இந்த விலையில் இவ்வளவு வசதிகளா.... திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர்!

Written By:

அண்மையில் விற்பனைக்கு வந்த புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி விலையிலும், வசதிகளிலும் மிகச் சிறப்பான தேர்வாக வந்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணங்களையும், பூர்த்தி செய்யும் விதத்தில் மிகச் சரியான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர் பேஸ் வேரியண்ட் வசதிகள்!

ரூ.11 லட்சத்திற்கும் மேலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் ரூ.9.99 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்தததுடன், இதன் டாப் வேரியண்ட் ரூ.13.88 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர் பேஸ் வேரியண்ட் வசதிகள்!

இந்த நிலையில், இந்த புதிய ரெனோ கேப்டூர் காரில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமே, பேஸ் வேரியண்ட்டில் விலைக்கும், எதிர்பார்ப்புக்கும் பொய்க்காத விதத்தில் வசதிகளை கொடுத்திருப்பதுதான்.

திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர் பேஸ் வேரியண்ட் வசதிகள்!

பொதுவாக, பேஸ் மாடல் என்பது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் மாடலாகவே இருக்கிறது. சில மாடல்களில் அடிப்படையாக தேவைப்படும் வசதிகள் கூட இருக்காது. ஆனால், ரெனோ கேப்டூர் எஸ்யூவியின் வசதிகளும், விலையும் மிகச் சிறப்பான முறையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர் பேஸ் வேரியண்ட் வசதிகள்!

ரெனோ கேப்டூர் எஸ்யூவியின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் RXE, RXL, RXT வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. டீசல் மாடலில் பிளாட்டீன் என்ற மிக உயர்ந்த சிறப்பம்சங்கள் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. இந்த நிலையில், பேஸ் மாடலில் இருக்கும் வியக்க வைக்கும் முக்கிய வசதிகளை பார்க்கலாம்.

ஆர்எக்ஸ்இ வேரியண்ட்

ஆர்எக்ஸ்இ வேரியண்ட்

கேப்டூர் எஸ்யூவியின் ஆர்எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டில், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் முக்கிய அம்சமாக இடம்பெற்றிருக்கின்றன. க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு, பாடி கலர் கைப்பிடிகள், ஃபுல் வீல் கவர், பாடி கிளாடிங்குகள் பொருத்தப்ட்டு இருக்கின்றன.

திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர் பேஸ் வேரியண்ட் வசதிகள்!

அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோஸ் வசதி இருக்கிறது. ஓட்டுனர் பக்கத்தில் ஆட்டோமேட்டிக் பவர் விண்டோ வசதி உள்ளது. சாவி பாக்கெட்டில் இருந்தால், பட்டனை அழுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்யும், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி இருக்கிறது. ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், பின் இருக்கைக்கு தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர் பேஸ் வேரியண்ட் வசதிகள்!

ஃபேப்ரிக் இன்டீரியர், கருப்பு மற்றும் யானை தந்த அலங்கார பாகங்கள், 2 டின் ஆடியோ சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் உள்ளன. அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஸ்டீயரிங் வீல் அம்சமும் குறிப்பிடத்தக்கது.

திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர் பேஸ் வேரியண்ட் வசதிகள்!

சென்சார் உதவியுடன் தானியங்கி முறையில் இயங்கும் பின்புற வைப்பர்கள், விபத்து ஏற்படும்பட்சத்தில் கார் கதவுகள் தானாக திறந்து கொள்ளும் வசதி, வேகத்தை கணித்து கதவுகள் தாழிட்டு கொள்ளும் வசதி, ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், இரண்டு ஏர்பேக்குகள் என பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர் பேஸ் வேரியண்ட் வசதிகள்!

இதே விலையில் கிடைக்கும் இதன் ரகத்திலான பிற கார்களை ஒப்பிடும்போது கொடுக்கும் பணத்திற்கு மிகச் சிறப்பான வசதிகளை ரெனோ கேப்டூர் பெற்றிருக்கிறது. சரி, பேஸ் வேரியண்ட்டிலேயே எல்லா வசதிகளும் இருக்கிறது. விலை உயர்ந்த வேரியண்ட்டில் ஸ்பெஷலா என்ன இருக்கிறது என்பதையும் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்

ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்

ஸ்பீடு லிமிட்டர் வசதியுடன் கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஈக்கோ டிரைவிங் மோடு, 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், 16 அங்குல அலாய் வீல்கள், ரியர் பார்க்கிங் சென்சார், க்ரோம் பூச்சுடன் புகைப்போக்கி குழாய் அமைப்பு போன்றவை கூடுதல் அம்சங்களாக இடம்பெற்றிருக்கிறது. பேஸ் வேரியண்ட்டைவிட இந்த நடுத்தர வேரியண்ட் ரூ.1 லட்சம் கூடுதல் விலையில் கிடைக்கிறது.

 ஆர்எக்ஸ்டி

ஆர்எக்ஸ்டி

குளிரூட்டும் வசதி கொண்ட க்ளவ் பாக்ஸ் அறை, சீட் பாக்கெட்டுகள், லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், தானியங்கி முறையில் மடங்கிக் கொள்ளும் ரியர் வியூ மிரர்கள், எல்இடி கேபின் விளக்குகள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர் பேஸ் வேரியண்ட் வசதிகள்!

மேலும், இரவு நேரத்தில் காரை நிறுத்தி இறங்கும்போது சிறிது நேரம் ஒளிரும், ஃபாலோமீ ஹெட்லைட், க்ரோம் அலங்காரத்துடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், பார்க்கிங் பிரேக் பட்டன். 17 அங்குல க்றிஸ்டல் கட் அலாய் வீல்கள் போன்றவை முக்கிய அம்சங்கள்.

திக்குமுக்காட வைக்கும் ரெனோ கேப்டூர் பேஸ் வேரியண்ட் வசதிகள்!

அட்டை போன்ற ஸ்மார்ட் சாவி கொடுக்கப்படுகிறது. இதன்மூலமாக, கார் அருகில் வரும்போது கதவுகள் திறந்துகொள்ளும், காரை விட்டு தூரம் செல்லும்போது கதவுகள் தானாக பூட்டிக் கொள்ளும். ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்களும் கூடுதல் சிறப்பம்சங்கள்.

பிளாட்டீன் வேரியண்ட்

பிளாட்டீன் வேரியண்ட்

இரட்டை வண்ண பாடி கலர் ஃபுல் எல்இடி ஹெட்லைட்டுகள், அலை அலையாய் ஒளிரும் இண்டிகேட்டர்கள், பக்கவாட்டு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பிளாட்டீன் பேட்ஜ் போன்றவை கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி வேரியண்ட் வாரியாக வசதிகள்

நெருக்கடியான பட்ஜெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக அமையலாம். இந்த செய்தி குறித்து உங்களது கருத்துக்களையும் எழுதலாம்.

மேலும்... #ரெனோ #renault
English summary
Renault Captur SUV Variant Wise Features Explained.
Story first published: Tuesday, November 14, 2017, 15:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark