க்ரெட்டா கனவுல இருந்த என்னை இந்த ரெனோ கேப்டூர் வந்து குழப்பிவிட்டுட்டே!

Written By:

டஸ்ட்டர், க்விட் கார்களுக்கு அடுத்து ரெனோ நிறுவனத்திடமிருந்து அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கும் மாடல் கேப்டூர். டஸ்ட்டர் போன்று முரட்டுத்தனமான முழுமையான எஸ்யூவியாக இல்லாமல், எஸ்யூவி ரகத்திற்கு உரிய மிடுக்குடன் மென்மையான க்ராஸ்ஓவர் தோற்றத்தில் வசீகரிக்கிறது புதிய ரெனோ கேப்டூர்.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

டஸ்ட்டர் எஸ்யூவியைவிட கூடுதல் விலையில் புதிய ரெனோ கேப்டூர் வருவது உறுதியாகிவிட்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஜீப் காம்பஸ் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும் என்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய மாடல் ஹூண்டாய் க்ரெட்டா வாங்க திட்டமிட்டிருப்பவர்களையும் கவர்ந்து இழுத்து வருகிறது. இந்த இரு கார்களின் சாகத, பாதக அம்சங்களை இந்த செய்தியில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

ரெனோ கேப்டூர் எஸ்யூவியின் வீல் பேஸ் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியைவிட 83 மிமீ அதிகம். அகலத்தில் 33 மிமீ கூடுதலாக இருக்கிறது. அதேவேளையில், உயரம் 11 மிமீ குறைவு. இந்த அளவீட்டை வைத்து பார்க்கும்போது, க்ரெட்டா எஸ்யூவியைவிட உட்புறத்தில் அதிக இடவசதியை ரெனோ கேப்டூர் பெற்றிருக்கும்.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி 190 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாக இருக்கும் நிலையில், புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி 210 மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக வருகிறது. மோசமான சாலைகளில் ஓட்டும்போது சிறப்பான தரை இடைவெளியால் அச்சம் இல்லாமல் ஓட்ட முடியும்.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

ஹூண்டாய் க்ரெட்டா காரில் 402 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி இருக்கும் நிலையில், புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியில் 437 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இருக்கிறது. இந்த விஷயத்திலும் ரெனோ கேப்டூர் சிறப்பான மாடலாக இருக்கிறது.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் மற்றும் பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அத்துடன், எல்இடி பனி விளக்குகளும் இந்த காரின் பிரிமியம் அம்சத்தை உயர்த்துகிறது. மறுபுறத்தில் ஹூண்டாய் க்ரெட்டா காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் உள்ளன.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

புதிய ரெனோ கேப்டூர் காரில் 7 அங்குல மீடியாநவ் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், இப்போதைக்கு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யாது என்பது பெரும் குறை.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

அதேநேரத்தில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியிலும் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய மீடியாநவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இது சப்போர்ட் செய்யும் என்பது மிகப்பெரிய ப்ளஸ். இரண்டு கார்களிலுமே ரியர் வியூ கேமராவுக்கான திரையாகவும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் செயல்படும்.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள்,இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் ஹூண்டாய் க்ரெட்டாதான் பெஸ்ட்.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியானது ஒரு பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 118 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்த 1.6 லிட்டர் எஞ்சின் உள்ளது.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

மேலும், 88 பிஎச்பி பவரை அளக்கும் திறன் கொண்ட 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 124 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அனைத்து மாடல்களுமே மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியும் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது.பெட்ரோல் மாடலில் 105பிஎச்பி பவரை அளிக்க 1.5 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 109 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல்கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லை.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

தொழில்நுட்ப அம்சங்களை பேப்பரில் ஒப்பிட்டு பார்க்கும்போது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி பவர்ஃபுல் மாடலாக இருக்கிறது. அதேநேரதத்தில், ரெனோ டஸ்ட்டரின் சிறப்பான ஓட்டுதல் தரத்தையும், கையாளுமையையும் ரெனோ கேப்டூர் எஸ்யூவியிலும் எதிர்பார்க்கலாம்.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.9 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ கேப்டூர் Vs ஹூண்டாய் க்ரெட்டா: ஒப்பீடு

எஸ்யூவிக்குரிய முழுமையான தோற்றம், அதிக பாதுகாப்பு அம்சங்கள், வாடிக்கையாளர்களுக்கு தோதுவான தேர்வுகளில் எஞ்சின் ஆப்ஷன்கள், சரியான விலை என ஹூண்டாய் க்ரெட்டா பல விதத்தில் முன்னிலை வகிக்கிறது.

மேலும், ஹூண்டாய் க்ரெட்டா வாடிக்கையாளர்களிடத்தில் அதிக நம்பகத்தன்மையையும் பெற்றிருப்பதும் சிறப்பு. ரெனோ கேப்டூர் ஓர் சிறந்த க்ராஸ்ஓவர் மாடலாக இருக்கும் என்பதால், தனிதத்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

மேலும்... #ரெனோ #renault
English summary
Let us compare the Renault Captur and the Hyundai Creta to understand which one ticks the right boxes.
Story first published: Tuesday, September 26, 2017, 9:19 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark