ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் இறங்கபோவதில்லை; ரோல்ஸ்-ராய்ஸ் திட்டவட்டம்..!!

ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் இறங்கபோவதில்லை; ரோல்ஸ்-ராய்ஸ் திட்டவட்டம்..!!

By Azhagar

ஹைஃபிரிட் காய்ச்சல் ஆட்டோமொபைல் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஹைஃபிரிட் காரை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் நாட்டமில்லை: ரோல்ஸ்-ராய்ஸ்

ஆடம்பர காரை விரும்பும் பலர் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் இறங்குமா என்பதை உற்று நோக்கி வருகின்றனர்.

பல ஆட்டோமொபைல் செய்தி ஊடகங்களும் ரோல்ஸ்-ராய்ஸ் ஹைஃபிரிட் கார்களை தயாரித்தால் அதை தலைப்புச் செய்தியாக்க காத்திருக்கின்றன.

ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் நாட்டமில்லை: ரோல்ஸ்-ராய்ஸ்

இத்தனை பேரது எதிர்பார்ப்புகள் மற்றும் காத்திருப்பிற்கு தொடக்கப்புள்ளிகளை வைக்காமல், முற்றுப்புள்ளி வைத்து காரியத்தை முடித்து வைத்துவிட்டது ரோல்ஸ்-ராய்ஸ்.

ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் நாட்டமில்லை: ரோல்ஸ்-ராய்ஸ்

ஆம், ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் ஈடுபடபோவதில்லை என ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இன்றைய ஆட்டோமொபைல் உலகின் தலைப்புச்செய்தியாகி உள்ளன.

ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் நாட்டமில்லை: ரோல்ஸ்-ராய்ஸ்

'ஆட்டோ கார்' ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்து பேசிய ரோல்ஸ்-ராய்ஸின் தலைமை அதிகாரி முல்லர் ஓட்வோஸ் மின்சார கார் தயாரிப்பு தான் எதிர்காலம், இதற்கு இடையில் ஹைஃபிரிட்டில் ரோல்ஸ்-ராய்ஸ் கவனம் செலுத்த போவதில்லை என தெரிவித்திருக்கிறார்.

ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் நாட்டமில்லை: ரோல்ஸ்-ராய்ஸ்

"எஞ்சின்கள் இல்லாத கார் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலங்கள் உள்ளன. எது எப்போது எப்படி நடக்கும் என்பதை தீர்மானிக்க முடியாது. ஆனால் எஞ்சினுக்கான தேவை குறைந்துக்கொண்டே வருகிறது" எனவும் முல்லர் ஓட்வோஸ் பேசியுள்ளார்.

ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் நாட்டமில்லை: ரோல்ஸ்-ராய்ஸ்

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என்று உலகளவில் தனி இடம் உள்ளது. அதை பொறுத்தவரை மின்சார கார்கள் தான் எதிர்காலம் என்றாலும், ஹைஃபிர்ட் கார்களுக்கு ஒரு பெரிய சந்தை உருவாகுமா என்று அந்நிறுவனம் சந்தேக்கிறது.

ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் நாட்டமில்லை: ரோல்ஸ்-ராய்ஸ்

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை உலகளவில் பல கார் பிரியர்களிடம் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன.

குறிப்பாக அந்நிறுவனத்திடம் இருந்து, சத்தமே இல்லாமல் செயல்படும் மின்சார கார், தானாக இயங்கும் திறன் பெற்ற கார் போன்றவற்றை தயாரிக்க பல தரப்பினரிடமிருந்து கோரிக்கை வருகின்றன.

ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் நாட்டமில்லை: ரோல்ஸ்-ராய்ஸ்

ஆனால் இது போன்ற தொழில்நுட்பம் பெற்ற கார்களை தயாரிப்பதில் ரோல்ஸ்-ராய்ஸ் நிலை என்ன என்பதில் தெளிவில்லை என்றாலும், தலைமை அதிகாரி முல்லர் ஓட்வோஸ் ஹைஃபிரிட் கார்கள் தயாரிப்பதை முற்றிலுமாக மறுத்து விட்டார்.

ஹைஃபிரிட் கார் தயாரிப்பில் நாட்டமில்லை: ரோல்ஸ்-ராய்ஸ்

ஆனால் இந்த சந்திப்பின் போது, பேசிய தலைமை அதிகாரி முல்லர் ஓட்வோஸ், தற்போது தான் ஹைஃபிரிட் கார்கள் தயாரிப்பதில் எண்ணமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஒருவேளை எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகமாக இருந்தால், இந்த முடிவை மாற்றிக்கொள்ளும் எண்ணத்திலும் ரோல்ஸ்-ராய்ஸ் உள்ளது.

Most Read Articles
English summary
Rolls-Royce Will Not Make Hybrid Cars But There Will Be In-Between Steps For Electrification. Click for Details...
Story first published: Monday, July 3, 2017, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X