புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ். இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

சாதாரண ஆக்டேவியா காரின் சக்திவாய்ந்த மாடலாக இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண ஆக்டேவியா மாடலில் இருந்து, ஆக்டேவியா ஆர்எஸ் மாடலை வேறுபடுத்துவதற்காக பல கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் டிசைன் அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஆர்எஸ் மாடலுக்கான பேட்ஜ் பொருத்தப்பட்ட கருப்பு நிறத்திலான பட்டர் ஃப்ளை க்ரில் அமைப்பு முகப்பை அலங்கரிக்கிறது. பெரிய அளவிலான நடுவிலும், பக்கவாட்டிலும் ஏர்டேம்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டில் உள்ள ஏர் டேம்களில் பனி விளக்குகள் உள்ளன.

Recommended Video
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில் 17 அங்குல ஹாக் அந்த்ராசைட் என்ற பிரத்யேக அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த சக்கரங்களஇல் 225/45 ஆர்17 டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பின்புறத்தில் புதிய பம்பர் அமைப்பு, சிவப்பு வண்ணத்திலான பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் மற்றும் கருப்பு நிற டிஃபியூசர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் ஸ்பாய்லர் மற்றும் ஆர்எஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பதும் சிறப்பு சேர்க்கிறது.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

வெளிப்புறத் தோற்றம் எந்தளவு மிரட்டலான செடான் காராக மாற்றப்பட்டிருக்கிறதோ, அதே அளவு இந்த காரில் சக்திவாய்ந்த 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 227 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 6 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் 0 -100 கிமீ வேகத்தை 6.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்த காரில் பந்தய களத்தை சுற்றி வருவதை கணக்கிடுவதற்கான லேப் டைமர் வசதியும் உள்ளது.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் அராய் சான்றுபடி, லிட்டருக்கு 14.45 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 95 RON தரத்திலான பெட்ரோலில் இயங்கும். இந்த கார் முழு எடையில் 103 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும்.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில் முழுவதும் கருப்பு நிறத்திலான இன்டீரியரும், சிவப்பு வண்ண பாகங்களுடன் அலங்காரமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முன்புறத்தில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் இருக்கின்றன. அவற்றில் ஆர்எஸ் பேட்ஜ் எம்பிராய்டிங் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் அடிப்பாகம் தட்டையான ஸ்போர்ட்ஸ் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லெதர் கவர் போடப்பட்டிருக்கும் இந்த ஸ்டீயரிங் வீலில் ஆடியோ சிஸ்டத்தை கட்டுப்படுத்துவதற்கான பட்டன்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பேடில் ஷிஃப்டர்களும் ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டோர் சில் கார்டு, கியர் லிவர் உள்ளிட்டவற்றிலும் ஆர்எஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீல் பெடல்கள் இதனை ஸ்போர்ட்ஸ் கார் போன்று மாற்றியிருக்கிறது. ஆம்பியன்ட் விளக்குகளும் உண்டு.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பின்புற இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் போன்ற நவீன வசதிகளும் உள்ளன.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் முன்புறத்தில் 2 ஏர்பேக்குகள், கர்ட்டெயின் மற்றும் சைடு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், பிரேக் பேட் தேய்ந்து போவது குறித்து எச்சரிக்கும் இன்டிகேட்டர், டிராக்ஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மல்டி கொலிஷன் பிரேக்கிங் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள் என எக்கச்சக்க பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் ரூ.24.62 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த கார் மாடல் என்ற பெருமையும் இந்த கார் பெற்றிருக்கிறது. இந்த காருக்கு 4 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ தூரத்துக்கான வாரண்டியும், அவசர உதவி திட்டத்தையம் வழங்குகிறது.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Octavia RS launched in India. The new Skoda Octavia RS is priced at Rs 24,62,000 ex-showroom (pan India).
Story first published: Friday, September 1, 2017, 17:13 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos