சத்தமே இல்லாமல் இந்தியாவில் இருந்து நடையை கட்டும் ரெனால்ட்... காரணம் இதுதான்..!!

Written By:

இந்தியாவில் ப்ரீமியம் எஸ்யூவி செக்மென்டிற்கு மேலும் வலு கூட்ட ரெனால்ட் நிறுவனம் கேப்டூர் எஸ்யூவி காரை சமீபத்தில் வெளியிட்டது.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

புதிய கார்களை அறிமுகம் செய்து வரும் ரெனால்ட், சத்தமே இல்லாமல் பயன்பாட்டில் இருக்கும் அதன் மற்ற கார்களின் விற்பனையை நிறுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

இதில் ஹேட்ச்பேக் மாடலான ஸ்காலா, ஃபூலியன்ஸ் செடான் மற்றும் எஸ்யூவி கோலியோஸ் போன்ற கார்களின் விற்பனை இந்தியாவில் ரெனால்ட் நிறுத்தியுள்ளது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

கிவிட், லாட்ஜி, டஸ்டர் மற்றும் அடுத்து வரவுள்ள கேப்டூர் ஆகிய நான்கு மாடல்கள் மட்டுமே இந்தியாவில் ரெனால்ட் தயாரிப்பாக விற்பனை ஆகி வருகிறது.

குறிப்பிடப்பட்ட மாடல்களை நிறுத்தியது தொடர்பான அறிவிப்பை ரெனால்ட் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு முன்பு கால்பதித்தது. அவற்றில் அந்நிறுவனத்தின் பெயர் சொல்லும் மாடல்களாக கிவிட், டஸ்டர் மற்றும் லாட்ஜி கார்கள் இடம்பெற்றுள்ளன.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

இவற்றுடன் இந்தியளவில் ரெனால்டிற்கான சந்தையை பெருக்குவதிலும் அந்நிறுவனம் கவனத்துடன் உள்ளது.

அதற்காக வருடத்திற்கு ஒரு புதிய காரை விற்பனைக்கு அறிமுகமாகும் என ரெனால்ட் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுமித் சுவாஹ்னே தெரிவித்துள்ளார்.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

குறைந்தளவிலான விற்பனை திறனை பெற்ற மாடல்களை மட்டுமே ரெனால்ட் நிறுத்தியுள்ளது. அதில் பிளஸ் மற்றும் ஸ்காலா கார்கள் நிஸான் மைக்ரா மற்றும் சன்னி மாடல்களின் மரு உருவம்.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

இதன் காரணமாக இந்தியாவில் இந்த இரண்டு மாடல்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் சர்வீஸ் பெறுவதில் பிரச்சனை இருக்காது என்பது ரெனால்டின் கணிப்பு.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

ரெனால்ட் நிறுத்தியுள்ள மற்ற மாடல்களான ஃப்லுயன்ஸ் மற்றும் கோலியோஸ் மாடல்கள் முற்றிலும் சிபியூ ஃபிளாட்ஃபாரமின் கீழ் தயாரிக்கப்பட்டது. அதனால் இதற்கான சர்வீஸ் பிரச்சனையும் இருக்காது.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

வருடத்திற்கு ஒரு மாடல் என்ற ரீதியில் புதிய கார்களை அறிமுகப்படுத்துவது மட்டுமில்லாமல், மேலும் பல திட்டங்களை இந்திய சந்தைக்காக ரெனால்ட் உருவாக்கி வருகிறது.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

அதன்படி, ரெனால்டின் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2018ம் ஆண்டிலும், எம்பிவி ரகத்தில் தயாராகி வரும் மற்றொரு கார் 2019ம் ஆண்டிலும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறியதன் மூலம் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல படிப்பினைகளை கற்றுக்கொண்டு விட்டன.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

இதன் காரணமாக குறைந்த விற்பனை திறனை பெற்ற நிறுவனங்கள், அதனுடைய விற்பனையை அதிகரிக்கும் புதிய யுக்திகளையும் கையாண்டு வருகிறது.

பிரபல கார் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது ரெனால்ட்..!

அதன் முதல் முயற்சியாகவே ரெனால்ட் அதன் குறைந்த விற்பனை திறனை பெற்ற மாடல்களை நீக்கி விட்டு, ஆண்டுக்கு ஒரு புதிய காரை வெளியிடும் முடிவை எடுத்துள்ளது.

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Read in Tamil: Renault India has silently discontinued several other cars in India as well. Click for Details...
Story first published: Monday, October 9, 2017, 13:20 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark