புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்துள்ளன. அந்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பெரும் ஆவலைத் தூண்டி இருக்கும் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி வரும் அக்டோபர் மாதம் 4ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் எஞ்சின் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன. அதன் விபரங்களை காணலாம்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் அடங்கிய குறிப்பேடு டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், இடம்பெற்றிருக்கும் விஷயங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியிலும் இதே எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், டிகுவானை விட 7 பிஎச்பி கூடுதல் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. டார்க் திறனில் மாற்றம் இல்லை. இந்த காரில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியானது 4,697 மிமீ நீளமும், 1,882மிமீ அகலமும், 1,676 மிமீ உயரமும் கொண்டது. இந்த எஸ்யூவியின் வீல் பேஸ் 2,791மிமீ ஆக இருக்கிறது. மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொண்டதாக வருகிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

இந்த எஸ்யூவியானது 140 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியைவிட 9 மிமீ குறைவான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டதாக வருகிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் 73 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் இருக்கும் நிலையில், இந்த எஸ்யூவியில் 63 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்குடன் வருகிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 270 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது. இரண்டாவது, மூன்றாவது வரிசையை மடக்கி வைத்தால், பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை 2,005 லிட்டர் வரை அதிகரித்து கொள்ளலாம்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ரூ.27 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Ahead of the launch, TeamBHP has got hold of the technical details of the India-spec Kodiaq. The leaked image reveals engine specifications and other details of the SUV.
Story first published: Saturday, September 23, 2017, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X