மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

Written By:

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் பற்றிய முக்கியத் தகவல்கள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

கடந்த 2001ம் ஆண்டு ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விற்பனையில் இருக்கும் மூன்றாம் தலைமுறை மாடலில் சிறிய மாற்றங்களையும், கூடுதல் வசதிகளையும் சேர்த்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஸ்கோடா நிறுவனம்.

Recommended Video
New Mercedes E-Class Edition E India Launch, Specs, Features - DriveSpark
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

எஞ்சின் ஆப்ஷன், கியர்பாக்ஸ் மற்றும் வசதிகளை பொறுத்து 8 விதமான வேரியண்ட்டுகளில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் கிடைக்கும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

முகப்பு வடிவமைப்பில் மாற்றங்களை கண்டுள்ளது புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார். புதிய முகப்பு க்ரில், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகளுடன் வந்துள்ளது. முன்பக்கத்தில் புதிய பம்பர் அமைப்பும் வசீகரத்துக்கு வலு சேர்க்கிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 16 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 205/55 R16 அளவுடைய குட் இயர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்கோடா கார்களின் முத்தாய்ப்பான வடிவமைப்பிலான டெயில் லைட் க்ளஸ்ட்டரும், எல்இடி விளக்குகளும் பின்புறத்தின் முக்கிய மாற்றம்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

இன்டீரியரிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பியானோ பிளாக் என்ற பளபளப்பு மிகுந்த அடர் கருப்பு வண்ண சென்டர் கன்சோலில், 8 இன்ச் டச்ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாப்ட்வேர்களை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும். சாட்டிலைட் நேவிகேஷன் வசதியும் புதிய ஆக்டேவியா காரில் இருக்கிறது.

ஸ்மார்ட்போன் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்துவதற்கான பாஸ் கனெக்ட் என்ற வசதியும் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், மழை வந்தால் தானாக மூடிக்கொள்ளும் பானரோமிக் சன்ரூஃப், டியூவல் ஸோன் ஏசி, கூல்டு க்ளவ் பாக்ஸ், இரவில் கதவை திறக்கும்போது தரைப்பகுதியை பார்க்க உதவுவதற்கான விசேஷ விளக்குகள் மற்றும் கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட வசதிகள் குறிப்பிடத்தக்கவை.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில், தானியங்கி முறையில் பார்க்கிங் செய்யும் வசதியை முக்கியமாக குறிப்பிட்டு கூறலாம். ஓட்டுனரின் எந்த உதவியும் இல்லாமல், இந்த கார் மிகச் சிறப்பாக பார்க்கிங் செய்து விடும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

புதிய ஆக்டேவியா கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த காரின் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் லிட்டருக்கு 16.7 கிமீ மைலேஜை வழங்கும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

அடுத்து, 178 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வந்துள்ளது. இந்த மாடலில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் லிட்டருக்கு 15.1 கிமீ மைலேஜை வழங்கும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

டீசல் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸுடன் கிடைக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜையும், டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19.5 கிமீ மைலேஜையும் வழங்கும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் இபிடி., தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு வசதி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரானிக் டிஃபரென்ஷியல் லாக் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஓட்டுனர் அயர்வதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, கார் மோதலை கண்டறிந்து தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 8 உயிர்காக்கும் காற்றுப்பைகள் என பாதுகாப்பு அம்சங்களில் குறைவில்லாத காராக வந்துள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் பெட்ரோல் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை விபரங்களை காணலாம்.

வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை
ஆம்பிஷன் 1.4லி பெட்ரோல் மேனுவல் ரூ.15,49,405
ஸ்டைல் 1.4லி பெட்ரோல் மேனுவல் ரூ.17,49,605
ஸ்டைல் 1.8லி பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ரூ.18,59,429
ஸ்டைல் ப்ளஸ் 1.8லி பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ரூ.20,89,900
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்தது!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் டீசல் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை விபரங்களை காணலாம்.

வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை
ஆம்பிஷன் 2.0லி டீசல் மேனுவல் Rs 16,89,974
ஸ்டைல் 2.0லி டீசல் மேனுவல் ரூ.18,95,608
ஸ்டைல் 2.0லி டீசல் ஆட்டோமேட்டிக் ரூ. 20,49,619
ஸ்டைல் ப்ளஸ் 2.0லி டீசல் ஆட்டோமேட்டிக் Rs22,89,573
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2017 Skoda Octavia launched in India. Prices for the Skoda Octavia facelift in India start at Rs 15.49 lakh ex-showroom (pan India).
Story first published: Thursday, July 13, 2017, 14:02 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos