ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்டான கிளைம்பர் அறிமுகம்

Written By:

இந்தியாவின் தொடக்கநிலை வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்டான 'க்விட் கிளைம்பர்' காரை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ரெனால்ட் நிறுவனம். அறிமுகப்படுத்தப்பட்ட 17 மாதங்களில் 1,30,000 க்விட் கார்களை விற்று புதிய மைல்கல்லை சமீபத்தில் தான் எட்டியது ரெனால்ட் நிறுவனம். இந்நிலையில் புதிய க்விட் கிளைம்பர் ரெனால்ட் நிறுவனத்திற்கு கூடுதல் தெம்பை அளித்துள்ளது.

புதிய ரெனால்ட் க்விட் கிளைம்பர் கார் அறிமுகம்

கடந்த 2016ஆம் ஆண்டு வாகன கண்காட்சியில் க்விட் கிளைம்பர் காரை முதல் முறையாக காட்சிப்படுத்தியது ரெனால்ட் நிறுவனம். அப்போது முதலே இக்காரின் வரவை இந்தியர்கள் எதிர்நோக்கியபடி இருந்துவந்தனர்.

புதிய ரெனால்ட் க்விட் கிளைம்பர் கார் அறிமுகம்

மும்பை மற்றும் சென்னையில் உள்ள ரெனால்ட் டிசைன் ஸ்டூடியோஸில் உருவானது புதிய க்விட் கிளைம்பர். சாதாரண க்விட் கார்களில் இருந்து கூடுதலான தோற்ற மாற்றத்தை பெற்றுள்ளது க்விட் கிளைம்பர் கார். ‘பேபி எஸ்யூவி' என்ற செக்மெண்டை உருவாக்க எண்ணி இந்த மாடலை வெளியிட்டுள்ளனர்.

புதிய ரெனால்ட் க்விட் கிளைம்பர் கார் அறிமுகம்

புதிய ரெனால்ட் க்விட் கிளைம்பர் 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் கொண்டது. இது அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்-ல் 67 பிஹச்பி ஆற்றலையும், 4,250 ஆர்பிஎம்-ல் 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

புதிய ரெனால்ட் க்விட் கிளைம்பர் கார் அறிமுகம்

வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள், ரூஃப் ரெயில்கள் , முன்பக்க பம்பர் கிளாடிங் போன்றவற்றில் ஆரஞ்சு வண்ணத்தை பெற்றுள்ளது க்விட் கிளைம்பர். 15 அங்குல அலாய் வீல் , கிளைம்பர் பேட்ஜ் மற்றும் ஸ்டிக்கரிங் போன்றவற்றை பெற்றதாக இவை வெளிவந்துள்ளன.

புதிய ரெனால்ட் க்விட் கிளைம்பர் கார் அறிமுகம்

இதன் உட்புறத்தில் டேஷ்போர்டு, டோர் சில், கியர் நாப் மற்றும் சீட்களில் ஆரஞ்சு வண்ண அலங்கார தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இது உட்புறத்துக்கு அட்டகாசமான தோற்றத்தை அளிக்கிறது.

புதிய ரெனால்ட் க்விட் கிளைம்பர் கார் அறிமுகம்

க்விட் கிளைம்பர் எலெக்ட்ரிக் புளூ, அவுட்பேக் பிரான்ஸ் மற்றும் பிளேனட் கிரே ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அனைத்து ரெனால்ட் டீலர்களும் புதிய க்விட் கிளம்பருக்கு புங்கிங்கை தொடங்கிவிட்டனர். மேலும், இதில் டிரைவருக்கான ஏர் பேக் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ரெனால்ட் க்விட் கிளைம்பர் கார் அறிமுகம்

க்விட் கிளைம்பர் மேனுவல் மாடல் ரூ. 4.30 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும், ஆட்டோமேடிக் மாடல் ரூ. 4.60 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும் கிடைக்கிறது. தற்போதைய க்விட் மாடலை விடவும் ரூ.30,000 கூடுதல் விலை கொண்டதாக இவை உள்ளன.

புதிய ரெனால்ட் க்விட் கிளைம்பர் கார் அறிமுகம்

க்விட் கிளைம்பர் மேனுவல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 23.01 கிமீ, ஆட்டோமேடிக் மாடல் லிட்டருக்கு 24.04 கிமீ மைலேஜும் கிடைக்கும் என ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செக்மெண்டில் முன்னோடியாக உள்ள மாருதிசுசுகியின் ஆல்டோ காருக்கு கடும் போட்டியை புதிய ரெனால்ட் க்விட் கிளைம்பர் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ரெனால்ட் க்விட் ஏஎம்டி (ஆட்டோமேடிக்) காரின் படங்கள்:

English summary
Renault Kwid Climber launched in India and will only be available with the 1-litre engine.
Story first published: Thursday, March 9, 2017, 18:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark