ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

Written By:

டிசைனிலும், கட்டுமானத் தரத்திலும் புகழ்பெற்ற ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் முதல்முறையாக 7 இருக்கைகள் கொண்ட கோடியாக் என்ற புதிய பிரிமியம் எஸ்யூவி மாடலை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

அண்மையில் ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இணையப்பக்கத்திலும் இடம்பெற்றுவிட்ட இந்த எஸ்யூவி எப்போது வரும் இந்திய வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், இந்த அட்டகாசமான எஸ்யூவி மாடலுக்காக காத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலுக்குத் தீணி போடும் விதத்தில், தற்போது இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

இந்த புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகி வரும் ஸ்கோடா ஆக்டேவியா, சூப்பர்ப் போன்ற கார்களும் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டவைதான்.

 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

மிகச் சிறப்பான டிசைன் அம்சங்கள் ஸ்கோடா கோடியாக் மீது ஆவலை கிளப்பும் விஷயம். ஸ்கோடா கார்களுக்கு உரிய மிக நேர்த்தியானதாகவும், பிரத்யேகமான க்ரில் அமைப்பு எல்லோரையும் கவர்கிறது. முன்புறம் மட்டுமின்றி, பக்கவாட்டு டிசைனும், பின்புற டிசைனும் மிகச் சிறப்பாகவும், சரியான விகிதத்திலும் இருப்பது கவர்கிறது.

 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் உயிர் கொடுத்து வரும் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது மட்டும் இல்லாமல், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் வெளிப்புற டிசைன் மிக நேர்த்தியாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தோம். உட்புற டிசைனும் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், அனைத்து வேரியண்ட்டுகளிலும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

அவுரங்காபாத் நகரில் உள்ள ஆலையில் புதிய ஸ்கோடா கோடியாக் அசெம்பிள் செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலான விலையில் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது.

 ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது!

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். மிக சிறப்பான டிசைன் அம்சங்கள் இந்த எஸ்யூவிக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Reports suggests that Skoda dealerships in India are accepting bookings with an amount of Rs 1 lakh.
Story first published: Tuesday, May 2, 2017, 11:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark