மிக மிக சவாலான விலையில் புதிய ரெனோ கேப்டூர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை பார்க்கலாம்.

By Saravana Rajan

புத்தம் புதிய ரெனோ கேப்டூர் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய ரெனோ கேப்டூர் கார் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மாடல்களில் வந்துள்ளது. இந்த எஸ்யூவி 3 பெட்ரோல் வேரியண்ட்டுகளிலும், 4 டீசல் வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். பிளான்டீன் என்ற விலை உயர்ந்த வேரியண்ட் டீசல் மாடலில் மட்டும் கிடைக்கும்.

 புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும், அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்கள்தான் புதிய ரெனோ கேப்டூர் காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
 புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. டீசல் மாடல் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.87 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.37 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய ரெனோ கேப்டூர் கார் 4,329மிமீ நீளமும், 1,813மிமீ அகலமும், 1.619மிமீ உயரமும் கொண்டது. இந்த எஸ்யூவி 2,673மிமீ வீல் பேஸ் கொண்டது. இந்த எஸ்யூவி 210மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது.

 புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மேலும், 310 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் இடவசதி, 50 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் டேங்க் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

Trending On DriveSpark Tamil:

 புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி முழுமையான எஸ்யூவி காராக இல்லாமல், க்ராஸ்ஓவர் ரக மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகல், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி கார்னர் லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் முக்கிய அம்சங்கள்.

 புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த காரில் இரட்டை வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் தங்க மற்றும் வெள்ளை வண்ண அலங்கார பாகங்கள் இருக்கின்றன.

 புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த காரில் டிஜிட்டல் திரையுடன் கூடிய இரட்டை குடுவை அமைப்புடைய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. பெரிய தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. வாய்மொழி உத்தரவு வசதி, நேவிகேஷன் வசதிகளும் உண்டு.

 புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி மூன்லைட் சில்வர், பிளானெட் க்ரே, கேயேன் ஆரஞ்ச், மகோனி பிரவுன் மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கும். இந்த காருக்கு ஏராளமான கஸ்டமைஸ் ஆக்சஸெரீகளையும் ரெனோ வழங்குகிறது.

 புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன.

விலை விபரம்

விலை விபரம்

வேரியண்ட் விபரம் எக்ஸ்ஷோரூம் விலை
ஆர்எக்ஸ்இ(பெட்ரோல்) ரூ.9.99 லட்சம்
ஆர்எக்ஸ்இ (டீசல்) ரூ.11.39 லட்சம்
ஆர்எக்ஸ்எல் (பெட்ரோல்) ரூ.11.07 லட்சம்
ஆர்எக்ஸ்எல் டீசல்) ரூ.12.47 லட்சம்
ஆர்எக்ஸ்டி (பெட்ரோல்) ரூ.11.69 லட்சம்
ஆர்எக்ஸ்டி (டீசல்) ரூ.13.09 லட்சம்
பிளாட்டீன் (டீசல்) ரூ.13.88 லட்சம்
புதிய ரெனோ கேப்டூர் கார் விற்பனைக்கு அறிமுகம்!

போட்டியாளராக கருதப்படும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஹூண்டாய் க்ரெட்டா போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு சவால் தரும் விலையில் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி வந்துள்ளது.

Trending On DriveSpark Tamil:

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Captur launch live updates. Prices for the new Renault Captur start at Rs 9.99 lakh ex-showroom (India).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X