இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் ரூ.34.49 லட்சம் ஆர்மப விலையில் விற்பனைக்கு வந்தது..!!

Written By:

இந்திய வாடிக்கையாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்த ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் இன்று கோலாகலமாக விற்பனைக்கு வந்தது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

எக்ஸ்-ஷோரூம் இந்தியா மதிப்பில் ரூ.34.49 லட்சம் விலையில் கால்பதித்துள்ள கோடியாக் மாடல், ஸ்டைல் 4X4 ஏ.டி வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

நவம்பர் முதல் வாரம் கோடியாக் காருக்கான டெலிவரி தொடங்கும் என ஸ்கோடா கூறியுள்ளது. கூடுதலாக ரூ.59,999 விலையில் இந்த காருக்கான ரோடுசைடு அசிஸ்டென்ஸ் மற்றும் இதர பராமரிப்பு தேவைகள் வழங்கப்படுகின்றன.

சிறப்பம்சம் & மைலேஜ்

சிறப்பம்சம் & மைலேஜ்

டர்போசார்ஜிடு 2.0 லிட்டர் 4-சிலிண்டர் எஞ்சினை பெற்றுள்ள இந்த கார், 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டீசல் திறன் கொண்ட இந்த கார் மூலம் 148 பிஎச்பி பவர் மற்றும் 340 என்.எம் டார்க் திறன் வரை அதிகப்பட்சமாக கிடைக்கும்.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

இதிலுள்ள 7-ஸ்பீடு ஏடி கியர்பாக்ஸ், காரின் 4 சக்கரங்களையும் இயக்கும் திறன் கொண்டது. ஒரு லிட்டருக்கு அதிகப்பட்சமாக கோடியாக் கார் 16.25 கி.மீ மைலேஜ் கொடுக்கும் என ஸ்கோடா தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

4,697மிமீ நீளம், 18,882மிமீ அகலம் கொண்ட இந்த 1,655மிமீ உயரம் கொண்டது. மேலும் இதனுடைய கிரவுண்டு கிளயரன்ஸ் 188மிமீ.

காரின் பூட்டிற்கான தேவை 270 லிட்டர், அதை நாம் 1 மற்றும் 2 வரிசை இருக்கைகளை மடக்கிய பிற்பாடு 2,005 லிட்டர் வரை நீட்டித்துக்கொள்ளலாம்.

ஸ்கோடா கோடியாக் டிசைன் & அம்சங்கள்

ஸ்கோடா கோடியாக் டிசைன் & அம்சங்கள்

ஸ்கோடாவின் தனித்துவம் பெற்ற பட்டாம்பூச்சி கிரில் அமைப்புடன், நவீனமான ஐரோப்பிய வடிவமைப்பு உடன் கூடிய கூர்மையான மற்றும் வலிமையான அம்சங்களை கோடியாக் கார் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

இதுவரை இல்லாத பெரியளவிலான கிரில் இந்த காரிலுள்ளது, இது முற்றிலும் எல்.இ.டி வேலைபாடுகள் கொண்டுள்ளது. குறிப்பிடும்படியாக காரின் எல்.இ.டி ஃபாக் விளக்குகள் கார்னரிங் லைட்ஸாகவும் செயல்படும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

ஷார்ப் சி- எல்.இ.டி டெயில் விளக்குகள், 18- இஞ்ச் அலாய் சக்கரங்கள் போன்ற அம்சங்கள் இந்த காரில் உள்ளன. மேலும், கான்கேவ் அமைப்புடன் கூடிய பூட்லிட் இந்த காருக்கு 3டி லுக்கை தருகிறது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

கோடியாக் காரின் உள்கட்டமைப்பில் உயர்ரக வேலைப்பாடுகள் கொண்ட லெதர் முன்பக்க இருக்கையில் உள்ளது. இந்த இருக்கையை நாம் 12 விதமாக மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

மேலும் இந்த இருக்கைகளில் உள்ள ஹெட்ரெஸ்ட்டை தேவைக்கு ஏற்றவாறு மடித்துவைத்துக்கொள்ளலாம். பயணிகள் கால் நீட்டி தூங்கும் அளவிற்கான தேவைகளை காரின் முன்பக்க இருக்கைகள் வழங்குகின்றன.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

காரின் டாஷ்ஃபோர்டில் உள்ள 8.0 இஞ்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபொடெயின்மெண்ட் சிஸ்டம், 12 ஒலிபெருக்கிள் கொண்ட 750 வால்ட் கான்டன் ஆடியோ சிஸ்டமுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் கைப்பேசியை ஆக்ஸுடன் இணைக்கும் மிரர்ரிங் தொழில்நுட்பம், ப்ளூடூத் மற்றும் மல்டிஃபிள் எஸ்.டி கார்டு சப்போர்ட் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

பெரியளவிலான பனோரேமிக் சன்ரூஃப், இரண்டு கையுறை வைக்கும் பெட்டிகள் உட்பட பல பொருளை சேமித்து வைக்கும் பகுதிகள்,

குடையை வைக்கும் பகுதி, டோர் பிரொடக்டர்ஸ் மற்றும் மின்காந்த முறையில் இயங்கும் டார்ச் உள்ளது, இது காருக்கான பூட்லைட்டாகவும் இயங்கும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

ஸ்கோடா நிறுவனம் கோடியாக் காரில் 9 ஏர்பேகுகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, மின்சார மின்னணு உறுதிப்பாடு கட்டுப்பாடு, மின்னணு வேறுபாடு பூட்டு,

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

இழுவைக் கட்டுப்பாட்டு, ஆடியோ அமைப்பை பெற்ற மின்னணு பார்க்கிங் பிரேக் மற்றும் , பிரேக்குகளுக்குப் பின் ஏற்படும் தாக்கத்தை தடுக்க அல்லது குறைக்க உதவும் பல மோதல் பிரேக்கிங் அமைப்பு என பல்வேறு உயர்ரக பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்தது..!!

7 இருக்கைகள் கொண்ட முதல் ஸ்கோடாவின் எஸ்யூவி கார் என்ற பெருமையை கோடியாக் மாடல் பெற்றுள்ளது. மேலும் இதனுடைய விலை மற்றும் செயல்திறன் கட்டமைப்புகள் இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டவர் கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Read in Tamil: Skoda Kodiaq Lanched in India. Click for Price, Specifications, Images and More...
Story first published: Wednesday, October 4, 2017, 16:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark