தயாராகுங்கள்... 2017 இறுதியில் உலக நாடுகளை கலக்கிய ரெனால்ட் கேப்டூர் கார் இந்தியா வருகிறது...!!

Written By:

சர்வதேச அளவில் வரவேற்பு பெற்ற ரெனால்ட் நிறுவனத்தின் கேப்டூர் எஸ்.யூ.வி கார் 2017-ன் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

இதை உறுதிப்படுத்தும் வகையில் ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் வெளியிடும் கேப்டூர் காருக்கான டீசர் புகைப்படங்களை வெளியிட்டு பரபரக்க வைத்துள்ளது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

எஸ்.யூ.வி ரக கார்களை பொறுத்த வரை ரெனால்ட் நிறுவனத்தின் பெயர் சொல்லும் பிள்ளையாக இருப்பது டஸ்டர்.

ஆனால் கிராஸ்ஓவர் செக்மெண்டில் வரும் கேப்டூர் மாடல் கார், டஸ்டருக்கு மேல் ப்ரீமியம் தரம் கொண்டது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

ரெனால்ட்டின் பாரம்பரிய முகப்பு பகுதியை கொண்டுள்ள கேப்டூர் மாடல் காரில் எல்.இ.டி ஹேட்லேம்ப்ஸ், ஆங்கில சி-எழுத்து வடிவிலான பகலில் எரியும் எல்.இ.டி விளக்குகள்.

Recommended Video
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

காரின் முகப்பு தோற்றத்திற்கு மிரட்டும் வலிமையை தர கருப்பு நிறத்திலான இணைப்பு ஒன்று முகப்பு விளக்குகள் மற்றும் கீழ் பகுதிக்கு இடையில் கொடுக்கப்பட்டுள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவேறு தேவைகளிலும் இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

பெட்ரோல் மாடல் காரின் மூலம் சுமார் 102 பிஎச்பி பவர் கிடைக்கும் என்றும், அதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாஸ் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

அதேபோல டீசல் மாடலில் இரண்டு வேரியண்டுகள் உள்ளன. அதில் ஒன்று 83.8பிஎச்பி பவர் வழங்கும் திறன் பெற்றது. மற்றொன்று 108 பிஎச்பி பவரை தரும்.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

இதில் மாடல்களுக்கு ஏற்றவாறு டீசல் காரின் எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் கேப்டூர் மாடல் கார் ஃபிரெண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இருவேறு தேர்வுகளுடன் வெளியிட உள்ளது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

அதேபோல தயாரிப்பு நிலையிலோ அல்லது எதிர்காலத்திலோ, சிவிடி, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கேப்டூர் காரில் இடம்பெற வாய்ப்பும் உள்ளது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

தொழில்நுட்பம் வெளிப்புறத்தோற்றம் என்றில்லாமல், உள்கட்டமைப்புகளிலும் சில நவீன வசதிகளை கேப்டூர் மாடல் பெற்றிருகிறது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

அனைத்து வித கனெக்ட்டிவிட்டி தேர்வுகளுடன் கூடிய 7-இஞ்ச் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும் அதில் கிளைமேட்டிக் கன்ட்ரோலும் இடம்பெறும்.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

இந்தியாவில் கேப்டூர் காரை வெளியிடுவது தொடர்பாக பேசிய ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுமித் சுவாஹ்னெ,

"ப்ரீமியம் தரத்தில் கேப்டூர் நமது நாட்டில் வெளிவருவது மகிழ்ச்சி. சர்வதேச அளவில் மிக வரவேற்பு பெற்ற இந்த மாடலை இந்தியாவிலும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

உலகளவில் மொத்தம் 10 லட்சம் கேப்டூர் எஸ்.யூ.வி மாடல் கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக ரெனால்ட் நிறுவம் தெரிவிக்கிறது.

ஆனால் இந்தியாவில் இந்திய வாடிக்கையாளர்களின் தேர்வுகளை கருதியே இந்த கார் தயாரிக்கப்படுகிறது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

இந்தியாவில் மற்ற தயாரிப்புகளில் இருந்து கேப்டூர் காரை தனித்துக்காட்ட ரெனால்ட் பல்வேறு கஸ்டமைஸ் தேர்வுகளையும் தருவதாக கூறியுள்ளது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

ஆரம்பமே அசத்தலாக அமைந்துள்ள இந்த காருக்கு இந்தியாவில் இதுவரை 300 டீலர்கள் கிடைத்துள்ளனர். இதனால் தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு இந்த கார் வேகத்தை கூட்டியுள்ளது.

இதன் மூலம் கேப்டூர் எஸ்.யூ.வி காருக்கான புதிய வாடிக்கையாளர்கள் நிறையபேர் வரலாம் என ரெனால்ட் கருதுகிறது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

இந்தியாவில் எஸ்.யூ.வி ரக கார்களுக்கான விற்பனை உச்சத்தை அடைந்துள்ளது. அதை மேலும் வலிமையாக்கவே தற்போது ரெனால்ட் கேப்டூர் காரை அறிமுகப்படுத்துகிறது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

அறிவிப்பின் வாயிலாகவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய ரெனால்ட் எஸ்.யூ.வி கார் ஹூண்டாய் கிரெட்டா, ஜீப் காம்பஸ்,

விரைவில் வெளிவரவுள்ள நிஸான் கிக்ஸ் போன்ற கார்களுக்கு செயல்திறன் மற்றும் தோற்றத்தில் கடும் போட்டியை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Read in Tamil: French carmaker Renault has officially confirmed that the Captur SUV will be launched in the Indian market in 2017
Story first published: Tuesday, August 29, 2017, 11:22 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos