஆய்வு முடிவுகளில் ரெனோ கேப்டுர் எஸ்யூவி சிறப்பான மதிப்பீட்டை பெற்றிருக்கிறது. 4 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் மற்றும் ப்ரிடென்ஷனர் வசதியுடன் கூடிய சீட் பெல்ட்டுகள் பொருத்தப்பட்ட மாடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

க்ராஷ் டெஸ்ட்டில் ஜமாய்த்த இந்தியா வரும் புதிய ரெனோ கேப்டுர் எஸ்யூவி!

இதில், பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் அதிகபட்சமான 34 புள்ளிகளுக்கு 30.27 புள்ளிகளை பெற்றது. சிறியவர்களுக்கான பாதுபாப்பு அம்சத்தில் அதிகபட்சமான 49 புள்ளிகளுக்கு 33.68 புள்ளிகளை பெற்றது. அதாவது, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் அதிகபட்சமான 5க்கு 4 என்ற நட்சத்திர மதிப்பீட்டையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றிருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் ஜமாய்த்த இந்தியா வரும் புதிய ரெனோ கேப்டுர் எஸ்யூவி!

மேலும், மோதல் ஏற்படும் பட்சத்தில் பயணிகளின் கழுத்து மற்றும் தலைப் பகுதிக்கு அதிக பாதுகாப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகளின் மார்பு பகுதிக்கும் அதிக பாதுகாப்பு கிடைத்தது. அதேநேரத்தில், ஓட்டுனர் மார்பு பகுதி பாதுகாப்பு போதிய அளவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் ஜமாய்த்த இந்தியா வரும் புதிய ரெனோ கேப்டுர் எஸ்யூவி!

டஸ்ட்டர் எஸ்யூவி இந்தியாவில் பெரிய அளவிலான வரவேற்பை துவக்க காலத்தில் பெற்றதுடன், ரெனோ பிராண்டுக்கு இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவிலான இடத்தை பெற்று தந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக இந்த புதிய ரெனோ கேப்டுர் எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது ரெனோ கார் நிறுவனம்.

க்ராஷ் டெஸ்ட்டில் ஜமாய்த்த இந்தியா வரும் புதிய ரெனோ கேப்டுர் எஸ்யூவி!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியை விட பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது ரெனோ கேப்டுர். இது க்ராஸ்ஓவர் ரக மாடலாக வருவதால் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நிலைநிறுத்த ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் ஜமாய்த்த இந்தியா வரும் புதிய ரெனோ கேப்டுர் எஸ்யூவி!

இந்த க்ராஸ்ஓவர் கார் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெறும். தவிரவும், 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் ஜமாய்த்த இந்தியா வரும் புதிய ரெனோ கேப்டுர் எஸ்யூவி!

இந்த புதிய ரெனோ கேப்டுர் கார் ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் டாடா ஹெக்ஸா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
The India-bound Renault Captur (Kaptur) crossover scored 4-star rating for adult protection and a 3-star rating for child occupant protection conducted by Latin NCAP recently.
Story first published: Saturday, June 10, 2017, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X