ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

ஹேட்ச்பேக் செக்மெண்ட் கார்களின் விற்பனையில் கோலோய்ச்சி வரும் க்விட் மாடல் காரின் புதிய வேரியண்டை ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய க்விட், மேனுவல் மற்றும் ஆட்டொமேடிக் வேரியண்டிலும் வெளிவந்துள்ளது.

ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் க்விட் கார்கள், ரெனால்ட் நிறுவனத்தின் நன்மதிப்பை மென்மேலும் உயர்த்தி வரும் சூழலில், அதன் புதிய வேரியண்ட்டான ஆர்எக்ஸ்எல் 1.0 லிட்டர் எஸ்சிஇ மாடலை ரெனால்ட் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய க்விட் ஆர்எக்ஸ்எல், வேரியண்டின் விலையை மற்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் நிர்னயித்துள்ளது ரெனால்ட், அதனால் இதனுடன் போட்டியிலுள்ள மாருதி, செவர்லட் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த புதிய க்விட் மூலம் சவாலை அதிகரித்துள்ளது ரெனால்ட்.

ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய க்விட் ஆர்எக்ஸ்எல் 1.0 லிட்டர் வேரியண்டின் விலை ரூ.3.54 லட்சமாகும் (டெல்லி எக்ஸ் ஷோரூம்). இது 0.8 லிட்டர் வேரியண்டின் விலையை விட ரூ. 22,000 கூடுதலாகும்.

ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

அதே போல புதிய க்விட் 1.0 ஆட்டோமேடிக் வேரியண்டின் விலை ரூ.3.84 லட்சமாகும் (டெல்லி எக்ஸ் ஷோரூம்), இது 1.0 லிட்டர் எம்டி வேரியண்டின் விலையை விடவும் ரூ. 30,000 அதிகமாகும்.

ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய க்விட்டின் கதவுகளில் ஸ்போர்ட்டி கிராஃபிக்ஸ் டிசைன் தரப்பட்டுள்ளது, இது க்விட்டிற்கு மேலும் கவர்ச்சியை அளிக்கிறது. இருவண்ண நிறத்திலான ரியர் கண்ணாடிகள், ஆகியவை வெளிப்புறத்தில் புதிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளது.

ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய க்விட் வேரியண்ட் எஸ்யூவி யை போன்ற டிசைன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 இஞ்ச் டச்-ஸ்கீரீன் மீடியா சிஸ்டம், டிஜிடல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன.

ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த செக்மெட்டிலேயே சிறந்த 300 லிட்டர் பூட் கொள்ளளவு, ஸ்மார்ட் கேபின், அகலமான இண்டீரியர், சிறந்த ரைடிங் மற்றும் ஹாண்ட்லிங் ஆகிய சிறப்புகளை கொண்டதாக புதிய க்விட் வெளிவந்துள்ளது.

ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்தியாவில் க்விட் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 17 மாதங்களிலேயே 1,30,000 கார்களை விற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ரெனால்ட் நிறுவனம்.

ரெனால்ட் க்விட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இது குறித்து ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுமித் சாவ்ஹ்னே கூறும்போது, இந்தியாவில் அறிமுகமான கார்களிலேயே குறிப்பிடக்கூடிய அளவிலான வெற்றியை ‘க்விட்' அடைந்துள்ளது, ஹேட்ச்பேக் செக்மெட்டில் புதிய சாதனைகளை க்விட் படைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

ரெனால்ட் க்விட் ஏஎம்டி (ஆட்டோமேடிக்) காரின் படங்கள்: 

English summary
Renault has attempted to make the Kwid more approachable in the market and hence has kept pricing for the new variant extremely competitive.
Story first published: Thursday, February 23, 2017, 17:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark