டாடா ஹெக்ஸா காரை ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி அறிமுகம்!

Written By:

இந்தியாவை சேர்ந்த முன்னணி ஆட்டொமொபைல் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கார்கள், சரக்கு வாகனங்கள், பஸ், லாரிகள் என அனைத்து வித நான்கு சக்கர வாகனங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. அதன் சமீபத்திய அறிமுகமான டாடா ஹெக்ஸா எஸ்யுவி கார்களை வாடிக்கையாளர்கள், வாங்க, டெஸ்ட் ட்ரைவ் செய்ய பிரத்யேக ஆன்லைன் வசதியை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

டாடா ஹெக்ஸா கார்கள் இனி ஆன்லைனிலும் விற்பனை!

டாடாவின் பிரத்யேக இம்பேக்ட் டிசைனில் கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது ஹெக்ஸா எஸ்யுவி கார். இக்காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் இனி ஆன்லைனிலேயே புக் செய்து கொள்ளும் வகையில் புதிய வசதியை டாடா ஏற்படுத்தியுள்ளது.

 டாடா ஹெக்ஸா கார்கள் இனி ஆன்லைனிலும் விற்பனை!

டாடாவின் துணை நிறுவனம் ‘க்ளிக்', இது ஒரு மின் வணிக இணையதளமாகும். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட க்ளிக்கில் மின்சாதன பொருட்கள், ஆடல் அனிகலன்கள், காலணிகள் என பல்வேறு பொருட்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

 டாடா ஹெக்ஸா கார்கள் இனி ஆன்லைனிலும் விற்பனை!

இந்த க்ளிக் இணையதளத்தில் தனது ஹெக்ஸா எஸ்யுவி காரை, முன்பணமாக 11,000 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது டாடா நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கு ஹெக்ஸா கார்கள் எளிமையாக சென்றடையும் வகையில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது டாடா நிறுவனம்.

 டாடா ஹெக்ஸா கார்கள் இனி ஆன்லைனிலும் விற்பனை!

இது குறித்து கருத்து தெரிவித்த டாடா க்ளிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, அஷுதோஷ் பாண்டே, "ஸ்டைல், சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறன் ஆகிய கலவையால் உருவாக்கப்பட்டதே டாடா ஹெக்ஸா கார். இப்புதிய காரை ஆன்லைனில் புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும்" என்றார்.

 டாடா ஹெக்ஸா கார்கள் இனி ஆன்லைனிலும் விற்பனை!

இதே போல, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர், விவேக் ஸ்ரீவஸ்தா இது குறித்து கூறுகையில், "இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு நாங்கள் செயல்படுவதால், இப்புதிய வசதி ஹெக்ஸா காரை இளைஞர்களிடம் எளிமையாக சென்று சேர்க்கும்" என்றார்.

 டாடா ஹெக்ஸா கார்கள் இனி ஆன்லைனிலும் விற்பனை!

டாடா ஹெக்ஸா எஸ்யுவி காரில், அடுத்த தலைமுறை 2.2 லிட்டர் வேரிகோர் 400 இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இவை அதிகபட்சமாக 153.6 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் மிக்கவை ஆகும். இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனலாகவும் கிடைக்கிறது.

 டாடா ஹெக்ஸா கார்கள் இனி ஆன்லைனிலும் விற்பனை!

டாடா ஹெக்ஸா எக்ஸ்இ, எக்ஸ் எம், எக்ஸ்டி, எக்ஸ்எம்ஏ, எக்ஸ்டிஏ மற்றும் எக்ஸ்டி 4*4 ஆகிய 6 வேரியண்டுகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.11.99 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் இருந்து தொடங்குகிறது.

டாடா ஹெக்ஸா காரின் படங்கள்: 

English summary
The Tata Hexa SUV is powered by the next-gen 2.2-litre VARICOR 400 engine that churns out 153.6bhp of power and 400Nm of torque.
Story first published: Tuesday, February 28, 2017, 10:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark