க்விட் கார் வாங்க ரெனோ நிறுவனம் அளிக்கும் இரண்டு சிறப்பு ஃபைனான்ஸ் சலுகைகள்..!

Written By:

இந்திய கார் சந்தையில் நுழைந்த ஃபிரென்ச்சு நிறுவனமான ரெனால்ட், தனது க்விட் கார்கள் மூலமாக புதியதொரு புரட்சியை ஏற்படுத்தி ஹேட்ச்பேக் வகையிலனான கார்களின் விற்பனையில் கோலோய்ச்சி வருகிறது.

ரெனோ க்விட் காருக்கு 2 புதிய ஃபைனான்ஸ் சலுகைகள் அறிவிப்பு..!!

அறிமுகப்படுத்தப்பட்ட 17 மாதங்களிலேயே 1,30,000 க்விட் கார்களை விற்று புதிய மைல்கல்லை கடந்த பிப்ரவரியில் எட்டியது ரெனால்ட் நிறுவனம்.

ரெனோ க்விட் காருக்கு 2 புதிய ஃபைனான்ஸ் சலுகைகள் அறிவிப்பு..!!

முதல் முறையாகவோ அல்லது ஆரம்ப விலை கொண்ட ஹேர்ச்பேக் கார் வாங்க விரும்புபவர்களின் சிறந்த சாய்ஸ் ரெனோ க்விட் ஆக மாறியிருப்பது அறிந்ததே.

இந்நிலையில், தற்போது க்விட் கார் வாங்க ரெனோ நிறுவனம் இரண்டு சிறப்பு ஃபைனான்ஸ் தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.

ரெனோ க்விட் காருக்கு 2 புதிய ஃபைனான்ஸ் சலுகைகள் அறிவிப்பு..!!

இந்த இரண்டு ஃபைனான்ஸ் ஆஃபர்களில் ஒன்று ‘குறைந்த முன்பணம்' மற்றும் இரண்டாவது ‘குறைந்த மாதாந்திர தவணை' என்பதாகும்.

ரெனோ க்விட் காருக்கு 2 புதிய ஃபைனான்ஸ் சலுகைகள் அறிவிப்பு..!!

குறைந்த மாதாந்திர தவணை என்பது ரூ.2,999 ஆக உள்ளது. ஸ்டேண்டர்ட் க்விட் வேரியண்ட் காரை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த குறைந்த ஈஎம்ஐ ஆஃபரை அளிக்கிறது ரெனோ நிறுவனம்.

ரெனோ க்விட் காருக்கு 2 புதிய ஃபைனான்ஸ் சலுகைகள் அறிவிப்பு..!!

டெல்லி எக்ஸ்ஷோரூம் அடிப்படையில் ரெனோ க்விட் ஸ்டேண்டர்ட் வேரியண்ட் காரின் விலை, வரிகள் இல்லாமல் ரூ.2.65 லட்சம் ஆகும். இந்தக் காருக்கு ரூ. 1.8 லட்சம் ஃபைனான்ஸ் அளிக்கிறது ரெனோ நிறுவனம். இந்த தொகையை திருப்பி செலுத்த 84 மாதங்கள் தவணைக் காலமாகும். ஒரு தவணையை முன்பாகவே செலுத்திவிட வேண்டும்.

ரெனோ க்விட் காருக்கு 2 புதிய ஃபைனான்ஸ் சலுகைகள் அறிவிப்பு..!!

குறைந்த பணத்தை முன்பணமக செலுத்தி க்விட் காரை சொந்தமாக்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கானது இந்த இரண்டாவது சலுகை.

ரெனோ க்விட் காருக்கு 2 புதிய ஃபைனான்ஸ் சலுகைகள் அறிவிப்பு..!!

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.17,999 தொகையை மட்டும் முன்பணமாக செலுத்திவிட்டு ரெனோ க்விட் காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

ரெனோ க்விட் காருக்கு 2 புதிய ஃபைனான்ஸ் சலுகைகள் அறிவிப்பு..!!

மீத தொகை முழுவதும் ஃபைனான்ஸ் மூலம் செலுத்தப்படும். மேற்கூறியது போலவே இந்த இரண்டாவது ஆஃபரும் க்விட் ஸ்டேண்டர்ட் வேரியண்ட் காருக்கு மட்டுமே கிடைக்கிறது.

ரெனோ க்விட் காருக்கு 2 புதிய ஃபைனான்ஸ் சலுகைகள் அறிவிப்பு..!!

லிட்டருக்கு 22.89 முதல் 25 கிமீ வரை மைலேஜ் தருவதால் அன்றாட உபயோகத்திற்கு ஏற்ற மாடலாக உள்ள க்விட் கார் ஏற்கெனவே விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது . இந்நிலையில் ரெனோ நிறுவனம் அளிக்கும் இந்த சிறப்பு சலுகை, க்விட் கார் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரெனோ க்விட் காருக்கு 2 புதிய ஃபைனான்ஸ் சலுகைகள் அறிவிப்பு..!!

ரெனால்ட் க்விட் ஸ்டேண்டர்ட் வேரியண்ட் கார்களில் உள்ள சிறப்பு அம்சங்கள்..

  • கருப்பு நிற பம்பர்கள், ஸ்டீல் வீல்கள்
  • சிங்கில் டோன் டேஷ்போர்ட்
  • டிஹிடல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்
  • கிரே அப்ஹோல்ஸ்டரி
  • ஹீட்டர்
  • கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர்
  • இண்டர்னல் பூட் ரிலீஸ்
  • இரண்டு ஆண்டுகள் (துருவில் இருந்து பாதுகாப்பு) வாரண்டி
English summary
Read in Tamil about renault announces finance offers for buying kwid cars.
Story first published: Friday, May 26, 2017, 7:20 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark