ரெனால்ட் அளிக்கும் 7 நாள் இலவச கார் பரிசோதனை முகாம்.. சலுகைகள், பரிசுகள் அளிக்கவும் திட்டம்..!

Written By:

இந்திய ஆட்டோமொபைல் துறையில் நிலையான வளர்ச்சி பெற்று வரும் ரெனால்ட் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுடன் நட்புறவு ஏற்படுத்தவும், தனது பிராண்டை நம்பகத்தன்மை கொண்டதாகவும் முன்னிறுத்த கோடை கால கார் பரிசோதனை மற்றும் சர்வீஸ் முகாமை நடத்த இருக்கிறது.

ரெனால்ட் கார்களுக்கு இலவச கார் பரிசோதனை முகாம்..!

ரெனோ க்விட் கார் மூலமாக தொடக்க நிலை வாகன சந்தையில் முக்கிய இடத்தை பெற்று இந்தியாவில் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது ரெனால்ட் நிறுவனம்.

ரெனால்ட் கார்களுக்கு இலவச கார் பரிசோதனை முகாம்..!

இதனை தக்கவைத்துக் கொள்ளவும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை அதிகரித்து, பந்தத்தையும் ஏற்படுத்தவும், இலவச சம்மர் முகாம் ஒன்றிக்கு முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது ரெனால்ட் நிறுவனம்.

ரெனால்ட் கார்களுக்கு இலவச கார் பரிசோதனை முகாம்..!

நாடு முழுவதும் உள்ள ரெனால்ட் சர்வீஸ் நிலையங்களில், வரும் ஏப்ரல் 17 முதல் 23 வரை இந்த இலவச சம்மர் கார் பரிசோதனை மற்றும் சர்வீஸ் முகாம் நடைபெற உள்ளது.

ரெனால்ட் கார்களுக்கு இலவச கார் பரிசோதனை முகாம்..!

ரெனால்ட் நடத்தும் இந்த சர்வீஸ் முகாமில் ரெனோ கார்களுக்கு அடிப்படை கார் பரிசோதனை (இயங்குதல் தொடர்பாக மட்டும்), வாட்டர் வாஷ் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

ரெனால்ட் கார்களுக்கு இலவச கார் பரிசோதனை முகாம்..!

இந்தப் முகாமில் நடத்தப்படும் கார் பரிசோதனையில் லேபர் சார்ஜ் மட்டும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், பழுதுகள் இருப்பின் அதனை சரிசெய்ய தேவையான உதிரிபாகங்கள், லேபர், டயர்கள் உள்ளிட்ட ஆச்சஸரிகள் மீது சிறப்பு தள்ளுபடி ஆகியவற்றையும் அளிக்க உள்ளதாக ரெனால்ட் தெரிவித்துள்ளது.

ரெனால்ட் கார்களுக்கு இலவச கார் பரிசோதனை முகாம்..!

இந்த முகாமில் கார் பராமரிப்பு குறித்த அடிப்படை பயிற்சிகள், கார்கள் குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை தகவல்கள், மற்றும் கார் ஓட்டும் விதிமுறைகள் ஆகியவை

குறித்தும் கற்றுத்தர உள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரெனால்ட் கார்களுக்கு இலவச கார் பரிசோதனை முகாம்..!

நாடு முழுவது ரெனால்ட் நிறுவனத்திற்கு 270 விற்பனை நிலையங்களும், 230 சர்வீஸ் நிலையங்களும் உள்ளது. இந்த எண்ணிக்கையை 320 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது ரெனால்ட்.

ரெனால்ட் கார்களுக்கு இலவச கார் பரிசோதனை முகாம்..!

இந்த முகாமில் கலந்துகொள்ளும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் அளித்து குஷிப்படுத்த திட்டமிட்டுள்ள ரெனால்ட் இதன் மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

ரெனால்ட் கார்களுக்கு இலவச கார் பரிசோதனை முகாம்..!

நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட தேர்ந்த டெக்னீசியன்கள் மூலம் இந்த முகாமில் இலவச கார் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஒவ்வொரு வாடிக்கையாளர் மீதும் தனிக்கவனம் செலுத்த உள்ளதாக ரெனால்ட் மேலும் கூறியுள்ளது.

English summary
Read in Tamil about reault's free car service camp with discounts and gifts.
Story first published: Friday, April 14, 2017, 11:36 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos