ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது!

Written By:

இந்திய கார் சந்தையில் நுழைந்த ஃபிரென்ச்சு நிறுவனமான ரெனால்ட், தனது க்விட் கார்கள் மூலமாக புதியதொரு புரட்சியை ஏற்படுத்தி ஹேட்ச்பேக் வகையிலனான கார்களின் விற்பனையில் கோலோய்ச்சி வருகிறது. தற்போது இவை அறிமுகப்படுத்தப்பட்ட 17 மாதங்களில் 1,30,000 க்விட் கார்களை விற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ரெனால்ட் நிறுவனம்.

ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்தது!

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் க்விட் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ரெனால்ட் நிறுவனம், அறிமுகப்படுத்திய 10 மாதங்களில் 66,000 என்ற எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்திருந்த ரெனால்ட், அடுத்த 7 மாதங்களில் 64,000 கார்களை விற்றுள்ளது.

ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்தது!

முதலில் க்விட் கார்கள் அறிமுகப்படுத்தப்படும் போது 800சிசி எஞ்சின் கொண்டவையாக வெளிவந்தது, பின்னர் குறுகிய காலத்திலேயே பெரிய வாடிக்கையாளர் வட்டத்தை சென்றடையும் வகையில், 1.0 லிட்டர் எஞ்சின் கொண்ட க்விட் கார்கள் சந்தைப்படுத்தப்பட்டன.

ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்தது!

2015ஆம் ஆண்டில் மூன்று இலக்க வளர்ச்சியை எட்டியதன் காரணமாக, 2016ஆம் ஆண்டின் இறுதியில் ரெனால்ட் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 4.5% ஆக உயர்ந்தது. இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வாகன பிராண்டாக ரெனால்ட்டை உயர்த்தியது.

ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்தது!

கடந்த ஆண்டில் க்விட் 1.0 லிட்டர் வேரியண்டை ரெனால்ட் அறிமுகப்படுத்திய பின்னர், மேலும் இம்மாடல் கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் மெருகேற்ற திட்டம் வைத்துள்ளதாக ரெனால்ட் நிறுவனம் கூறியிருந்தது.

ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்தது!

க்விட் 1.0 லிட்டர் வேரியண்டை தொடர்ந்து அதன் ஆட்டொமேடிக் வேரியண்டை அறிமுகப்படுத்தியது ரெனால்ட் நிறுவனம். இதனால் 2016ஆம் சிறந்த விற்பனையாகும் காராக க்விட் விளங்கியது.

ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்தது!

ரெனால்ட் க்விட் இரண்டு பெட்ரோல் வேடியண்டுகளில் கிடைக்கிறது. 799சிசி எஞ்சின் கொண்ட முதல் வேரியண்ட், அதிகபட்சமாக 53 ஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்தது!

இதன் இரண்டாவது வேரியண்ட் 1.0 லிட்டர் கொண்டதாகும், இது அதிகபட்சமாக 67 ஹச்பி திறனை வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்டதாகும்.

ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்தது!

இதன் இரண்டு வேரியண்டுகளிலுமே ரெனால்ட்டின் மீடியா நேவ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. க்விட் மாடலின் விலை ரூ.3.67 ( டெல்லி எக்ஸ் ஷோரூம்) லட்சமாகும்.

ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை அடைந்தது!

முதல் முதலாக கார் வாங்குபவர்களுக்கு க்விட் ஒரு சிறந்த தேர்வாக விளங்கி வருகிறது. க்விட் ஹேட்ச்பேக் காரை ரெனால்ட் நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது ஆப்பிரிகா, நேபால், பூடான் மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

ரெனால்ட் க்விட் ஏஎம்டி (ஆட்டோமேடிக்) காரின் படங்கள்: 

English summary
Renault has sold over 1,30,000 units of the Kwid in India has big plans about the hatchback’s future and its life cycle.
Story first published: Thursday, February 23, 2017, 10:37 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark