சைபர் திருடர்களால் ’ஹேக்’ செய்யப்பட்ட ரெனால்ட் நிறுவனம்: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

Written By:

ஃபிரான்ஸ் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் சென்னை உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள தனது ஆலைகளில் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தியுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் ’ஹேக்’: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

ரெனால்ட் தனது உற்பத்தியை நிறுத்த பெட்ரோல் பஞ்சமோ, இரும்பு தட்டுபாடோ, ஆக்கத்திறன் குறைப்பாடோ அல்லது பொருளாதார மந்தைநிலையோ காரணமல்ல.

உலகம் முழுவதும் பரவி வரும் சைபர் தாக்குதலால் (சில செய்தி ஊடகங்கள் அந்த தாக்குதலை வானா கிரை என்று குறிப்பிடுகின்றன) 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைய பயணாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரெனால்ட் நிறுவனம் ’ஹேக்’: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

இந்த சைபர் தாக்குதல் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான ரொனால்ட் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரெனால்ட் நிறுவனத்திற்கான ஆலைகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் தற்காலிகமாக தனது உற்பத்திய ரெனால்ட் நிறுத்தி உள்ளது.

ரெனால்ட் நிறுவனம் ’ஹேக்’: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

மேலும் இதே தாக்குதல் ஃபிரான்ஸ் உட்பட சில நாடுகளில் நடந்துள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. சென்னை ஒரகடம் அருகில் இயங்கி வரும் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் கூட்டு ஆலையிலும் உற்பத்தி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் ’ஹேக்’: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

சைபர் தாக்குதல் குறித்து பாரீஸ் நகரில் பேசிய ரெனால்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், தொழில்நுட்பவியலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் பணிகளில் எந்த இடையூறும் ஏற்படாமல் தவிர்க்கவே, சைபர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நாடுகளில் ரெனால்ட் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரெனால்ட் நிறுவனம் ’ஹேக்’: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

மேலும் இதற்காக தகுந்த ஆதாரங்களுடன் ஃபிரான்ஸ் நாட்டு காவல்துறையை ரெனால்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அனுகியுள்ளதாகவும்,

அதற்கான நடவடிக்கைகளை ஃபிரான்ஸ் காவல்துறை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும், ரெனால்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பாரீஸில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ரெனால்ட் நிறுவனம் ’ஹேக்’: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

ரெனால்ட் நிறுவனத்தின் தலைமை ஆலை ஃபிரான்ஸ் நாட்டில் வடமேற்கு பகுதியான சண்டோவில்லே பகுதியில் அமைந்துள்ளது. அங்கும் சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும், அதனால் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும் ரெனால்ட் செய்தி தொடர்பாளர் கூறினார்.

ரெனால்ட் நிறுவனம் ’ஹேக்’: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

ஆனால் பல்வேறு நாடுகளில் உள்ள ரெனலாட் ஆலைகளில் எங்கெங்கெல்லாம் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது என்பதை பற்றிக்கூற அவர் மறுத்துவிட்டார்.

உலகளவில் சுமார் நூறு நாடுகளில் உள்ள ரெனலாட் நிறுவனத்தின் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரெனால்ட் நிறுவனம் ’ஹேக்’: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

இதனால் உலகளவில் ரெனால்ட் நிறுவனத்தில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கணினிகள் பாதிப்படைந்துள்ளதாக ஃபிரான்ஸ் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ரெனால்டுக்கு போட்டி நிறுவனமான உள்ள பி.எஸ்.எ-வில் இதுபோன்ற தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை என்று செய்திதொடர்பாளர் பாரீஸில் தெரிவித்துள்ளார்.

ரெனால்ட் நிறுவனம் ’ஹேக்’: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

ரெனலாட்-நிசான் நிறுவனங்களில் கூட்டு ஆலை சென்னை ஒரகடம் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு ரெனலாட் சந்தேகத்தின் பெயரில் தான் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் ’ஹேக்’: உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

ஆந்திராவில் சமீபத்தில் காவல்துறை இணையத்தில் மால்வேர் தாக்குதல் நடைபெற்ற நிலையில், இதை கருத்தில்கொண்டு இந்தியாவில் நிசான் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
French automaker Renault has halted production at several sites due to a global cyber attack. A spokesman from the company revealed this information.
Please Wait while comments are loading...

Latest Photos