ரெனோ கார்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம்!

Written By:

வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் முயற்சிகளில் ரெனோ கார் நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், ரெனோ கார் உரிமையாளர்களுக்கான பிரத்யேக ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ கார்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம்!

My Renault App என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஆப்பிள் சாதனங்களில் இந்த ஸ்மார்ட்போன் செயலியை பயன்படுத்தலாம்.

ரெனோ கார்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம்!

இந்த புதிய ஸ்மார்ட்போன் செயலி மூலமாக 60 விதமான வசதிகளை ரெனோ கார் உரிமையாளர்கள் பெற முடியும். காரின் சர்வீஸ் செய்ததன் குறிப்புகள், நினைவூட்டல் வசதிகள், ஆன்லைனில் சர்வீஸ் செய்வதற்கான முன்பதிவு போன்ற வசதிகளை இந்த செயலி மூலமாக பெற முடியும்.

ரெனோ கார்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம்!

கார்கள் குறித்த விபரங்கள் அடங்கிய குறிப்புகள், சர்வீஸ் கட்டணம், ஆக்சஸெரீகள் விலை, பணம் செலுத்தும் வசதி மற்றும் புகார் மற்றும் வாடிக்கையாளர் சேவை வசதிகளையும் பெற முடியும்.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
ரெனோ கார்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் விதத்தில், இந்த ஸ்மார்ட்போன் செயலி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ரெனோ கார்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம்!

முதல் முறையாக இ- காமர்ஸ் வசதியுடன் வந்திருக்கும் கார்களுக்கான செயலியாகவும் ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை தனித்துவப்படுத்திக் கொள்வதற்கும், அலங்காரம் செய்து கொள்வதற்கான வசதிகளையும் இந்த செயலி மூலமாக பெற முடியும்.

ரெனோ கார்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம்!

ரெனோ இந்தியா கார் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ரெனோ டீலர்களுடன் இந்த ஸ்மார்ட்போன் செயலி இணையம் மூலமாக இணைக்கப்பட்டு, ஒரே குடையின் கீழ் மிகச் சிறப்பான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ரெனோ கார்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம்!

ரெனோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை மிக எளிதாகவும், சிறப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடன் பெறுவதற்கு இந்த ஸ்மார்ட்போன் செயலி உறுதுணையாக இருக்கும் என்று நம்பலாம்.

மேலும்... #ரெனோ #renault
English summary
Renault India has announced the launch of MY Renault App, a user-friendly smartphone application for customers.
Story first published: Monday, September 11, 2017, 14:01 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark