2025ல் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் முதல் மின்சார ஸ்போர்ட்ஸ் மாடல் கார்.! முழு தகவல்கள்

Written By:

ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் இனி மின்சார கார்கள் தான் என்பது உறுதியாகிவிட்டது. அதற்கான உற்பத்தியில் புதியதாக இணைந்திருக்கிறது ஸ்கோடா.

ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய மின்சார கார்: ஸ்கோடா அறிவிப்பு

2025ம் ஆண்டிற்குள் ஸ்கோடா தனது ஸ்போர்ட்ஸ் வெர்ஷனில் உருவாகக்கூடிய முதல் மின்சார காரை அறிமுகம் செய்ய நாள் குறித்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய மின்சார கார்: ஸ்கோடா அறிவிப்பு

உலக ஆட்டோமொபைல் சந்தைக்கும் ஸ்கோடா 5 மாடல் மின்சார கார்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு பிறகு 2025ல் மின்சார கார் விற்பனையை அந்நிறுவனம் துரிதப்படுத்தவுள்ளது.

ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய மின்சார கார்: ஸ்கோடா அறிவிப்பு

ஸ்கோடாவின் இந்த அறிவிப்பு குறித்த செய்தியை வெளியிட்டுள்ள ஆட்டோ எக்ஸ்பிரஸ் செய்தித்தளம், ஸ்கோடா தனது மின்சார வாகனத்தை வோக்ஸ்வேகனின் MEB முறையில் உருவாக்கவுள்ளதாக ஆட்டோ எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய மின்சார கார்: ஸ்கோடா அறிவிப்பு

சமீபத்திய மின் சாதனத்தை வைத்து மேம்படுத்தப்படக்கூடிய முறையில் மின்சாரக் கார்களை உருவாக்குவது தான் வோக்ஸ்வேகனின் ஐடியா.

ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய மின்சார கார்: ஸ்கோடா அறிவிப்பு

அதாவது, மரபு சார் எரிசக்தி கொண்ட இயங்கும் வாகனங்களுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் விதத்தில் மின்சார கார் திறனின் இருக்கும். அது தான் MEB முறை உருவாக்கப்படும் கார்களில் தொழில்நுட்பம்.

ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய மின்சார கார்: ஸ்கோடா அறிவிப்பு

பின் சக்கரங்களை மையப்படுத்தி இயங்கும் வகையில் தயாரிக்கப்படும் இந்த கார், சிங்கிள் மோட்டார் திறனில் இயங்கும்.

ஒரே ஒரு மோட்டார் தான் மொத்த காரின் திறன் என்பதால், மின்சார கார் எடை குறைந்த அளவில் தான் இருக்கும்.

ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய மின்சார கார்: ஸ்கோடா அறிவிப்பு

1970ம் ஆண்டில் ஸ்கோடா தயாரித்த 110ஆர் ஸ்போர்ட்ஸ் காரை அடிப்படையாக வைத்து இதனுடைய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய காரை மாடலாக வைத்து புதிய காரை தயாரிப்பதற்கு பற்றி ஸ்கோடா, 120 ஆண்டு கால வரலாற்றிற்கு இந்த மின்சார கார் சமர்ப்பணம் என்று கூறியுள்ளது.

ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய மின்சார கார்: ஸ்கோடா அறிவிப்பு

ஸ்கோடா தயாரிக்கவுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் மாடல் காரின் கட்டமைப்பு பணிகள் குறித்து வேறதுவும் தெரிவிக்கவில்லை.

எனினும் இந்நிறுவனம் தயாரித்து வரும் ஸ்கோடா சிட்டிகோ என்ற மின்சாரக் கார் வரும் 2019ம் ஆண்டில் வெளியிடப்படவுள்ளது.

ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய மின்சார கார்: ஸ்கோடா அறிவிப்பு

அதேபோல விஷன் இ கான்செப்டில் எஸ்.யூ.வி மாடலில் ஸ்கோடா தயாரித்து வரும் மற்றொரு மின்சாரக் கார் 2020ம் ஆண்டு வெளியிடப்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் மாடலில் புதிய மின்சார கார்: ஸ்கோடா அறிவிப்பு

இந்த மாடல்கள் மட்டுமின்றி மேலும் ஒரு மின்சார எஸ்.யூ.வி காரை ஸ்கோடா தயாரிக்கவுள்ளது. அதனுடைய வெளியீடு இந்த ஸ்போர்ட்ஸ் மின்சார காருக்கு முன்னதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Czech automaker Skoda has confirmed that it is planning to develop an all-electric sports car. The electric car will be based on the MEB platform.
Story first published: Thursday, May 25, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark