2017 ஸ்கோடா ஆக்டேவியா பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்...!!

Written By:

2002ம் ஆண்டில் இந்திய சந்தையில் கால் பதித்த ஸ்கோடா நிறுவனத்திற்கு, இன்றளவும் அதன் பெயர் சொல்லும் தயாரிப்பாக இருப்பது ஆக்டேவியா கார் தான்.

புதிய கட்டமைப்பு, அதே செயல்திறனுடன் 2017 ஸ்கோடா ஆக்டேவியா.!

ஸ்கோடாவின் மற்ற தயாரிப்பான எலென்ட்ரா, கரோலா ஆல்ட்டிஸ், க்ரூஸ், ஜெட்டா போன்ற கார்களில் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் வெளிவந்துவிட்டன.

ஆனால் இந்தியாவில் ஸ்கோடாவின் பெயர்சொல்லும் காரான ஆக்டேவியா மாடலில் அப்டேட் செய்யப்படமால் இருந்து வந்தது.

2013ல் ஆக்டேவியாவில் 2வது தலைமுறைக்கான கார், பல சர்வதேச நாடுகளில் வெளியான பின்னர் தான் இந்தியாவில் வெளியானது.

புதிய கட்டமைப்பு, அதே செயல்திறனுடன் 2017 ஸ்கோடா ஆக்டேவியா.!

கடந்த நான்கு ஆண்டுகளாக அப்படியே இருந்த ஆக்டேவியா காரில் கனிசமான சில மாற்றங்கள் செய்து ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இந்தாண்டில் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா.

கடந்த ஜனவரி மாதம் வியென்னாவில் நடைபெற்ற கார் கண்காட்சியில் இந்த புதிய ஆக்டேவியா மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய கட்டமைப்பு, அதே செயல்திறனுடன் 2017 ஸ்கோடா ஆக்டேவியா.!

அப்போதே பலத்த எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய இந்த கார் இறுதியாக இந்திய சந்தையில் விற்பனைக்கு வர தயாராகி விட்டது.

இதற்காக 2017 ஸ்கோடா ஆக்டேவியா காரின் அறிமுக நிகழ்ச்சி இந்தியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்மூலம் கிடைத்த இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்த பல தகவல்களை வாசகர்களுக்கு தருகிறோம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

பார்ப்பதற்கு இதுவரை இருந்து வரும் ஆக்டேவியா மாடலையே இந்த புதிய காரும் பின்பற்றி இருந்தாலும், உண்மையில் பல மாற்றங்கள் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காரின் பம்பர், ஹூடு, முகப்பு விளக்கு உட்பட முன்பக்க கிரில் என அனைத்தும் கூடுதல் டிசைன் அம்சங்களுடன் கவர்கிறது.

புதிய கட்டமைப்பு, அதே செயல்திறனுடன் 2017 ஸ்கோடா ஆக்டேவியா.!

அதேபோல காரில் இருக்கும் 16 அகல அலாய் வீல்களை தவிர பக்கவாட்டு தோற்றத்தில் 2017 ஆக்டேவியா காரில் பெரிய மாற்றமில்லை.

காரின் பின்புற விளக்கு மற்றும் முகப்பு விளக்குகளை பார்க்கும் போது மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் கார் நினைவுக்கு வருகிறது.

உட்புற வடிவமைப்பு

உட்புற வடிவமைப்பு

வெளிப்புறத்தில் பெரிய வடிவமைப்புகள் இல்லை என்பதை உணர்ந்துள்ள ஸ்கோடா, இந்த காரின் உட்புற வடிவமைப்பில் கவனிக்கத்தக்க மாற்றங்களை செய்துள்ளது.

மத்திய பகுதியில் உள்ள கன்சோல் பியானோ பிளாக் நிறத்தில் வசீகரிக்கிறது. பனரோமிக் சன்ரூஃப் மற்றும் பொருட்களை எப்போதும் ஜில்லென வைத்திருக்கும் கிளவ்பாக்ஸ் போன்றவை இதில் கவனமீர்க்கின்றன.

புதிய கட்டமைப்பு, அதே செயல்திறனுடன் 2017 ஸ்கோடா ஆக்டேவியா.!

இதன் 8 அங்குல எல்.இ.டி தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என 2 வசதிகளிலும் இயங்கும்.

2017 ஆக்டேவியா காரின் உச்சபட்ச மாடல் 10 விதமான சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு, அதை உணர்ந்து ஒளிரும் விளக்கு அமைப்பை கொண்டவையாக இருக்கும்.

எஞ்சின் மற்றும் செயல்திறன்

எஞ்சின் மற்றும் செயல்திறன்

வடிவமைப்பை தவிர கட்டமைப்புகளில் இந்த கார் பெரிய மாற்றத்தை கொண்டு இருக்கவில்லை.

காரின் எடை, செயல்திறன் பங்கீடு என அனைத்திலும் பழைய சிறம்பம்சங்கள் தான் உள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எஞ்சின் நடைமுறையிலும் 2017 ஆக்டேவியார் கார் தயாரிக்கப்பட்டுள்ளது இதற்கான சந்தையை இந்தியாவில் இன்னும் விரிவாக்கும்.

புதிய கட்டமைப்பு, அதே செயல்திறனுடன் 2017 ஸ்கோடா ஆக்டேவியா.!

1.4 லிட்டர் கொண்ட டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவர் மற்றும் 250 என்.எம் திறனை வழங்கும்.

மேலும் பெட்ரோலில் இயங்கும் 1.8 லிட்டர் திறன் கொண்ட மற்றொரு கார் மாடல் 180 பிஎச்பி பவர் மற்றும் 250 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

டீசல் வேரியண்ட் மாடலில் 2.0 லிட்டர் திறன் கொண்ட டிடிஐ எஞ்சின் உள்ளது. இது 140 பிஎச்பி பவர் மற்றும் 320 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

கியர்பாஸ்

கியர்பாஸ்

1.4 பெட்ரோல் மற்றும் 2.0 டீசல் எஞ்சின்கள் பெற்ற கார் மாடலில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. 1.8 கொண்ட மற்றொரு பெட்ரோல் மாடல் காரில் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அவசர காலத்தில் ஓட்டுநரை மற்றும் பயணிகளை காப்பாற்றும் அளவில் தானியங்கி பிரேக் அமைப்பு (ABS), மின்னணு உறுதிப்பாடு திட்டம் (ESP) உள்ளன.

மேலும் மலைபிரதேசங்களில் பயணம் செய்யும் போது அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பம் உட்பட 8 ஏர் பேகுகள் என 2017 ஆக்டேவியா காரின் கவனிக்கத்தக்க பாதுகாப்பு அம்சங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஃப்ரீ பார்க்கிங் அமைப்பு

ஸ்கோடா ஆக்டேவியா காரின் உச்சபட்ச வேரியண்ட் மாடலில் ஓட்டுநர் ஸ்டீயரிங்கை இயக்காமல், வெறும் பிரேக் மற்றும் திராட்டிலை மட்டும் கட்டுபடுத்தினால் போதும். கார் தானாக பார்க்கிங் செய்து கொள்ளும்.

இந்தியாவில் வெளியிடும் தேதி

இந்தியாவில் வெளியிடும் தேதி

நாளை (13ம் தேதி) இந்தியாவில் இந்த புதிய 2017 ஸ்கோடா ஆக்டேவியா கார் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறது. அப்போது மற்ற செயல்திறன் பற்றிய தகவல்கள் மற்றும் காரின் விலைப்பட்டியலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கட்டமைப்பு, அதே செயல்திறனுடன் 2017 ஸ்கோடா ஆக்டேவியா.!

விலையை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரிக்கு கீழ் தான் அமையும். ஆரம்ப விலை ரூ. 19 லட்சத்தில் தொடங்கி டாப் வேரியண்ட் மாடலுக்கு ரூ. 30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

புதிய கட்டமைப்பு, அதே செயல்திறனுடன் 2017 ஸ்கோடா ஆக்டேவியா.!

தற்போது வெளிவரும் மாடல்களில் ப்ரீமியம் செக்மெண்டில் டாப் காராக அடையாளப்படுத்தப்படும் 2017 ஸ்கோடா ஆக்டேவியா மீண்டும் இந்திய சந்தையை நிச்சயம் ஆக்கிரமிப்பு செய்யும் என்பது ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Read in Tamil: A day before the 2017 Skoda Octavia facelift, we bring you the list of new features. Click for Details...
Story first published: Wednesday, July 12, 2017, 11:12 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos