எதிர்பார்ப்புக்கு முன்னரே சர்வதேச சந்தையில் சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்..!!

Written By:

சுசுகி நிறுவனத்தின் 3ம் தலைமுறைக்கான ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

சுசுகி-யின் பெருமை மிகு படைப்பான ஸ்விஃப்ட் காரின் ஸ்போர்ட்ஸ் மாடல் ஃபிராங்க்ஃபூர்ட் மோட்டார் கண்காட்சிக்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

சர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ள இந்த காரைப்பற்றிய முழுத் தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

ஜெர்மனியில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச ஃபிராங்க்ஃபூர்ட் மோட்டார் கண்காட்சி ஆட்டோமொபைல் துறையில் முக்கிய நிகழ்வாகும்.

Recommended Video - Watch Now!
2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

உலகளவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல தங்களது புதிய படைப்புகளை காட்சிப்படுத்த இருந்த நிலையில்,

சுசுகி-யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் டிசைன் மாடல் அதற்கு முன்னதாக வெளியாகி உள்ளது.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

ஸ்போர்ட் தேவைகளுக்கான கட்டமைப்புகளுக்காக ஆதி முதல் அந்தம் வரை பல்வேறு மாற்றங்கள் புதிய ஸிவிஃப்ட் காரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

அதன்படி, காரின் முன்பக்கத்தில் உள்ள பம்பர், முந்தைய மாடலை விட இன்னும் மெருகேற்றப்பட்டுள்ளது. எளியமாகவும் அதேசமயத்தில் தற்போதைய டிரெண்டிற்கு ஏற்றார் போன்று அந்த பம்பர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

பம்பர் போலவே காரில் பொருத்தப்பட்டுள்ள அலாய் சக்கரங்கள் மிக நுட்பமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இத்தாலி எஸ்கியூ கொண்டதாக இந்த அலாய் சக்கரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

முன்னதாக வெளியான ஸ்விஃப்ட் கார்களில் இரண்டு கதவுகளே வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்போர்ட்ஸ் மாடலில் நான்கு கதவுகள் உள்ளது.

பழைய மாடல்களை பின்பற்றி, இந்த புதிய மாடலில் ஹேன்ட்லிங் மற்றும் பாடி கண்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

ஹார்டெக் தளம் இந்த காரில் உள்ளதால் முந்தைய மாடல்களை போலில்லாமல், புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் கார் மிகவும் எடை குறைந்ததாக இருக்கும்.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

இந்த காரின் எஞ்சின் குறித்த தகவல்கள் உறுதியாக தெரியவில்லை. எனினும் டார்போர்சார்ஜிடு பெற்ற முதல் ஸ்விஃப்ட் காராக இந்த ஸ்போர்ட்ஸ் மாடல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

மேலும் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் கசோலின் மோட்டாரும் இந்த புதிய ஸிவிஃப்ட் ஸ்போர்ட்ஸ் காரில் இருக்கலாம்.

இதே எஞ்சின் சுசுகியின் விட்டாரா பிரஸ்ஸா மாடலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

திறன் வடிவமைப்பு மற்றும் ஆற்றல் என அனைத்திலும் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கார், முந்தைய ஸிவிப்ஃட் மாடலை விட சற்று அதிக விலையில் களமிறங்குகிறது.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

ஃபோர்டு ஃபிஸ்டா, ரெனால்ட் கிளியோ மற்றும் வோக்ஸ்வேகன் உபி ஜிடிஐ மாடல்களுக்கு சந்தை நிலவரத்தை பொறுத்து போட்டியாக அமையலாம்.

சுசுகி ஸ்விஃபிட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்!

மேலும் 2017 ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் சர்வதேச சந்தைக்காகத்தான் தற்போது அறிமுகமாகியுள்ளதே தவிர, இந்திய சந்தையை பொறுத்தவரை இந்த காரை வெளியிடுவது குறித்த அறிவிப்புகளை எதுவும் சுசுகி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

மேலும்... #சுசுகி #suzuki
English summary
Read in Tamil: Suzuki Revealed Swift Sport Model Car with Turbocharger, before Frankfurt Motor Show. Click for the Details...
Story first published: Wednesday, July 26, 2017, 11:33 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark