ரெனோ டஸ்டர்: தற்போது பழைய விலையில் கூடுதலாக புதிய சிறப்பு அம்சங்கள்..!

Written By:

ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் எஸ்யூவி காரின் ஆர்எக்ஸ்எஸ் வேரியண்டில் விலையை அதிகரிக்காமல் கூடுதல் சிறப்பு அம்சங்களை சேர்த்துள்ளது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

ரெனால்ட் நிறுவனம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதலாக டஸ்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. கடந்த ஆண்டில் மேம்படுத்தப்பட்ட டஸ்டர் அறிமுகமானது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

கொடுக்கும் விலைக்கு தரமான கார் என்ற பெயரை பெற்று வெகு விரைவிலேயே மக்களின் அபிமானத்தை பெற்ற மாடலாக மாறியது டஸ்டர் கார்.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

ரெனால்ட் நிறுவனம் தற்போது வரைக்கும் 43 விருதுகளை வென்றுள்ளது. இதில் 29 விருதுகள் டஸ்டர் மூலமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

நல்ல இடவசதி, சொகுசு, கவர்ச்சியான டிசைன், இந்திய சாலைகளுக்கு ஏற்ற உயரமான வீல் பேஸ், கம்பீரமான தோற்றம், சிறப்பு அம்சங்கள் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளதால் நல்ல வரவேற்பை டஸ்டர் பெற்றது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

ரெனால்ட் டஸ்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்சின்களுடன், ஸ்டேண்டர்ட், ஆர்எக்ஸ்ஈ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்எஸ் மற்றும் ஆர்எக்ஸ்இசட் என 5 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

இதில் ஆர்எக்ஸ்இசட் என்பதே டாப் எண்ட் வேரியண்டாகும். இதற்கு அடுத்ததாக ஆர்எக்ஸ்எஸ் வேரியண்ட் உள்ளது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

தற்போது டஸ்டர்ஆர்எக்ஸ்எஸ் (RxS) வேரியண்டில் புதிதாக டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஃபிரண்ட் டூயல் ஏர்பேக்குகள் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

பொதுவாக இதைப் போன்ற அம்சங்களை புதிதாக சேர்க்கும் போது அந்த மாடலின் விலையை கார் நிறுவனங்கள் அதிகரிப்பதே வாடிக்கையாகும்.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

ஆனால் டஸ்டரில் முக்கியமான இந்த அம்சங்களை சேர்த்துள்ள ரெனால்ட் நிறுவனம் விலையை அதிகரிக்காமல் இருப்பது ஆச்சரியமே.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

ரெனால்ட் நிறுவனத்தின் ஆரம்ப விலை கொண்ட க்விட் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் சிறந்து விளங்குவது தெரிந்ததே.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

க்விட் கார்களுக்காக டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அதிகளவில் தயாரிக்கப்படுவதால் தயாரிப்பு செலவு குறைந்துள்ளது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

இதன் காரணமாகவே டஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் (RxS) வேரியண்டில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை ரெனால்ட் நிறுவனத்தால் இலவசமாக சேர்க்க முடிந்துள்ளது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

இதற்கு முன்னதாக டஸ்டரின் டாப் எண்ட் வேரியண்டான ஆர்எக்ஸ்இசட்-ல் மட்டுமே இந்த வசதிகள் இருந்தன.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

ரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் (RxS) வேரியண்டில் 1.5 லிட்டர் டிசிஐ கே9கே ஹச்பி டீசல் எஞ்சின் மட்டுமே கிடைக்கிறது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

இந்த இஞ்சின் அதிகபட்சமாக 84 பிஹச்பி ஆற்றலையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இஞ்சினின் சக்தியை 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் 4 வீல்களுக்கும் அளிக்கிறது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

ரெனோ டஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் வேரியண்டில் இதற்கு முன்னர் டிரைவர் பக்க ஒரு ஏர் பேக் மட்டுமே இருந்தது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

டஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் வேரியண்டில் எலக்ட்ரானிக் கண்டோல்டு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டேண்டர்ட் அம்சமாக கிடைக்கிறது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

என்றாலும் இவற்றில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி இல்லாதது குறையாகவே உள்ளது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

எனினும், டஸ்டரின் டாப் எண்ட் வேரியண்டான ஆர்எக்ஸ்இசட் காரில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

கீழ்கண்ட 10 வண்ணங்களில் ரெனோ டஸ்டர் கிடைக்கிறது..

 • பேர்ல் ஒயிட் (Pearl White)
 • கோமெட் கிரே (Comet Grey)
 • அமேசான் கிரீன் ( Amazon Green)
 • கேயென் ஆரஞ்சு (Cayenne Orange)
ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!
 • கேலக்ஸி பிளாக் (Galaxy Black)
 • அவுட்பேக் பிரான்ஸ் ( Outback Bronze)
 • ஸ்லேட் கிரே மெட்டாலிக் (Slate Grey Mettalic)
 • வுட்லேண்ட் பிரவுன் (Woodland Brown)
 • மூன்லைட் சில்வர் (Moonlight Silver)
ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

ரெனால்ட் டஸ்டர் காரில் கிடைக்கும் சிறப்புகள்...

 • ஏசி
 • பவர் விண்டோ
 • டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
 • பவர் ஸ்டீரிங்
ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!
 • ஃபாக் விளக்குகள்
 • கீலெஸ் என்ட்ரி
 • ஆன்டி லாக் ப்ரேக்
 • ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
 • பின் நகர்வு பார்கிங் சென்சர்
ரெனால்ட் டஸ்டர் காரில் கூடுதல் சிறப்புகள்; அதே விலையில்..!

புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட ரெனால்ட் டஸ்டர் கார் பழைய விலையான ரூ.10.75 (டெல்லி, எக்ஸ்ஷோரூம்) லட்சத்திற்கே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about Renault adds new touch screen infotainment system, dual airbags in duster suv at same price.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark