இரண்டாவது இந்திய பாஜா ரேலி பந்தயம் ஜெய்சல்மரில் தொடக்கம்

Written By:

இந்தாண்டிற்கான இந்திய பாஜா ரேலி போட்டிகள் 2வது முறையாக ராஹஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடக்கிறது. டக்கார் சவால் வரிசைகளுடன் நடத்தப்படும் இந்த பந்தயப்போட்டிகள் இன்று தொடங்கி 9ம் தேதி வரை நடக்கிறது.

இந்தியா பாஜா ரேலி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது

இந்திய பாஜா ரேலி பந்தயம் இரண்டாவது முறையாக இந்தாண்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடக்கிறது. டக்கார் சவால் வரிசைகளுடன் நடத்தப்படும் இந்த பந்தயப்போட்டி இன்று தொடங்கி 9ம் தேதி வரை நடக்கிறது.

இந்தியா பாஜா ரேலி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது

இந்திய பாஜா ரேலி பந்தயத்தில் வெற்றிபெறக்கூடியவர் டக்கார் ரேலி போட்டிகளில் உலகளவில் பிரபலமான ஆஃப்ரிக்குயா மெர்ஜௌகா ரேலியில், கட்டணங்கள் ஏதுமின்றி இலவசமாக கலந்துக்கொள்ளலாம். அடுத்தாண்டு மொரோக்கோவில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்தியா பாஜா ரேலி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது

இருச்சக்கர வாகனங்களுக்கு மட்டுமில்லாமல், நான்கு சக்கரங்களுக்கும் இந்திய பாஜா ரேலியில் பந்தயப் போட்டி நடத்துப்படுகின்றன. இந்த பிரிவில் வெற்றி பெறுபவர், பாலைவனப் பகுதிகளில் மாருதி சூசிகி நிறுவனம் நடத்தும் டெஸர்ட் ஸ்ட்ராம் பந்தயப் போட்டியில் இலவசமாக பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்தியா பாஜா ரேலி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது

இருசக்கரங்களுக்கான இந்தியா பாஜா ரேலி போட்டியில் ஹீரோ மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணியை சேர்ந்த ஜாக்கியம் ரோட்ரிகுவிஸ் மற்றும் டிவிஎஸ் அணியை சார்ந்த அட்ரின் மெட்ஜி மற்றும் அரவிந்த கே.பி ஆகியோர் முதன்மையான போட்டியாளர்களாக உள்ளனர்.

இந்தியா பாஜா ரேலி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது

டெஸ்டர்ட் ஸ்ட்ராம் ரேலி போட்டியில் பங்கேற்ற போது கழுத்தில் காயம் ஏற்பட்டதால், இருசக்கர வாகனங்களுக்கான பந்தயங்களில் இந்தியாவின் முன்னணி வீரராக உள்ள சி.எஸ். சந்தோஷ் இந்தாண்டின் இந்தியா பாஜா ரேலி போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்தியா பாஜா ரேலி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது

இவர்களை தாண்டி, இந்தியா சார்பில் தேசிய அளவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் சாதித்து வரும் ஆர். நட்ராஜ் மற்றும் அப்துல் வாஹித் தன்வீர் ஆகியோர் டி.வி.எஸ் அணி சார்பாக இந்தியா பாஜா ரேலி போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா பாஜா ரேலி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது

இந்தியா மற்றும் மற்ற நாடுகள் என கிட்டத்தட்ட 100 போட்டியாளர்கள் இந்தியா பாஜா ரேலி போட்டியில் பங்கேற்றுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் இன்று தொடங்கியுள்ள இப்போட்டிகள் வரும் 9ம் தேதி வரை பல்வேறு சுற்றுகளுடன் நடைபெறுகிறது.

இந்தியா பாஜா ரேலி தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது

டக்கார் ரேலி போட்டிகளின் 5 முறை சேம்பியனான மார்க் ஹோமா தலைமையில் இந்தியா பாஜா ரேலி போட்டிக்கான பிரோமோஷன் நிகழ்ச்சிகள் ஜெய்சல்மரில் நடைபெற்றன.

அப்போது பேசிய அவர் "இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியடைந்திருப்பதில் மகிழ்ச்சி. இதுபோன்ற போட்டிகள் வளரும் வீரர்களுக்கு நிச்சயம் மைகல்லாக அமையும், கடினமான டக்கார் ரேலி போட்டிகளில் கலந்துகொள்ள வழிவகுக்கும்" என்று கூறினார்.

English summary
The second edition of the India Baja rally will be flagged off from Jaisalmer on April 7, 2017. Read more to know about the toughest rally in India.
Story first published: Friday, April 7, 2017, 15:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark