ரூ1.07 கோடி ஜீப் கிரான்டு செரோகி காரை மகனின் முதல் பிறந்த நாளுக்காக வாங்கிய சைஃப் அலி கான்..!!

Written By:

ஜீப் நிறுவனம் இந்தியாவில் ஹிட்டா..? என்று பலரும் கேட்கின்றனர். அதற்கான பதிலை சமீபத்தில் நடிகர் சைஃப் அலிகான் சொல்லியுள்ளார்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

அமெரிக்காவின் பிரபலமான ஜீப் வாகன தயாரிப்பு நிறுவனம், 2016ல் இந்தியாவில் கால்பதித்தது.

முக்கியமாக அதன் தயாரிப்பான காம்பஸ் எஸ்யூவி, பலருக்கும் விருப்பமான காராக மாறிப்போனது.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

பல இந்திய வாடிக்கையாளர்களை போல நடிகர் சைஃப் அலிகானும் ஜீப் நிறுவனத்தின் ரசிகராக மாறியுள்ளார்.

ஜீப் இந்தியாவில் அறிமுகமான போது, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கிரான்டு செரோகி எஸ்.ஆர்.டி என்ற மாடலை வெளியிட்டது.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

தற்போது இந்த காரை நடிகர் சைஃப் அலி கான் வாங்கியுள்ளார் ரூ. 1.07 கோடி (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை பெற்ற இந்த கார் ஃபிராமன்ஸ் எடிசனாகும்.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

அதிவேக செயல்திறன் மற்றும் ஆஃப்-ரோட்டில் செலுத்துவதற்கான ஆற்றல்களை ஒருங்கே பெற்றுள்ள இந்த காரை, சைஃப் அலி கானிடம் நேரடியாக ஒப்படைத்தார் ஃபியட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெவின் ஃபைலன்.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

பிஎம்டபுள்யூ மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனங்களுக்கு, ஏஎம்ஜி மற்றும் எம் போன்ற பேட்ஜ் என்பது அந்நிறுவனங்களின் உயரிய தயாரிப்பை குறிக்கிறது.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

அதேபோல ஜீப் நிறுவனத்தின் உயரிய தயாரிப்புகள் எஸ்.ஆர்.டி என்று குறிப்பிடப்படுகிறது. அதனால் சைஃப் அலிகான் வாங்கியுள்ள கிரான்டு செரோகி எஸ்.ஆர்.டி உயரிய மாடலாகும்.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

6.4 லிட்டர் ஹெச்.இ.எம்.ஐ வி8 பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ள இந்த கார் அதிகப்பட்சமாக 469 பிஎச்பி பவர் மற்றும் 650 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் திறனை பெற்றுள்ள இந்த கார் துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 4 விநாடிகளில் எட்டிவிடும்.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

5 பேர் அமரும் வகையிலான இந்த காரின் உள்கட்டமைப்புகளில் நேவிகேஷன், மூன்றுவித தட்பவெட்ப நிலையை பரமாரிக்கும் கிளேமேட்டிக் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை பெற்ற 7-இஞ்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபொடெயிமெண்ட் சிஸ்டம் உள்ளது.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஏர்பேகுகள் ஆகியவற்றுடன், டயர்களில் அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கும் தொழில்நுட்ப உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

மாருதி எஸ்டீம் காரை முதலில் பயன்படுத்தி வந்த சைஃப் அலி கான், பிறகு லெஸ்க்ஸ் 470 எஸ்யூவி, பிஎம்டபுள்யூ 7 சிரீஸ், டொயோட்டா லேண்டு க்ரூஸர் போன்ற ஆடம்பர கார்களை அடுத்தடுத்து வாங்கினார்.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

பிறகு ஃபோர்டு மஸ்டாங் காரை தனது கராஜில் இணைத்துக்கொண்ட சைஃப் அலி கான், இந்தியாவின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்றவாறு காரை வலது பக்க டிரைவிங் முறைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டார்.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

இத்தனை கார்களில் சைஃப் அலி கானின் விருப்பத்திற்குரிய கார் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இதற்கிடையில் சமீபத்தில் ஆடி ஆர்8 ஸ்பைடர் காரை சைஃப் அலி கான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

பாலிவுட் நடிகை கரீனா கபூரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சைஃப் அலி கான் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தைக்கு தந்தையானார்.

சைஃப் அலி கான் கராஜில் இணைந்த ஜீப் கிரான்டு செரோகி கார்..!!

மகனுக்கு தைமூர் அலி கான் பட்டோடி என்று பெயர் சூட்டிய இந்த நட்சத்திர தம்பதி, விரைவில் தைமூரின் முதல் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். அதற்காகவே ஜீப் கிரான்டு செரோகி எஸ்.ஆர்.டி காரை சைஃப் அலி கான் வாங்கியுள்ளார்.

மேலும்... #ஜீப் #jeep
English summary
Read in Tamil: Actor Saif Ali Khan Buys Rs 1.07 Crore Jeep Grand Cherokee SUV Car. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos