ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் இந்தியாவில் ரூ.10.90 லட்சம் தொடக்க விலையில் அறிமுகம்..!!

Written By:

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் மாடல் ரூ.10.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) தொடக்க விலையில் அறிமுகமாகியுள்ளது.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

உள்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்பில் புதிய வடிவமைப்புகளை பெற்றுள்ள இந்த கார் தற்போதைய மாடலை விட பல்வேறு மாற்றங்களை பெற்றுள்ளன.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் எஸ்யூவி காரில் ஆர்.எக்ஸ்.எஸ் டீசல் மற்றும் ஆர்.எக்ஸ்.எஸ் டீசல் 110 பிஎஸ் என இரண்டு வேரியண்டுகளில் வெளிவருகின்றன.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இதில் முறையே வேரியண்டுகளுக்கு ஏற்ப 5-ஸ்பீடு மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் காரில் வெளிப்புற கட்டமைப்பு புதிய மேட் கருப்பு நிறத்திலான முன்பக்க அர்மரை கொண்டுள்ளது. இவற்றுடன் டஸ்டர் பிராண்டிங் மற்றும் விளக்குகள் இடம்பெற்றுள்ளன.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த சிறப்பு பதிப்பில் ஹூடு, கதவுகள், டெயில்கேட் மற்றும் ஓ.ஆர்.வி.எம்-கள் போன்ற வசதிகள் உள்ளன. இவற்றுடன் முற்றிலும் புதிய ஸ்டைலான ஜோடியாக் 16 அங்குல மெஷின் அலாய் சக்கரங்கள் உள்ளன.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் காரின் உள்புற கட்டமைப்பில் இருக்கைகள் சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் கலவையில் தோற்றமளிக்கின்றன. காரின் ஃபேஸியா அடர் கிரோம் நிறத்தில் உள்ளது.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

கார் கதவின் உள்கட்டமைப்பு அனைத்தும் கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் 7-இஞ்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

காட் அவுட்பேக் பிரான்ஸ், முன்லைட் சில்வர் மற்றும் ஸ்லேட் கிரே போன்ற நிறங்களில் ரெனால்ட் தயாரித்துள்ள இந்த சிறப்பு பதிப்பு சான்ட்ஸ்ட்ராம் எடிசன் கார் வெளிவருகிறது.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் கே9கே 1.5 டிசிஐ எஞ்சின் உள்ளது. இதன் மூலம் 108.5 பிஎச்பி மற்றும் 84 பிஎச்பி என இருவேறு தேர்வுகளில் எஞ்சினின் பவர் அமையும்.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

108.5 பிஎச்பி பவர் தரும் கார் மாடல் மூலம் 245 என்.எம் டார்க் திறனும், 84 பிஎச்பி பவர் கொடுக்கும் மற்றொரு கார் மாடல் 200என்.எம் டார்க் திறனும் வழங்கும்.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

தற்போதைய மாடலை விட பல புதிய கட்டமைப்புகளுடன் கவர்கிறது புதிய டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார். மேலும் பயன்பாட்டில் இருக்கும் மாடலை விட இந்த சிறப்பு பதிப்பு ரூ.30,000 மட்டுமே கூடுதல் விலையை பெற்றுள்ளது.

ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டூயல் ஏர்பேகுகள், ஆட்டோ கிளேமேட்டிக் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு ரெனால்ட் டஸ்டர் சான்ட்ஸ்ட்ராம் கார் தயாராகியுள்ளது.

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Read in Tamil: Renault Duster Sandstorm Launched In India Launch, Price, Specifications, images. Click for Details...
Story first published: Wednesday, September 20, 2017, 11:20 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark