சீனாவில் சின்சியராக நடக்கும் புதிய ரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்ந்தம் காரின் சோதனை ஓட்டம்: ஸ்பை புகைப்படங்கள்!

Written By:

ஆடம்பர கார் உலகில் ரோல்ஸ்-ராய்ஸின் ஃபான்ந்தம் மாடல் காருக்கு என்றுமே மிகப்பெரிய வியாபார வட்டம் உண்டு.

அந்த வகையில் ஃபான்ந்தம் வரிசையில் 8வது தலைமுறைக்கான காரை லண்டனில் ஜூலை மாதம் ரோல்ஸ்-ராய்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

அதற்கு முன்னதாக ஃபான்ந்தம் லிமோசின் காருக்கான டீசரை வெளியிட்ட ரோல்ஸ்-ராய்ஸ், அதில் காரின் வெளிப்புற மற்றும் உட்புற கட்டமைப்புகளை குறித்தும் காட்சிப்படுத்தி இருந்தது.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

ரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்ந்தம் லிமோசான் டீசர் வெளியான உடன் அதற்கான வரவேற்பு தொடர்ந்து குவிந்து வருகிறது.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

இந்நிலையில் புதிய ஃபான்ந்தம் காரின் சோதனை ஓட்டம் சீனாவில் மேற்கொள்ளபட்டு வருவதாக ஒருசில ஸ்பை புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையதளங்களை ஆக்கிரமித்து உள்ளன.

டீசர் மற்றும் ஸ்பை புகைப்படங்கள் என அடுத்தடுத்து வெளியாகி இந்த காரின் மீது மாஸான எதிர்பார்ப்பை உலக ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

சீனாவின் முக்கிய சாலைகளில் வலம் வந்த இந்த காரை முதலில் ரோல்ஸ்-ராய்ஸ் என யாரும் அடையாளம் காணவில்லை.

ஆனால் இதனுடைய முன்பக்க க்ரில், மொத்த நீளம் ஆகியவற்றை வைத்து இது ரோல்ஸ்-ராய்ஸ் தான் எனவும், பிறகு ஃபான்ந்தம் மாடல் என்பதையும் பலர் கண்டறிந்தனர்.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

இந்த புகைப்படங்களை பார்த்து, இந்த கார் ஃபான்ந்தம் மாடல் தானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

அந்தளவிற்கு புதிய ஃபான்ந்தம் காருக்கான வடிவமைப்பு பணிகளில் ரோல்ஸ்-ராய்ஸ் பல பரிணாம மாற்றங்களை உருவாக்கியுள்ளது.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

காரின் முன்பக்க க்ரீல், மற்ற ரோல்ஸ்-ராய்ஸ் தயாரிப்புகளை விட அளவில் சற்று பெரியதாக உள்ளது. டான் மாடலில் இருப்பது போன்ற பறந்த தன்மைக்கொண்ட டிசைனில் முகப்பு விளக்குகள் இடம்பெற்றுள்ளன.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

அதேபோல புதிய ஃபான்ந்தம் காரில் காற்றை உள்ளிழுக்கும் பம்பர்கள் சிறியளவில் உள்ளன. அது கொஞ்ச முன்னே கொண்டு வரப்பட்டு, மேலும் வலது இடதுபக்க பக்கவாட்டுகளில் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

முன்பகுதி பம்பருக்கு ஏற்றவாறான செவ்வகமான வட்டவடிவமைப்பில் காரின் பின்பகுதிக்கான எல்.இ.டி விளக்குகள் உள்ளன. இது காருக்கு ஒரு திருத்தமான தோற்றத்தை தருகிறது.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

காரின் டாஷ்ஃபோர்டு குறித்த படங்களும் இந்த ஸ்பை புகைப்படங்களில் உள்ளன. தற்போதைய ஃபான்ந்தம் கார்களில் உள்ள அதே ஸ்டீயரிங் தான் இந்த புதிய மாடலிலும் உள்ளது.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

மேலும், ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் அடையாளங்களில் ஒன்றான அனலாக் டயல்கள் இதிலும் இருப்பதை ஸ்பை படங்கள் மூலம் நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

சீனாவில் சர்பரைஸ் தந்த ரோல்ஸ்-ராய்ஸ் புதிய ஃபான்ந்தம் கார்!

மேம்படுத்தப்பட்ட 6.75 லிட்டர் வி12 எஞ்சின் அல்லது டான் மாடல் காரில் இருக்கக்கூடிய வி12 ட்வின் டர்போசார்ஜிடு 6.6 லிட்டர் எஞ்சின் என இரண்டில் ஏதாவது ஒன்றை புதிய ரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்ந்தம் காரில் பொருத்தப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Rolls-Royce Phantom Spotted Testing In China. Interior Revealed. Click For More Details...
Story first published: Friday, June 2, 2017, 16:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos