ஹேட்ச்பேக் மாடல் கார்களுக்கு சவால் விடும் வகையில் தயாராகும் புதிய சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார்

Written By:

சுசுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் புதிய ஸ்போர்ட்ஸ் மாடல் காரை செப்டம்பரில் நடைபெறவுள்ள ஃபிராங்க்ஃபர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிட முழு வீச்சில் தயாராகி வருகிறது.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

ஏற்கனவே இந்த காரின் வெளிப்புற தோற்றம் வெளியான போது ஆட்டோமொபைல் உலகமே வாயடைத்து போனது.

தற்போது ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் காரின் உள்புற கட்டமைப்புகளுக்கான ஸ்பை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

ஸ்பை படங்களில் இருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி, புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார், இதுவரை வெளியான ஸ்விஃப்ட் மாடல் கார்களின் கட்டமைப்புகள் மற்றும் வடிவமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Full Details In Tamil - DriveSpark தமிழ்
புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

குறிப்பாக மிகுந்த கலைநயத்தோடு காரின் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

கூர்மையான வரிசையில், காரின் பம்பர் தகுந்த தேர்வோடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் முகப்பு பகுதியில் புகை படிந்த விளக்கும் மற்றும் பெரிய க்ரில்லும் வசீகரிக்கிறது.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

நிறுத்த அமைப்புக்கொண்ட விளக்குடன், இந்த ஹேட்ச்பேக் மாடலில் பின் பகுதியில் இரண்டு புகைப்போக்கி குழாய்கள் உள்ளன.

உள்புற கட்டமைப்புகளில், காரின் டாஷ் ஃபோர்டு கருப்பு நிறத்தை மையமாக வைத்து, சிவப்பு நிற அவுட் லைனோடு தயாராகியுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

டாஷ் போர்டை தாண்டி இருக்கையின் தேவை மற்றும் வடிவத்திற்கு ஏற்றவாறு சிவப்பு நிறம் ஊடாக தைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

தற்போதைய ஸ்விஃப்ட் மாடல் கார்களில் இருக்கக்கூடிய தட்டையான வடிவத்திலான ஸ்டீயரிங் வீல் தான் இந்த காரிலும் உள்ளது.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் காருக்கான பவரை வழங்கும் டர்போசார்ஜிடு எஞ்சினுக்கான வழிமுறைகள் உள்ளன.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் 4-சிலிண்டர் எஞ்சின் கொண்ட இந்த கார் 148 பிஎச்பி பவர் மற்றும் 245 என் எம் டார்க் திறனை வழங்கும்.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

6-ஸ்பீடு மேனுவல் கியர்பாஸ் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. செயல்திறன் மற்றும் வடிவமைப்பில் அனைவரையும் ஈர்த்துள்ள இந்த கார் செப்டம்பர் 12ல் வெளியிடப்படுகிறது.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

முரட்டுத்தனமான அதேசமயத்தில் பல அதிரடியான அம்சங்களுடன் சுசுகி ஸ்விப்ஃட் ஸ்போர்ட்ஸ் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

செம்படம்பரில் வெளியிடப்படும் இந்த ஹேட்ச்பேக் மாடல் கார் முதலாவதாக ஜப்பானில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் பற்றிய புதிய தகவல்கள்..!!

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் மாடல் கார் இந்தியாவில் வெளிவருமா என்பதில் குழப்பம் தான் நீடிக்கிறது. இருந்தாலும் இந்த கார் இந்தியாவில் 2018ல் டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்ஃபோவில் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்... #சுசுகி #suzuki
English summary
Read in Tamil: Suzuki is all set to debut the new Swift Sport at the Frankfurt Motor Show in September 2017. Click for Details...
Story first published: Friday, August 4, 2017, 11:00 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark