யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக புதிய எஸ்யூவி மாடலை களமிறக்கும் ஸ்கோடா!

Written By:

மிக நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்து வரும் யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக புதிய எஸ்யூவி மாடலை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது. ஸ்பெயின் நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய எஸ்யூவியை ஸ்கோடா ஆட்டோ நேற்று அறிமுகம் செய்தது. இந்த எஸ்யூவியின் படங்கள், சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி இதுதான்!

கரோக் என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக வரும் இந்த புதிய எஸ்யூவி வடிவமைப்பில் முற்றிலும் புத்தம் புதிய மாடலாகவே இருக்கிறது.

யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி இதுதான்!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களை தாங்கி வந்திருக்கிறது இந்த புதிய கரோக் எஸ்யூவி. அதாவது, மினி கோடியாக் எஸ்யூவி போலேவே தோற்றமளிக்கிறது கரோக் எஸ்யூவி.

யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி இதுதான்!

புதிய தலைமுறை ஸ்கோடா கார்களின் டிசைன் தாத்பரியங்களுடன் கவர்கிறது இந்த புதிய கரோக் எஸ்யூவி. முன்புற க்ரில் அமைப்பு, ஹெட்லைட், பம்பர், பின்புற டெயில் லைட் என அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி இதுதான்!

உட்புறத்தில் டச்ஸ்கிரீன் வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ட்யூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற வசதிகளும் இடம்பெற்று இருக்கிறது.

யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி இதுதான்!

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக விற்பனைக்கு வருகிறது. பின் இருக்கையை மடக்கிக்கொள்ளும் வசதி இருப்பதால், பூட் ரூம் இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும். பார்க் அசிஸ்ட், லேன் அசிஸ்ட், ப்ளைன்ட், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது.

யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி இதுதான்!

இந்த காரில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களும், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கும். உயர் வகை மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெறும் என்று தெரிகிறது.

யெட்டி எஸ்யூவிக்கு மாற்றாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி இதுதான்!

இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்த புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Czech automaker Skoda has revealed its new compact crossover, the Karoq. The crossover will go on sale in Europe by the second half of 2017.
Story first published: Friday, May 19, 2017, 12:20 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos