ரெனால்ட் வெளியிடும் எதிர்காலத்திற்கான ஆர்.எஸ். 2027 விஷன் கான்செப்ட் மாடல்

Written By:

இனி ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான வரவேற்பு உலகளவில் அதிகரிக்கும் என்பது பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்களின் கணிப்பாக உள்ளது. இதனால் ஃபெராரி, போர்சே, பி.எம்.டபுள்யூ போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், இன்று ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் பல ஸ்போர்ட்ஸ் கார்கள் உற்பத்தியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.

ஃபார்மூலா ஒன் பந்தயங்களை குறிவைக்கும் ரெனால்ட்

இந்த வரிசையில் புதியதாக இடம்பெற்றுள்ளது, ஃபிரெஞ்சு நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம். பத்து வருடங்களில் ஃபார்மூலா ஒன் கார் பந்தயங்களுக்கான வரவேற்பு எதுபோன்ற வளர்ச்சியை எட்டியிருக்கும், அதில் பங்கெடுக்கும் கார்களின் தொழில்நுட்பத்தின் திறன் என்னவாக இருக்கும் போன்ற பல விஷயங்களை கணக்கிட்டு ரெனால்ட்ஆர்.எஸ். 2027 விஷன் கான்செப்ட் ஸ்போர்ட்ஸ் மாடலை உருவாக்கியுள்ளது.

ஃபார்மூலா ஒன் பந்தயங்களை குறிவைக்கும் ரெனால்ட்

ஆட்டோமொபைல் உலகில் கால்பதித்து 40 வருடங்கள் நிறைவடைந்ததை இந்தாண்டில் ரெனால்ட் நிறுவனம் கொண்டாடவுள்ளது. அதை நினைவுக்கூறும் விதமாகவும் அந்நிறுவனம் ஆர்.எஸ். 2027 விஷன் கான்செப்ட் காரை வெளியிட திட்டமிட்டு வருகிறது.

ஃபார்மூலா ஒன் பந்தயங்களை குறிவைக்கும் ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனத்தின் ஆர்.எஸ். 2027 விஷன் கார் மாடல், ரேஸ் கார்களுக்கான வடிவமைப்புகளில் புதிய தொழில்நுட்பத்தை வரவேற்பதற்கான டிரெண்டை உருவாக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் ஆட்டோமொபைல் உலகை சேர்ந்த பல வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபார்மூலா ஒன் பந்தயங்களை குறிவைக்கும் ரெனால்ட்

தற்போது வாடிக்கையாளர்களிடம் ஸ்பொர்ட்ஸ் கார்களை வாங்கும் திறன் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், வியாபார ரீதியாகவும் ரெனால்ட்டின் 2027 விஷன் ஸ்போர்ட்ஸ் கார் வரவேற்பு பெறும் என நம்பப்படுகிறது. அதனால் பத்து வருடங்களில் ஆட்டோமொபைல் காணும் வளர்ச்சியை இப்போதே கொண்டுவர ரெனால்ட் தீவிர முயற்சியில் உள்ளது.

ஃபார்மூலா ஒன் பந்தயங்களை குறிவைக்கும் ரெனால்ட்

வரும் 19ம் தேதி சீனாவின் ஷாங்காய் நகரத்தில் நடைபெறும் மோட்டார் கண்காட்சியில் ரெனால்ட் நிறுவனம் தனது ஆர்.எஸ் 2027 விஷன் காரை உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது. அங்கு பிரபல ஃபார்மூலா ஒன் சேம்பியனான ஏலைன் ப்ரோஸ்ட் காரை வெளியிடுகிறார்.

ஃபார்மூலா ஒன் பந்தயங்களை குறிவைக்கும் ரெனால்ட்

ஸ்போர்ட்ஸ் கார்களுக்கான வணிகத்தில் ஆர்.எஸ். 2027 விஷன் கார் மாடல் மூலமாக ரெனால்ட் நிறுவனம் கையூன்ற வேண்டும் என்ற கனவு நிஜமாகவுள்ளது. மேலும், இந்த கார் ஃபார்மூலா ஒன் பந்தயங்களில் இடம்பெறும் பட்சத்தில், ரெனால்ட் நிறுவனத்தின் கொடி ஓங்கி பறக்கவேண்டும் என்ற எண்ணத்துடம் பல்வேறு திட்டவடிவங்களை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault is exploring the future of racing car with its R.S 2027 Vision concept model. Read now to know more about the future of Formula One car.
Story first published: Monday, April 10, 2017, 12:31 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos