ஓட்டுவதற்கு உற்சாகம் தரும் டீசல் கார்... சாதகங்களும், சில பாதகங்களும்...!!

ஓட்டுவதற்கு உற்சாகத்தை வழங்குவதில் டீசல் கார்கள் மிகச் சிறந்தவையாக கருதப்படுகிறது. அதற்கான காரணங்களை இங்கே காணலாம்.

By Saravana Rajan

கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் 2,000சிசி திறனுக்கும் மேற்பட்ட டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. சில மாதங்கள் நீடித்த இந்த தடை உத்தரவு கார் மார்க்கெட்டில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியது. சில மாதங்கள் நீடித்த இந்த தடை உத்தரவு நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டாலும், டீசல் கார் வாங்கும் போக்கு வெகுவாக குறைந்தது.

பாதுகாப்பாக முதலீடு செய்யும் எண்ணத்தில் பலர் பெட்ரோல் கார்களின் பக்கம் கவனத்தை திருப்பினர். இருப்பினும், ஓட்டுவதற்கு உற்சாகத்தை தருவதில் டீசல் கார்கள்தான் சிறந்ததாக கருதப்படுகிறது. அவ்வாறு, டீசல் கார்களை ஒதுக்கிவிடக்கூடாது என்பதற்கான சில காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

உடனடி பிக்கப்

உடனடி பிக்கப்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புற பயன்பாடாகட்டும், நீண்ட தூர பயணங்களாகட்டும், ஓட்டுவதற்கு அதிக உற்சாகத்தை வழங்குவதில் டீசல் கார்கள்தான் சிறந்ததாக இருக்கும். காரணம், டார்க் எனப்படும் சிறப்பான முறுக்குவிசையை வழங்குவதுதான். பம்பர் டு பம்பர் டிராஃபிக்கில் கூட எளிதாக நகர்த்துவதற்கு டீசல் கார் மிகச் சிறந்ததாக இருப்பதை வாடிக்கையாளர்கள் தினசரி உணர்ந்திருப்பர். அவர்களிடம் ஒருநாள் பெட்ரோல் காரை கொடுத்து பார்க்கும்போது, அவர்கள் உடனடியாக அந்த வித்தியாசத்தை தெரிவிப்பது இயல்பு.

 டார்க் அதிகம்

டார்க் அதிகம்

நீண்ட தூர பயணங்களின்போது டர்போசார்ஜர் மூலமாக எஞ்சின் உத்வேகம் பெற்றுவிட்டால், டீசல் கார்களை நெடுஞ்சாலையில் விரட்டிப் பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. பவரை வெளிப்படுத்தும் திறன் குறைவாக இருந்தாலும், வண்டி நகர்வதற்கான சிறந்த டார்க் திறன் மூலமாக எளிதாக ஓவர்டேக் செய்வதற்கும் டீசல் கார்கள்தான் சிறந்தவையாக இருப்பதை பலர் உணர்ந்திருப்பர்.

நீண்ட தூரம் இயக்கலாம்

நீண்ட தூரம் இயக்கலாம்

பெட்ரோல் எஞ்சினைவிட டீசல் எஞ்சின் சூடேறுவது குறைவாக இருப்பதால் நீண்ட தூரம் இடைநில்லாமல் இயக்க முடியும். உலகின் மிகவும் பிரபலமான மோட்டார் பந்தயமான 24 ஹவர்ஸ் லீமான்ஸ் கார் பந்தயத்தில் ஆடி நிறுவனத்தின் டீசல் கார்கள்தான் தொடர்ந்து வெற்றி பெறுவதை கவனிக்க வேண்டிய விஷயம். அதாவது, நின்று அடிக்கும் திறன் வாய்ந்தது.

எரிபொருள் செலவு குறைவு

எரிபொருள் செலவு குறைவு

மாதத்திற்கு 600 கிமீ தூரத்திற்கும் அதிகமாக கார் பயன்படுத்துவோருக்கு டீசல் கார்தான் சிறந்தது. பெட்ரோலைவிட டீசலின் விலை குறைவு. அத்துடன், பெட்ரோல் காரைவிட அதிக மைலேஜ் தருகின்றன. எனவே, இவை இரட்டை பயன் தருவதால், எரிபொருள் செலவு கணிசமாக குறையும். மேலும், அடிக்கடி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று எரிபொருள் நிரப்பும் அவசியம் இருக்காது. நீண்ட தூர பயணங்களுக்கு டீசல் கார்கள்தான் சிறந்தவையாக இருக்கும்.

நீடித்த உழைப்பு

நீடித்த உழைப்பு

டாக்சி மார்க்கெட்டில் நீங்கள் கண்கூடாக கண்டிருக்க முடியும். டாக்சி மார்க்கெட்டில் பயன்படுத்தப்படும் கார்கள் 99 சதவீதம் வரை டீசல் மாடல்களாகத்தான் இருக்கும். டாக்சி கார்கள் சில ஆண்டுகளில் 3 லட்சம் முதல் 4 லட்சம் கிலோமீட்டர் தூரம் ஓட்டிவிடும். டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா ஸைலோ கார்கள் எல்லாம் 4 லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை அசால்ட்டாக ஓடுகின்றன. அந்தளவுக்கு நீடித்த உழைப்பை டீசல் கார்கள் வழங்கும். அதேநேரத்தில், சிறப்பான பராமரிப்பில் வைத்திருப்பதும் அவசியம்.

ஹைப்ரிட் சிஸ்டம்

ஹைப்ரிட் சிஸ்டம்

தற்போது மாருதி எர்டிகா, சியாஸ் உள்ளிட்ட கார்களின் டீசல் மாடலில் ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. இதன்மூலமாக, அதிக மைலேஜ், குறைவான புகையை வெளிப்படுத்தும் திறனை இந்த டீசல் எஞ்சின்கள் பெறுகின்றன. மேலும், டெல்லியில் ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண் அடிப்படையில் கார்கள் ஒன்றுவிட்டு ஒரு தினம் இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது, இந்த டீசல் ஹைப்ரிட் கார்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது நினைவு இருக்கலாம். ஸ்கார்ப்பியோவில் கூட இந்த ஹைப்ரிட் சிஸ்டம் வந்துவிட்டது. இதுபோன்று, பல டீசல் கார்கள் ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டதாக வர இருப்பதையும் கவனிக்க வேண்டிய விஷயம்.

 ரீசேல் மதிப்பு

ரீசேல் மதிப்பு

ஆரம்பத்தில் கூடுதல் முதலீடு என்பதை மறுக்கவில்லை. அதேநேரத்தில், ஓட்டுவதற்கு உற்சாகத்தை தருவதோடு, குறைவான எரிபொருள் செலவு மூலமாக நமக்கு கூடுதல் பயன் தருகின்றன. டீசல் கார்களின் ரீசேல் மதிப்பும் மிக அதிகம். அது திரும்ப விற்பனை செய்யும்போதுதான் பலரும் உணர்ந்து கொள்வது இயல்பு.

முடிவு

முடிவு

நீங்கள் 10 ஆண்டுகளுக்கு காரை மாற்றாமல் பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால், டீசல் கார் வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கலாம். ஏனெனில், 15 ஆண்டுகள் ஓடிய டீசல் கார்களுக்குத்தான் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பெட்ரோல் காரைவிட பராமரிப்பு செலவும், விலையும் அதிகம். அதிர்வுகளும் அதிகம் என்ற காரணங்களை தாண்டி, இன்றைக்கும் டீசல் கார்களை ரசிப்பவர்கள் இங்கே ஏராளம். கார் வாங்கும்போது நீங்கள் வாங்கும் மாடலில் பெட்ரோல், டீசல் என இரண்டும் விற்பனைக்கு கிடைத்தால், அதில் இரண்டையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து தீர முடிவு எடுப்பது நல்லது.

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

Most Read Articles
English summary
Here are some reasons why you should buy a Diesel car.
Story first published: Monday, January 30, 2017, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X