மழைக்காலத்தை எதிர்கொள்ள ரெனால்ட் நிறுவனம் நடத்தும் சிறப்பு கார் பரிசோதனை முகாம்..!!

Written By:

மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் ரெனால்ட் கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாமை ரெனால்ட் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

ரெனால்ட் நடத்தும் மழைக்கால கார் பரிசோதனை முகாம்..!!

இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நாட்டில் உள்ள அனைத்து ரெனால்ட் சர்வீஸ் நிலையங்களிலும் ஜூன் 25, 2017 வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் நடத்தும் மழைக்கால கார் பரிசோதனை முகாம்..!!

விரைவில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது, இதனை முன்னிட்டு அனைத்து ரெனோ கார்களும் மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவே இந்த

சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட இருக்கிறது.

ரெனால்ட் நடத்தும் மழைக்கால கார் பரிசோதனை முகாம்..!!

இதன் மூலம் ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி சரியான முறையில் கார் இயக்கம் உள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

ரெனால்ட் நடத்தும் மழைக்கால கார் பரிசோதனை முகாம்..!!

இந்த சிறப்பு முகாமில் குறிப்பிட்ட உதிரிபாகங்கள், ஆக்ஸெசரிகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகள் உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர்கள் 15% சலுகையையும் பெற முடியும்.

ரெனால்ட் நடத்தும் மழைக்கால கார் பரிசோதனை முகாம்..!!

இன்ஸூரன்ஸ் புதுப்பித்தல், குறிப்பிட்ட டயர் பிராண்டுகளில் சலுகை மற்றும் மேலும் இலவச வாட்டர் வாஷ் ஆகியவற்றும் இந்த மழைக்கால சிறப்பு பரிசோதனை முகாமில் ரெனோ வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ரெனால்ட் நடத்தும் மழைக்கால கார் பரிசோதனை முகாம்..!!

இந்த சிறப்பு முகாமில் ரெனோ நிறுவனம் ‘ரெனால்ட் செக்யூர்' என்ற பெயரில் அளித்து வரும் ரோட் சைடு அஸிஸ்ட்டென்ஸ் மட்டும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சேவைகளைகளில் 10% சிறப்பு தள்ளுபடியையும் தர உள்ளது.

ரெனால்ட் நடத்தும் மழைக்கால கார் பரிசோதனை முகாம்..!!

இந்த முகாமில் கலந்துகொள்ளும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் அளித்து குஷிப்படுத்த திட்டமிட்டுள்ள ரெனால்ட் இதன் மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

ரெனால்ட் நடத்தும் மழைக்கால கார் பரிசோதனை முகாம்..!!

ரெனால்ட் நிறுவனம் முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இதே போல சம்மர் பரிசோதனை முகாம் ஒன்றையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களிடத்தில் நன்மதிப்பை பெற ரெனால்ட் நிறுவனம் இவ்வாறு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about renault conducts special monsoon camp

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark