புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

Written By:

பெரும் ஆவலை தூண்டியிருக்கும் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்தியாவின் பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்ற பல ஜாம்பவான் மாடல்கள் ஏற்கனவே சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் போட்டியாக புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியும் விரைவில் களமிறங்க இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

அடுத்த மாதம் 4ந் தேதி புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வடிவமைப்பு, வசதிகளில் மிகச் சிறந்த தேர்வாக வரும் இந்த புதிய எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

Recommended Video - Watch Now!
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா கார்கள் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய எம்க்யூபி பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஸ்கோடா கார்களின் பாரம்பரியமான பட்டர் ஃப்ளை க்ரில் அமைப்புடன் மிக நேர்த்தியான டிசைன் செய்யப்பட்ட மாடலாக வருகிறது புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. காரின் ஒவ்வொரு பகுதியும் மிகச் சிறப்பான வடிவமைப்பை பெற்றிருப்பது இதன் முக்கிய பலமாக இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி முதலில் டீசல் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் இந்த எஞ்சின் வழங்கும். பெட்ரோல் மாடல் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த எஸ்யூவியில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் வருகிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் அகன்ற தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும்.

புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஸ்கோடா ஆக்டேவியா கார் போன்றே இந்த புதிய எஸ்யூவியிலும் ஹேண்ட்ஸ்ஃப்ரீ பார்க்கிங் வசதி கொடுக்கப்பட்டு இருக்கும். இதன்மூலமாக, நெருக்கடியான இடங்களில் கார் தானாகவே பார்க்கிங் செய்து கொள்ளும் வசதி மிகச் சிறப்பானதாக இருக்கும்.

புதிய ஸ்கோடா கோடியாக் அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ரூ.27 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரையிலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எஸ்யூவி மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியை கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Autocar India reports that Skoda will launch its flagship SUV, the Kodiaq in India on October 4, 2017.
Story first published: Saturday, September 9, 2017, 16:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark