விரைவில் வெளிவரும் ரேபிட் மாடல் காரின் புதிய மான்டோ கார்லோ எடிசன்: ஸ்கோடா புதிய அறிவிப்பு..!!

Written By:

இந்தியாவில் ரேபிட் மான்டோ கார்லோ எடிசன் மாடலை இம்மாத இறுதிக்குள் வெளியிட முடிவு செய்துள்ளதாக ஸ்கோடா இந்தியா அறிவித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களுக்காக இதே ஆகஸ்டு மாதத்தில் கார் டெலிவெரி செய்யப்படும் எனவும் ஸ்கோடா இந்தியா தெரிவித்துள்ளது.

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

இதனால் நமக்கு ரேபிட் மாடலின் புதிய எடிசனுக்கான புக்கிங் இம்மாதத்திலேயே தொடங்கும் என்பது தெரிய வருகிறது.

எனினும் எத்தனை விலை முதல் இந்த காருக்கான புக்கிங் தொடங்குகிறது என்பதற்கான அறிவிப்பை இதுவரை ஸ்கோடா வெளியிடவில்லை

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

ஸ்கோடாவின் மற்றொரு மாடலான கோடியாக் எஸ்.யூ.வி காரை இந்தியாவில் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பையும் இதனுடே அந்நிறுவனம் வெளியிட்டது.

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

மேலும் ஆக்டேவியா காரின் விஆர்எஸ் மாடலை இந்தியாவில் வெளியிடுவதற்கான தேதியையும் ஸ்கோடா அறிவித்தது.

ரெட் எக்ஸ்டீரியர் நிறுத்துடன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் கருப்பு நிறுத்தில் இருக்கும்படி ரேபிட் காரின் இந்த புதிய மான்டோ கார்லோ எடிசன் உருவாகுகிறது.

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

இந்த செடான் மாடல் காரின் முன்பக்க க்ரில் முற்றிலும் கருப்பு நிறத்தில் உள்ளது. விங் மிரர்ஸ், 16- இஞ்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் டெயில்கேட் ஸ்பாய்லர் போன்ற காருக்கான தேவைகள் கருப்பு நிறத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

உள்கட்டமைப்புகளில் ரேபிட் மான்டோ கார்லோ காரில் அலுமினியத்தால் ஆன ஸ்கஃப் பிளேட்ஸ், டாஷ்போர்ட்டில் ஃபாக்ஸ்-கார்பன் ஃபையர் ட்ரிம், மல்டி-ஃபங்கஷனை தரும் பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல்,

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

தனித்துவமான பிளோர் மேட்ஸ், சிவப்பு நிறத்தில் பொலிவுட்டப்பட்ட இருக்கை, கியர் நாப் மற்றும் அலுமினியம் ஸ்போர்ட்ஸ் பெடல்ஸ் போன்ற அழகியலான அம்சங்களுடன் காரின் உள்கட்டமைப்பு தயாராகியுள்ளது.

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

ஸ்கோடா ரேபிட் மான்டோ கார்லோ எடிசன் கார் தற்போதுள்ள மாடல்கள் போலவே 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என இரு எஞ்சின் தேவைகளில் வருகிறது.

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

ரேபிட் மான்டோ கார்லோ எடிசன் காரின் டீசல் எஞ்சின் 108.5 பிஎச்பி பவர் மற்றும் 250 என்.எம் டார்க் திறனை வழங்கும். பெட்ரோல் எஞ்சின் 103 பிஎச்பி பவர் மற்றும் 153 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

பெட்ரோல் மாடல் காரின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. டீசல் மாடலில் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

தற்போது உள்ள மாடலை விட இந்த புதிய ஸ்கோடா ரேபிட் மான்டோ கார்லோ கார் குறைந்தது ரூ.30,000 வரை விலை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

செயல்திறன் மற்றும் வடிவமைப்புகளில் இந்த கார் ஹோண்டா சிட்டி, வோக்ஸ்வேகன் வென்டா, மாருதி சியாஸ் மற்றும் 2018 ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

இந்தியாவில் விற்பனை ஆகும் செடான் மாடலில் ஸ்கோடா ரேபிட் சிறந்த விற்பனை திறனை பெற்ற மூன்றாவது மாடலாக உள்ளது.

வோக்ஸ்வேகன் வென்டோ இதற்கான போட்டியாக இருந்தாலும், 2018 வெர்னா மாடல் கார் சரிநிகர் போட்டியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ரேபிட் காரில் புதிய மான்டோ கார்லோ எடிசனை வெளியிடும் ஸ்கோடா.!

ஆனால் விற்பனைக்கு வரும் சமயத்தில் சாலை தேவைகளை பொறுத்து புதிய அம்சங்களுடன் செயல்திறனில் கூட்டினால் ஸ்கோடா ரேபிட் மான்டோ கார்லோ எடிசன் மாடலால் நிச்சயம் இந்திய சந்தையில் பெரிய விற்பனை திறனை பெற முடியும்.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Read in Tamil: Skoda Rapid Monte Carlo Edition India Launch And Booking Details Announced. Click for Details...
Story first published: Friday, August 11, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark