ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

Written By:

ரெனோ கேப்டூர் எஸ்யூவியின் படங்கள்,விபரங்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டு இருப்பதுடன், முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது. படங்கள், கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாடல். இந்த காரின் வெற்றி தந்த உற்சாகத்தை போட்டிக்கு வந்த மாடல்கள் குறைத்தன. இந்த நிலையில், எஸ்யூவி செக்மென்ட்டில் தனது ஆளுமையை அதிகரிக்கும் விதத்தில், புதிய கேப்டூர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ரெனோ கார் நிறுவனம்.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

இந்த புத்தம் புதிய மாடலின் படங்கள், விபரங்களை இன்று ரெனோ கார் நிறுவனம் வெளியிட்டு இருப்பதுடன், முன்பதிவும் துவங்குவதாக அறிவித்துள்ளது. ரூ.25,000 முன்பணத்துடன் அங்கீகரிக்கப்பட்ட ரெனோ கார் டீலர்களிலும், ரெனோ இந்தியா நிறுவனத்தின் இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலமாக இந்த புதிய காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

ரெனோ டஸ்ட்டர் போன்று முரட்டுத்தனமான எஸ்யூவியாக அல்லாமல், க்ராஸ்ஓவர் ரகத்திலான டிசைனில் மென்மையான தோற்றத்தை பெற்றிருக்கிறது. இதன் ரகத்திலேயே மிக நீளமான, அகலமான கார் மாடலாக இருக்கும் என்று ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

ரெனோ கேப்டூர் கார் 4,329மிமீ நீளமும், 1,813மிமீ அகலமும், 1,619மிமீ உயரமும் கொண்டது. டஸ்ட்டரைவிட நீளத்தில் சற்று அதிகமான காராக இருந்தாலும், உயரத்தில் குறைவானது. 2,673மிமீ வீல் பேஸ் கொண்ட இந்த கார், இந்த கார் 210 மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸ் உடையது.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

எல்இடி ஹெட்லைட்டுகள், அலைஅலையாய் ஒளிரும் இண்டிகேட்டர் விளக்குகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல இரட்டை வண்ண அலாய் வீல்கள் போன்றவை இந்த காரை மிகவும் பிரிமியமாக உயர்த்துகிறது.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். ஐஓஎஸ் இயங்குதள சாதனத்திற்கான வாய்ஸ் கமாண்ட் வசதி, நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளை வழங்கும். இரட்டை குடுவை அமைப்புடைய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியும் உண்டு.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

ரெனோ கேப்டூர் கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. பெட்ரோல் மாடலில் 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

டீசல் மாடலில் 109 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழஹ்க வல்ல 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

இந்த காருக்கு கஸ்டமைஸ் ஆப்ஷன்களையும் ரெனோ நிறுவனம் வழங்குகிறது. டைமண்ட் டெக் மற்றும் அர்பன் கனெக்ட் என்ற பெயரில் இந்த கஸ்மடைஸ் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும். இரட்டை வண்ணத்திலான பாடி கலர் தேர்விலும் கிடைக்கும்.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

ரெனோ கேப்டூர் எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் இணைந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் பிரேக் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும். ஸ்பீடு லிமிட்டர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் உள்ளது.

ரெனோ கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் வெளியீடு: முன்பதிவும் துவங்கியது!

ரெனோ கேப்டூர் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களை வைத்து பார்க்கும்போது நிச்சயமாக ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடல்களை குறிவைத்து களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே, விலை ரூ.10 லட்சத்திற்கு மேல் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ரெனோ #renault
English summary
Renault Captur unveiled in India. The new Renault Captur can be booked for an initial amount of Rs 25,000 from September 22, 2017, through Renault Captur App and Renault India Website.
Story first published: Friday, September 22, 2017, 16:50 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark