இந்திய சந்தைக்கான ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் அறிமுகம்...முழுத் தகவல்கள்..!!

Written By:

2016ல் பெர்லின் நகர மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி ரக கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

ஸ்கோடா முன்னர் வெளியிட்ட சூப்பர்ப், ஆக்டேவியா மாடல்களை போன்று இந்த புதிய கோடியாக் எஸ்.யூ.வி காரும் எம்.கியூ.பி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

இந்திய சந்தையில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் வடிவமைப்பு மற்றும் செயல்திறனை பற்றிய தகவல்கள் இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் மூன்று வித எஞ்சின் தேவைகளில் தயாராகியுள்ளது. ஆனால் சர்வதேச சந்தையில் கோடியாக் 5 வித எஞ்சின் மாடல்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

சர்வதேச சந்தைக்கான ஐந்து வித எஞ்சின்களில் 2 டீசல் மற்றும் 3 பெட்ரோல் திறனில் இயங்கும் செயல்திறனை கொண்டவை.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

அவற்றில் முறையாக 6-ஸ்பீடு மேனுவல், 6ஸ்பீடு டிஎஸ்ஜி மற்றும் 7-ஸ்பீட் டிஎஸ்ஜி போன்ற கியர்பாக்ஸ்கள் எஞ்சினின் தேவைக்கு ஏற்ப பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

இந்தியாவில் வெளியாகும் ஸ்கோடா கோடியாக் காரில், 2 லிட்டர் திறனில் 4 சிலிண்டர் டர்போசார்ஜிடு பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் 177 பிஎச்பி பவர் மற்றும் 320 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

அதேபோல மற்றொரு மாடலான 2-லிட்டர் திறன் பெற்ற 4 சிலிண்டர் டர்போசார்ஜிடு டீசல் எஞ்சின் கொண்ட மாடல், 147 பிஎச்பி பவர் மற்றும் 340 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

அதேபோல இதன் டாப் மாடலாக டீசல் வேரியண்ட் ஸ்கோடா கோடியாக் உள்ளது. அது 187 பிஎச்பி பவர் மற்றும் 400 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

கியர்பாக்ஸ்களுக்கான தேவைகளில் மாடல்களுக்கு ஏற்றவாறு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் புதிய கோடியாக் கார் பிரோஜெக்ட்டர் ஹெட்லேம்ப், எல்.இ.டி லைட், ஸ்ப்லிட் எல்.இ.டி டெயில் லேம்ப் போன்றவை முன்புற தோற்றதில் உள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

பனோரோமிக் சன்ரூஃப், காரின் நிறத்திற்கு தகுந்தவாறான ரூஃப் டெயில்கள், பிளாக்கன்-அவுட் முன்பக்கம் மற்றும் பம்பர் ஆகியவை உள்ளன.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

ஏழு பேர் அமரக்கூடியளவில் தயாராகி உள்ள இந்த காரின் பக்கவாட்டில் எஸ்யூவி-யின் தோற்றத்திற்காக கூர்மையான கோடுகள் கொண்டும் மற்றும் ஸ்போர்ட் தரத்திலும் மெருகேற்றப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

காரின் உள்ளகட்டமைப்புகளில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என இரண்டிலும் இயங்கும் ஸ்கோடா கனெக்ட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் புளுடுத் போன்ற வசதிகள் உள்ளன.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

பாதுகாப்பு தேவைகளில் பார்க்கிங் அசிஸ்ட் , 24 டிரைவர்ஸ் அசிஸ்ட், டிராஃபிக் அலெர்ட் போன்ற அமைப்புகள் உள்ளன. இவற்றுடன் 270 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இருக்கைகளை தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்து 2005 லிட்டர் வரை பூட் ஸ்பேஸை நீட்டித்துக்கொள்ள முடியும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

தொழில்நுட்ப கட்டமைப்புகளில் எலெக்ட்ரிக் டெயில் கேட், டூயல் சோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட்டிக் கண்ட்ரோல், எஞ்சின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் அம்சம், மின்சாரத்தால் இயங்கும் ஓட்டுநர் இருக்கை, ஸ்டீயரிங் மவுண்டெட் ஆடியோ மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் தேவைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா கோடியாக்கின் உயர் ரக கார் மாடலில் ஆறு ஏர்பேகுகளுடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் இ.டி.பி போன்ற பாதுகாப்பு தேவைகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

இந்தியாவில் உள்ள ஸ்கோடாவின் தொழிற்சாலையிலே தயாரிக்கப்படும் கோடியாக் காரின் விலை ரூ.30 லட்சத்தில் இருந்து துவங்கலாம் என இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கருத்து நிலவுகிறது.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

ஸ்கோடா கோடியாக் காருக்கான முன்பதிவு இந்தியாவில் ரூ.20,000 முதல் ரூ.50,000-குள் கடந்த ஜூன் மாதம் முதலே தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்தன.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

ஆனால் இந்த எஸ்.யூ.வி ரக காருக்கான புக்கிங்கை பற்றி ஸ்கோடா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதைப்பற்றி ஸ்கோடாவின் டீலர்களும் செய்தி வெளியிடவில்லை.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி கார் இந்தியாவில் அறிமுகம்...!!

இந்தியாவில் செயல்திறன் மற்றும் வடிவமைப்புகளில் ஸ்கோடா கோடியாக் கார் ஃபோர்டு என்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மிட்சுபிஷியின் பஜோரோ ஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு சரிநிகர் போட்டியாக அமையும்.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Read in Tamil: Skoda Kodiaq Specifications And Details Revealed For Indian Market. Click for Details...
Story first published: Friday, August 11, 2017, 11:08 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark