இந்தியாவில் ஸ்கோடா ரேபிட் மாடலின் புதிய மாண்டே கார்லோ எடிசன் கார் ரூ.10.75 லட்சம் விலையில் அறிமுகம்

Written By:

இந்தியாவில் ஸ்கோடா ரேபிட் மாடலில் புதிய மாண்டே கார்லோ எடிசன் கார் ரூ. 10.75 லட்சம் விலையில் (எக்ஸ்-ஷோரும்) அறிமுகமாகி உள்ளது.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன், இந்தியாவில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, புதிய மாருதி சியாஸ் எஸ் கார்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்கோடாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களின் பராம்பரியத்தை தனது கட்டமைப்பில் புதிய ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் கார் பெற்றிருக்கிறது.

Recommended Video
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

தற்போதைய ரேபிட் மாடலில் இருக்கும் அதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேவைகளைத்தான் இந்த புதிய எடிசன் மாடல் காரும் கொண்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இதனுடைய எஞ்சின் 103.5 பிஎச்பி பவர் மற்றும் 153 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மேலும் மாடல்களுக்கு ஏற்றவாறு காரின் எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்குகளை பெற்றிருக்கும்.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஸ்கோடாவின் ரேபிட் மாண்டே கார்லோ பெட்ரோல் எஞ்சினை பெற்ற கார் ஒரு லிட்டருக்கு 15.41 கி.மீ மைலேஜ் தரும் என கூறப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

அதேபோல அதே மாடலில் மேனுவல் கியர்பாக்ஸை கொண்ட கார் ஒரு லிட்டருக்கு அதிகப்பட்சமாக 14.8 கி.மீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

மேலும் இதே எடிசனில் டீசல் மாடல் காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 108.4 பிஎச்பி பவர் மற்றும் 250 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மாடல்களுக்கு ஏற்றவாறு காரின் டீசல் எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டு இருக்கும்.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்கோடாவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட டீசல் எஞ்சின் பெற்ற ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் கார் ஒரு லிட்டருக்கு 21.72 கி.மீ மைலேஜ் வழங்கும்.

அதேபோல மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள மாடல் ஒரு லிட்டர் எரிவாயுவிற்கு 21.13கி.மீ மைலேஜ் தரும் என ஸ்கோடா கூறியுள்ளது.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

தற்போதைய மாடலை விட இந்த புதிய மாண்டே கார்லோ எடிசன் கார் சிலபல தோற்ற மாற்றங்களை பெற்றுள்ளது. கருப்பு நிற மேற்கூரை உடன் ஃபிளாஷ் ரெட் மற்றும் கேண்டி வைட் என இருவேறு நிறங்களில் இந்த கார் கிடைக்கும்.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

ஸ்கோடாவிற்கு உரித்தான க்ரில் மற்றும் ஸ்பாய்லர்கள் இருந்தாலும், காரின் பின்பக்க அலாய் சக்கரங்களில் ஃபாக்ஸ் டிஃப்யூஸர் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

மாண்டோ கார்லோ வேரியண்டில் முழுவதும் கருப்பு நிறத்திலான உள்கட்டமைப்பில், சிவப்பு நிற டூயல்-டோன், கருப்பு நிறத்திலான லெதர் சீட்டுகள் மற்றும் சாம்பல் நிறத்திலான ஸ்டிரைப்ஸ் போன்றவை கவர்கின்றன.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

காரின் ஸ்டீயரிங் வீல் ஃபிளாட்- பாட்டமாக உள்ளது. சிவப்பு நிற தையலுடன் கூடிய காரின் கியர் ஸ்டிக் கருப்பு நிற லெதரால் தோற்றப்பொலிவை பெற்றுள்ளது.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ப்ளூடூத் உடன் கூடிய மிரர் லிங், ஆக்ஸ், யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எஸ்டி கார் போர்ட் ஆகிய அம்சங்களை பெற்றுள்ளது.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

டூயல் ஏர்பேகுகள், ஏபிஎஸ், இஎஸ்சி, ரியர் பார்க்கிங் சென்சர்கள், பகலிலும் எரியும் முகப்பு விளக்குகள், ரியர் ஏசி வெண்ட்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், கூல்டு கிளவ் பாக்ஸ், மழை வந்தால் தானாக சென்சர் ஆகும் வைபர்கள் என இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களும் கவனமீரிக்கின்றன.

ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

பல தரப்ப கட்டமைப்புகள் அம்சங்களுடன் இந்தியாவில் களம் காணும் ஸ்கோடா ரேபிட் மாண்டே கார்லோ எடிசன் கார் ஸ்போர்ட்டி தோற்றத்தில் இருப்பதால், நிச்சயம் வாடிக்கையாளர்களின் தேர்வுகளில் தவறாமல் இடம்பெறும்.

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Read in Tamil: Skoda Rapid Monte Carlo Launched in India Price,Mileage, Specifications, Images. Click for More...
Story first published: Tuesday, August 22, 2017, 14:00 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos